மார்க்ஸீய எழுத்தாளர் ஆ.சிவசுப்பிரமணியன் எழுதிய ‘புத்தகத்தின் பெருநிலம்’ நூலைத் தவறவிடாதீர்கள்.
‘உங்கள் நூலகம்’ என்று ஒரு இதழ் வருகிறது அல்லவா? அதில் வந்த பல நூல்களைப் பற்றிய அறிமுகக் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.
சமூகம், சமயம், சார்ந்த கட்டுரைகள் பல இருந்தாலும் எனக்குப் பிடித்தது தமிழகத்தில் நூல்கள் அச்சடிக்கப்பட்ட வரலாறு பற்றிய கட்டுரை. தமிழில் நூல்கள் வருவதற்கு உதவிய பெரியவர்கள், அவர்கள் சார்ந்த சமூகங்கள். சில பழைய எழுத்தாளர்கள், நூல்களைப் பதிப்பிக்க நம் முன்னோர் செய்த முயற்சிகள் முதலியன குறித்த செய்திகள் நம்மைப் பெருவியப்பில் ஆழ்த்துவன.
சமூகம் சார்ந்த கட்டுரையில் ‘அந்தர்ஜனம்’ என்ற நம்பூதிரி பிராம்மணப் பெண்கள் பற்றிய கட்டுரை மனதை ஏதோ செய்கிறது.
‘புத்தகத்தின் பெருநிலம்’ – நூல்களை விரும்புபவர்களுக்கு நல்ல விருந்து.