நரேந்திர மோதி என்கிற பார்ப்பனர், உர்ஜித் படேல் என்னும் பார்ப்பனருடன் இணைந்து, அருண் ஜெய்ட்லி என்னும் பார்ப்பனருக்குச் சொல்லாமல் செய்த பார்ப்பன சூழ்ச்சியால், நாட்டின் பொருளாதாரம் ரேழியில் கிடத்தப்பட்டிருக்கிறது. வாத்யாருக்குச் சொல்லியாகிவிட்டது..
இத்தனை பார்ப்பனர்கள் சேர்ந்து செய்த சூழ்ச்சியை, வை.கோ., நிதிஷ் குமார், ராமதாசு, பில் கேட்ஸ், ரஜினிகாந்த், அபிஷேக் பச்சன், சல்மான் கான், விரேந்தர் ஷேவாக், விராட் கோலி முதலான பார்ப்பனர்களும், அர்விந்த் விர்மானி, உலக வாங்கி, மூடி நிறுவனம் என்னும் பார்ப்பனர்களும், இன்ன பிற இணையப் பார்ப்பனர்களும் ஆதரிக்கிறார்கள். ஆக இது பார்ப்பன சூழ்ச்சியே என்பது உள்ளங்கை நெல்லிக்கனியென விளங்குகிறது. #demonetisation ஐ ஆதரித்த பார்ப்பனரின் நாமகரணங்கள்:
- வை.கோபாலசாமி அய்யங்கார்
- நிதிஷ் குமார் அய்யர்
- பில் கேட்ஸ் கனபாடிகள்
- உர்ஜித் படேல் சிரௌதிகள்
- சல்மான் கான் சர்மா
- ரஜினிகாந்த ராவ்
- விராட் கோலியாச்சாரியார்
- ராம தாசு சாஸ்திரிகள்
- ஷேவாக் வாஜபேய சர்மா
- அபிஷேக் பச்சனையங்கார்
11வதாக எனது பெயர் வந்திருக்க வேண்டுமே? ஏன் வரவில்லை?
LikeLiked by 1 person