அறிஞர்களும் தமிழ் ஆர்வலர்களுமாக 26 பேர் வந்திருந்த ‘சங்கப்பலகை’ முதல் அமர்வு, பல சிந்திக்க வைக்கும் பேச்சுக்களுடன் சிறப்பாக நடைபெற்றது. 86 வயது இளைஞரும் தமிழ் ஆர்வலருமான திரு.ஏ.பி.ஆர் ஐயா வந்திருந்து ஆசிர்வதித்தார். திரு.செல்வம் கண்ணப்பன், திரு.புகழேந்தி முதலான ஆர்வலர்களும், விழாவில் ஆதரவாளர் திரு.பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்தது பெரும் ஊக்கம் அளித்தது. ‘நான் இராமானுசன்’ நூலின் கன்னட மொழிபெயர்ப்பாளர் ஹரிணி அவர்களும் வந்திருந்தார்.
பாவை சீயர் – மாதங்கி
பாலகாண்டம் – நவீன கவிதை – கண்ணன் சேஷாத்ரி
நாட்டுப் பசு – சசி குமார்
அதிபதி – புகழேந்தி
படிக்கவும் வீடியோ கேட்கவும் மகிழ்வாக உள்ளது. 15/20 வருடங்களுக்கு முன்பு தில்லி தமிழ் சங்கம் இது போன்று நடத்தியதையும், குருகிராமிலிருந்து (குர்கான்) 6 நண்பர்களும், பரீதாபாத், காசியாபாத் ஆகிய இடங்களிலிருந்து நண்பர்களும் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டு, இரவு 11 மணி அளவில் வீடு திரும்பிய இனிய நாட்கள் நினைவுக்கு வந்தன. வாழ்க உங்கள் பணி. மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
LikeLike