The side that is not spoken about, generally.

Alanda patchi - perumalகவுண்டர்கள் வாழ்க்கை முறை, அவர்களது வேளாண்மை குறித்த புரிதல்கள், கொங்கு மண்டல சாதி அடுக்குகள், வெகு நாட்கள் கழித்துக் கேட்கும் கொங்கு மண்டல வட்டார மொழி – இவை அனைத்தும் சேர்ந்த நல்ல படைப்பு ‘ஆளண்டாப் பட்சி’ என்னும் இந்த நாவல்.

பெருமாள் முருகன் கொங்கு மண்டல வார்த்தையாடல்களை மனக்கண் முன் கொண்டு வருகிறார். விறு விறுவென்று முன்னேறும் இந்த நாவல், குடும்பம் உடைவதால் கொங்கு மண்டல வேளாணமைக்  குடும்பத்தில் ஏற்படும் மாற்றங்களை வேகம் குறையாமல் காண்பிக்கிறது.

நான் சேலத்தில் சில ஆண்டுகள் இருந்து படித்தவன். வேளாண்மைத் தொழில் செய்யும் சில கவுண்டர் குடும்பங்களை அறிவேன். அவர்களது கடின உழைப்பை நேரில் பார்த்து வியந்திருக்கிறேன். அந்தப் பழைய நினைவுகளை இந்த நாவல் மீட்டுக் கொண்டுவந்தது.

நாவலின் பெயர்ப்பொருத்தம் அபாரம். தமிழ் மொழியின் அழகே அதன் வட்டார வழக்குகள் தான் என்பது என் எண்ணம். உங்களுக்குத் தமிழின் வட்டார வழக்குகளில் விருப்பம் இருந்தால் இந்த நாவல் உங்களை மகிழ்விக்கும்.

பெரியார் பற்றிய ஒரு பேச்சு கதைக்கு ஓடடாமல் வருகிறது. திணிக்கப்பட்ட ஒன்று என்று தெரிகிறது. போனால் போகட்டும். சாதி, ஆசிரியரின் ஆழ்மனதில் உறைந்துகிடப்பதைக் கதை முழுவதும் உணர முடிகிறது. வேறுபாடுகள் களையப்பட வேண்டும் என்பது சொல்லாமல் சொல்லப்படுகிறது. நல்ல விஷயம் தான்

பி.கு. : ஆசிரியரின் அரசியலில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் அவர் தமிழ் எழுத்தாளர் என்கிற முறையிலும், கொங்கு வடடார எழுத்தின் ஒரு பிரதிநிதி என்னும் அளவிலும் இந்த நாவலை நான் விரும்புகிறேன்.

2 responses

  1. Kanagaraj Easwaran Avatar

    கவுண்டர்கள் என்பது சாதி அல்ல பட்டம். கொங்குவேளாளர் என்று சொல்வது பொருத்தமானது. பெரியார் என்று உங்களைப்போன்ற ஸ்ரீ ராமானுஜரைப்போற்றுகின்றவர்கள் எழுதுவதும் சரியன்று. ஈவெராவைப்பெரியார் என்றால் மெய்யானப்பெரியார்களான ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ சங்கரரர், ஸ்ரீ மத்துவர்,,ஸ்ரீ நீலகண்டர், ஸ்ரீ மெய்கண்டார் போன்ற மகானுபாவர்களை அவமரியாதை செய்வதாகிவிடும்.

    Like

    1. Amaruvi Devanathan Avatar

      True. Will correct.

      Like

Leave a comment