வைரமுத்துவால் ஒரு நல்லது நடந்துள்ளது. மனிதர்களை இன்னாரென்று அடையாளம் கண்டுகொள்ள முடிந்துள்ளது.
‘தமிழ் எழுத்தாளர்கள்’ என்கிற போர்வையில் உலாவரும் முற்போக்கு மாந்தர்களின் வெறுப்பு கலந்த அறியாமை வெளிவந்துள்ளது. உலகெங்கிலும் தமிழ் விருதுகள் பெறும் / வழங்கும் நபர்களின் தரமும் தெரியவந்துள்ளது.
ஆண்டாள் பாடல்களைக் கொண்டு பிழைப்பு நடத்தும் கர்னாடக சங்கீதத் துறையில் உள்ள பாடகர்களுக்கு வாய் பேச வராது என்பதும் புரிந்தது.
திரைத்துறையில் உள்ள, கிடைக்கும் போதெல்லாம் தங்களை வைஷ்ணவர்கள் என்று அடையாளப்படுத்திக்கொள்ளும், ‘ஜாம்பவான்கள்’ திடீரென்று சுண்டெலிகளாக விஸ்வரூபம் எடுத்த விந்தை நடந்தது. அதும் வாய்ப்பேச்சு வராத சுண்டெலிகளாக.
அமெரிக்காவின் பாரதி தமிழ்ச் சங்கம், மலேசியாவிலும் , இலங்கையிலும் என்று நாட்டிற்கொரு ஒரு தமிழ்ச் சங்கம் தவிர, உலகில் வேறு எந்தப் பிரதேசத்தில் இருந்தும் அமைப்பு ரீதியாக எந்தவொரு முணுமுணுப்பும் கூட இல்லாமல் இருந்தது பல அனைத்துப் போலிகளையும் அடையாளம் காட்ட உதவியது.
குழப்பி எழுதினாலும் ஜெயமோகனும், சாட்டை போல் நேரடியாக எழுதிய சாரு நிவேதிதாவும், வைரமுத்துவைக் கண்டித்து எழுதிய சுகி.சிவமும் மட்டுமே இலக்கிய / சொற்பொழிவு உலகில் வலம் வரும் பிரபலங்களில் தங்கள் கருத்தைக் கூறத் திராணியுள்ளவர்கள் என்பதையும் அறிந்துகொள்ள முடிந்தது.
வைரமுத்துவிற்கு நன்றி.
முதலில் எதிர்ப்பு தெரிவித்த சுகி.சிவம் பாராட்டுதலுக்கு உரியவர். அதே போல் ஜெயமோகனும் சாரு நிவேதிதாவும் தாங்கள் யாருக்கும் அஞ்சாது கருத்து கூற முடியும் என நிரூபித்தனர். அனைத்திற்கும் மேலாக, தினமணி பற்றி அறிய முடிந்தது.
LikeLike