வாழத்தெரியாத ஒருவரைப் பற்றி சோ ஒருமுறை சொன்னது:
அவர் முதல்வராக இருந்தபோது இந்தியா பங்கேற்கும் கிரிக்கெட் மாட்ச் நடந்துள்ளது. வீட்டில் அலுவலர்களுடன் அவர் அரசு அலுவல்கள் பற்றிக் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவரது பேரனோ உறவினர் பேரனோ வருகிறான்:
‘தாத்தா, கிரிக்கெட் மேட்ச் போகணும்.’
‘போயிட்டு வாயேன்’
‘இல்ல, உங்களுக்கு பாஸ் இருக்குமோனோ அதைக் குடுங்கோ. நான் போயிட்டு வரேன்’
‘காசு குடுத்து வாங்கிண்டு போ’
‘உங்ககிட்ட தான் பாஸ் இருக்கே. தாங்களேன்’
‘அது பிரீமியருக்கு வந்த பாஸ். உனக்கு வேணும்னா காசு குடுத்து டிக்கட் வாங்கிண்டு போ. நான் பணம் தரேன்.’
அந்த பிரீமியர் ராஜாஜி. #வாழத்தெரியாதவர்கள்