‘வந்துட்டேன்னு சொல்லு’ என்றார். அதை நம்பி இலங்கையில் அப்பாவிச் சகோதரர்கள் காத்திருந்தார்கள்.
‘வர மாட்டார் பா. நாங்க எத்தனை முறை பார்த்திருக்கோம்? சொல்லுவாரு ஆனா வர மாட்டாரு,’ என்றனர் நம் மக்கள். சகோதரர்கள் காத்திருந்தனர்.
‘எப்படி வருவாருன்னு நினைக்கறீங்க?’ என்றனர் நம் மக்கள்.
‘வார்த்தை தான். வருவேன்னு சொன்னாரே. அதோட ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரின்னு சொன்னாரே. நூறு வாட்டி சொன்னவரு வர மாட்டாரா என்ன?’ என்றனர் அப்பாவியாய் இலங்கை சகோதரர்கள்.
நம்மவர் சிரித்துக்கொண்டார். ‘ஏண்ணே சிரிக்கறீங்க?’ என்றார் இலங்கைச் சகோ.
‘என் வழி தனி வழின்னு சொல்லியிருப்பாரே, சொன்னாரா?’
‘ஆமாம் சொன்னார்.’
‘ஆண்டவன் சொல்றான் நான் செய்யறேன்னு சொல்லியிருப்பாரே’
‘ஆமாம் சொன்னார்.’ ஆச்சரியத்தில் இலங்கைச் சகோதரர்கள்.
‘தமிழ் நாட்டுலதான் ஆண்டவரே இல்லியே. பகுத்தறிவால அழிச்சுட்டமே தம்பி. அதால ஆண்டவன் சொல்லல. அவர் வரலை. வர மாட்டார்.’
‘ஆனா அவர் வழி தனி வழின்னு சொன்னாரே. அந்த வழில வந்திருக்கலாமே’
‘தம்பி. அது தனி வழி இல்ல. பண வழி. எந்திரன் 2.0.ஒடணுமா மாணாமா? வெளி நாட்டுல படத்தை பணம் குடுத்து வாங்கணுமா வாணாமா? அதான்.’
‘அப்ப அவரை வர வைக்க என்னதான் வழி?’
‘வால்ட் டிஸ்னிய விட்டு எந்திரன் 2.0 வாங்க வைக்கணும். அப்புறம் வியாபாரம் எல்லாம் அவங்க பார்த்துப்பாங்க. அதால இவருக்கு ஒண்ணும் பாதிப்பு இல்லை. ஒரு வேளை வந்தாலும் வரலாம்.’
‘அப்போ எல்லாமே வியாபாரமா? வீரம் அது இதுன்னு உதார் உட்டாரே அது?’
‘படம் ரிலீசுக்கு முன்னாடி எல்லாருக்கும் இந்த வீரம் வரும். அப்பத்தானே அட்டை பொம்மைக்கு பால் அபிஷேகம் பண்றத்துக்கு பைத்தியங்கள் கிடைக்கும்?’
‘அண்ணே. இவ்வளவு டிரிக்ஸ் இருக்கே. இதுக்குப் பேர் என்னண்ணே?’
‘பகுத்தறிவு (எ) பணத்தறிவு’
Leave a comment