ராஜாஜியைப் பற்றி சமீபமாகப் படித்துக்கொண்டிருக்கிறேன். சோ சொன்ன ஒரு செய்தி:
ராஜாஜி உடல் நலமில்லாமல் இருந்துள்ளார். இறுதிக்காலம். எம்.எஸ் மற்றும் சதாசிவம் வந்து பார்க்கின்றனர்.
‘மனசுல எதோ பாரம் இருக்கறாப்ல தெரியறதே’ – இது எம்.எஸ்.
‘ஒண்ணும் இல்லை’ ராஜாஜி.
‘சொல்லுங்க பரவாயில்ல.’
‘ஒண்ணும் இல்லை. சாகறச்சே பிள்ளைக்கு சொத்து ஒண்ணும் சேர்த்து வெக்கல. சம்பாதிச்தெல்லாம் கரைஞ்சு போச்சு’
‘அவ்ளோ தானே? எவ்வளவு வேணும் சொல்லுங்க’ இது சதாசிவம்.
‘சுமாரா ஒரு 6000 ரூபாய் இருந்தா பிள்ளைக்கு கொடுக்கலாம். இனிமே எங்க சம்பாதிக்கறது?’
‘உங்கிட்ட தான் பியட் கார் இருக்கே. அதை வித்தா 6000 சுலபமா கிடைக்கும்’
‘அது எப்படி? அது சுதந்திரா கட்சியோடதுன்னா? நீங்க கட்சிக்குக் கொடுத்ததுன்னா அது?’ ராஜாஜி.
‘காட்சியோடதா? அதை நான் உங்குக்காகன்னா கொடுத்தேன்’ சதாசிவம் சொல்கிறார்.
இப்படியாக ராஜாஜி ரூ.6000 சொத்து சேர்த்து வைத்தார். #வாழத்தெரியாதவர்கள்
Leave a reply to P.N.Badhri Cancel reply