ஆந்திர கிராமத்தில் வசிக்கும் வயதான பிராம்மணத் தம்பதிகள் பற்றிய மிக உணர்வுபூர்வமான கதை.
வயோதிகத்தில் அந்தத் தம்பதிகளுக்குள் ஏற்படும் சின்னச் சின்ன சம்பாஷணைகள், பிணக்குகள், மறைந்திருந்து அவ்வப்போது வெளிப்படும் அன்பு, காதல், சில தியாகங்கள், வெளி நாட்டில் இருக்கும் தம் பிள்ளைகளையும், பேரன் பேத்திகளையும் எண்ணி பிரியத்தில் ஏங்கும் நிலை என்று கதை நீள்கிறது.
படத்தில் நான்கு பாத்திரங்கள். நாயகனும் நாயகியும் தவிர ஒரு பசுமாடும் அதன் கன்றுக்குட்டியுமே அந்தப் பாத்திரங்கள். எஸ்.பி.பியும் லக்ஷ்மியும் ந்டிப்பில் மிக உயர்ந்து நிற்கிறார்கள்.
படத்தின் முடிவு இந்தியப் பெண்களின் மகோன்னத மனநிலையை உணர்த்துவது போல் உள்ளது.
இக்காலத்தில் இப்படி ஒரு படம் வந்துள்ளது நல்ல விஷயமே. ஆனால் தமிழ் நாட்டில் வராது என்பது நிதர்ஸனம்.
மிக மிக நன்றாக இருந்தது. தெலுங்கு தெரிந்து இருந்தால் பேச்சுக்களையும் ரசித்து இருக்கலாம். நீங்கள் கூறி இருப்பது போல் தமிழில் இவ்வாறான படங்கள் வருவது இல்லை. சாராயக் கடை மற்றும் புகை மண்டலத்தில் வெட்டு குத்து என படங்கள் வருகின்றன. இப்போது படங்கள் செல்வது குறைந்து விட்டது.
நல்ல படம் பார்த்தேன். மிக்க நன்றி.
LikeLike