‘இன்னொவேஷன்’ என்னும் சொல் இன்று படாத பாடுபடுகிறது. ஆனால் 80களிலேயே இன்னவேஷன் செய்ததைப் பகிர்கிறேன்.
1985ல் நெய்வேலியில் சைவர்கள் சிலர் சேர்ந்து நடராசர் கோவில் கட்டினார்கள். வெள்ளைவெளேரென்று சலவைக்கல் கொண்டு அலங்கரிக்கப்பட்டு, அதுவரை பார்த்திராத வகையில் அமைக்கப்பட்டது கோவில். ஏதோ ஆடிட்டோரியம் போல் இருக்கும் அக்கோவிலுக்குள் பளபளவென்று மின்னும் நடராஜர் கருணை மழை பொழிவார். ஆனால் நாங்கள் அங்கு போவதில்லை. போனாலும் போனதாக வெளியில் சொல்லிக் கொள்வதில்லை. இரண்டு காரணங்கள்.
- ஐயங்கார், சைவக் கோவில் பிரச்சினை.
- போனால் நடராஜர் மேல் சொல்வதற்கு சுலோகம் எதுவும் தெரியாது.
சிலமுறைகள் அங்கு சென்று பல்லாண்டுப் பாசுரம் பாடிய நினைவு உண்டு. ‘எல்லாரும் பெருமாள் தானேடா?’ என்று என் நண்பன் கிச்சியிடம் சொல்லியிருந்தேன். ‘இரு இரு, உங்காத்துல சொல்றேன் பார்,’ என்று சிலமுறைகள் மிரட்டியுள்ளான்.
சில நாட்கள் கழித்து, நடராஜர் கோவிலுக்குப் போவதற்குத் தடையாக இருந்த இரண்டாவது காரணத்தை உடைத்தான் என் தம்பி. இங்கு தான் ‘இன்னொவேஷன்’ வருகிறது.
அவன் நடராஜர் மேல் ஒரு பாடல் எழுதினான். இதோ அந்தப் பாடல்:
“ பாலும் தெளி தேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியின் தந்தையே நீ எனக்குச்
சங்கத்தமிழ் மூன்றும் தா “
சரி, சரி. இன்னொவேஷன் இல்லை. இம்ப்ரொவைசேஷன். போதுமா?
Leave a reply to Amaruvi Devanathan Cancel reply