இரண்டு மாதங்களாக ‘செய்தி உபவாசம்’ ( News Fast ) என்று இருந்துவருகிறேன். படிப்பதற்கு ஏற்ற, கொந்தளிப்பற்ற மனநிலையையும் , அதற்கான அவகாசத்தையும் இது தருகிறது என்று உணர்கிறேன்.
இந்த உபவாசக் கடட்ளையில் ஜெயமோகனின் வலை தளத்தையும் சேர்க்க வேண்டி இருக்கும் போலத் தெரிகிறது. தற்போது அவரது நேர்மை குறையும் நேரம் போல இருக்கிறது. முதலில் திரை நாயகர் ஒருவர் சார்பாக, ஒருதலைப் பட்சமாக எழுதினார். தற்போது வைணவ அடையாளங்கள் பற்றிய கட்டுரை குறித்து.
சாதி மேட்டிமைவாதம் என்று சொல்கிறார். வேதாந்த தேசிகனின் ‘ஆஹார நியமம்’ வழி நடப்பவர்கள் பலர் இன்றும் உள்ளனர். ‘ஆசாரக் கோவை’ என்னும் பொது சுகாதாரத்தை வலியுறுத்தும் தமிழ் நூல் சொல்லும் விதிகள் கடுமையானவை தான். இவை வழிகாட்டிகள். தொழில் சார்ந்த, மரபுகள் சார்ந்த ஆசாரங்கள்.
விமானம் ஓட்டுபவர் இன்ன உடையில் இருக்க வேண்டும், மது அருந்தியிருக்கக் கூடாது, போதைப் பொருட்களை உட்க்கொண்டிருக்கக் கூடாது என்பது விதி. அத்தனையும் ஆசார விதிகள், அவற்றைப் புறந்தள்ள வேண்டும் என்று சொல்லலாமா? கைலி கட்டிக்கொண்டு பிளேன் ஓட்டுவது தவறு என்று ஒருவர் எழுதினால் அதை ‘பைலட்களின் சாதி மேட்டிமைவாதம்’ என்று சொல்லலாமா?
மின்னியல் சோதனைச் சாலையில் மாணவர்கள் ரப்பர் ஷூ அணிந்து தான் வர வேண்டும் என்பது ஆதாரவிதி. பெண்கள் தங்கள் ஜடையை சோதனைச் சாலைக்கான மேற் சட்டைக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதும் விதியே. பாதுகாப்புக் காரணங்களுக்காக அவ்வாறு உண்டு. இதை மின்னியல் துறையினரின் சாதி மேட்டிமை வாதம், பெண் அடக்குமுறை என்று சொல்லலாமா?
அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர் மது அருந்தியிருத்தல் கூடாது என்கிற விதி இருக்கலாம். அதுவும் தவறு என்று கொள்வதா? மருத்துவர்களின் சாதி மேட்டிமைத்தனம் என்று கொள்வதா?
வைதீகர்கள் என்று தங்களை அடையாளப் படுத்திக் கொள்பவர்கள் இப்படி இருந்தார்கள் என்றும், இன்று அப்படி இல்லையே என்று அங்கலாய்ப்பதாக அந்தக் கட்டுரையில் வரும். இதில் தவறென்ன இருக்கிறது? அர்ச்சகர் வீதியில் நின்று புகைபிடித்தவாறே அபிஷேகம் செய்வதுதான் சாதி மேட்டிமைத்தனம் இல்லாத செயலா?
இப்படி எழுதுவது என்னமாதிரியான அறம் என்று தெரியவில்லை.
அண்மையக் கால அதி வேக நவீன மாற்றங்கள்/முன்னேற்றங்கள் நம் கடந்த கால
பாரம்பரியங்களுக்குப் பல கோணங்களில் ‘வேட்டு’ வைத்து வருகின்றன என்பதை மறுப்பவர்களுக்கு நம் அனுதாபங்கள் தாம்! ஆனால் இதற்கெல்லாம் முரண்பாடான கருத்துக்களைக் கூறுபவர்களுக்கும் இறுதி முடிவு தெரிவதில்லை.ஜெயமோகன் போன்ற எழுதது வியாபாரிகளின் தூவல்களை ரசிக்க நிறைய இருக்கிறார்கள். நானும்
கூடத்தான்.படிப்பதனால் நாம் கெடுவதே இல்லை.உங்கள் கருத்தை ஏற்காதவர்களும் உங்கள் கருத்தை விரும்பிப் படிப்பார்கள். ஆனாலும் நீங்கள் இந்த அளவுக்கு அலட்டிக் கொள்ள
வேண்டியதில்லை. ஆனால் வாதம்.நன்று.பாராட்டு. நன்றி ஆமருவி.– ஏ.பி.ஆர்..
LikeLike
Thank you sir
LikeLike