‘சம்ஸ்கிருதத்தை விரட்டுவோம்’ என்பவர்கள் கம்பனின் இந்தப் பாடலை ஒருமுறை படிக்கவும்.
“தேவபாடையின் இக் கதை செய்தவர்
மூவர் ஆனவர் தம்முளும் முந்திய
நாவினான் உரையின்படி நான் தமிழ்ப்
பாவினால் இது உணர்த்திய பண்புஅரோ”
‘தேவ பாஷையில் மூவர் இராமனின் கதையைச் செய்தனர் ( வால்மீகி, வஸிஷட்டர், போதாயனர்). இவர்களில் முதன்மையானவராக வாழ்மீகியின் வாக்கினை நான் தமிழில் தருகிறேன்’ என்கிறார் கம்பர்.
அவர் சம்ஸ்கிருதம் அறிந்திருக்காவிடடால் இன்று கம்பராமாயணம் நமக்குக் கிடைத்திருக்குமா பெரியோர்களே. சொல்லும் முன் சற்று சிந்திக்க வேண்டாமா? கம்பன் இராமாவதாரம் செய்திருக்காவிடடால் பாரதி,
“யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
வாள்ளுவர்போல், இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை”
அது மட்டுமா கம்பன் சொன்னான்? ‘இராம காதை ஏன் எழுதினேன்’ என்பதையும் சொல்லிவிட்டான்.
“ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு
பூசை, முற்றவும் நக்குபு புக்கென,
ஆசை பற்றி அறையலுற்றேன்மற்று, இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ”
“பெரிய ஓசை உடைய பாற்கடலைக் காண்கிற பூனை அதனை முழுவதும் நக்கிக் குடித்துவிட வேண்டும் என்று விரும்புவதைப் போல, குற்றமற்ற புகழுடைய இராமனது கதையை நான் என்னுடைய ஆசையினாலே சொல்லத் துவங்குகின்றேன்”
ஆக உங்களுக்கு இங்கும் முட்டுக்கட்டை தான். தமிழைச் சரியாகப் பயின்றிருக்க வேண்டும். அல்லது பயின்றவர் யாரிடமாவது சென்று கேட்டிருக்க வேண்டும். இரண்டும் இல்லை என்றால் ‘மௌன விரதம்; இருக்கலாம் . மன்னிக்கவும். விரதம் இல்லை. நோன்பு, பேசா நோன்பு.
ஆனால் ஒன்று. நீங்கள் ஆதரிப்பது (அ) ஆதரிப்பது போல் காட்டிக்கொள்வது உருப்படுவதில்லை. உதா: இலங்கை. நீங்கள் எதிர்ப்பது வளர்கிறது. உ.தா: விநாயகர் வழிபாடு. என்ன செய்வது? ராசி அப்படி.
எனவே கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். ஒரேயடியாக சம்ஸ்கிருதத்தை எதிர்த்தால் அது வளர்ந்துவிடும். பகுத்தறிவு ராசி அப்படி.
எப்படி வசதி?