சங்கப்பலகை வாசகர் வட்டத்தின் 8வது அமர்வு இன்று சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நடைபெற்றது. எழுத்தாளர் மாதங்கி வரவேற்புரை வழங்க, கலைகமள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் அவர்கள் ‘தெரிந்த பாரதி, தெரியாத செய்திகள்’ என்னும் தலைப்பில் பேருரை ஆற்றினார். ஆமருவி தேவநாதன் நன்றி கூற, விழா இனிதே நிறைவுற்றது. புதிய வாசகர்கள் பலரும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் திருமதி.ஞானம் அவர்க்ளும், தினமலர் இதழாளர் திரு.புருஷோத்தமன், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் திரு.ஆண்டியப்பன் முதலியோரும் பங்கேற்றனர். 40 வாசகர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி, மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது. சில காணொளிகள்:
எழுத்தாளர் மாதங்கி அவர்கள் ஆற்றிய வரவேற்புரை.
கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் அவர்கள் ஆற்றிய ‘தெரிந்த பாரதி, தெரியாத செய்திகள்’ சிறப்புரை.