ஜூலை 2016.
‘அங்கிள் நீங்க அம்மாவோட ஸ்கூல்ல படிச்சீங்களாமே. உங்க கிட்ட பேசச் சொன்னா’ தளிர் தமிழில், நிறைய ஆங்கிலம், கொஞ்சம் தமிழ் என்று மத்தியக் கிழக்கு மாணவன் அழைத்தான்.
‘சொல்லுப்பா. SATல செம மார்க்காமே? கங்கிராட்ஸ்’
‘இல்ல மாமா. கொஞ்சம் கொறைஞ்சு போச்சு. 2340 / 2400. இந்த வருஷம் DASAல கிடைக்கறது கஷ்டம் தான்’
‘DASAல எந்த காலேஜ் கேக்கற?’
‘Top 2 NITsல மெக்கானிக்கல் வேணும்.’
‘JEEல நல்ல மார்க் தானே?’
‘ஆமாம்.NIT Bhopal கெடைச்சிருக்கு.ஆனா JEE( Advanced) கொஞ்சம் கொறைஞ்சுடுத்து.அதால நல்ல IIT கெடைக்காது.’
‘ஓஹோ.அப்ப SAT வெச்சுண்டு US போலாமே’
‘கொஞ்சம் ப்ராப்ளம் இருக்கு.கேக்கறது கிடைக்காது.செலவும் கொஞ்ச்ம் அதிகம்.அதால இந்தியாதான்’
‘NRIகோட்டால அண்ணாயுனிவர்சிட்டி கிடைக்குமே.SAT நல்ல மார்க் இருக்கே?’
‘வாண்டாம் மாமா.அண்ணா வாண்டாம்.’
‘இல்லப்பா.நல்ல காலேஜ் தான்.உன்னோட ஸ்கோருக்கு மெக்கனிக்கல் கிடைக்கும்’
‘தெரியும்.But, வேண்டாம் மாமா.Not inclined towards any southern college’
‘But why?’
‘AID கிடைக்கும்னாஇப்பவேUS போயிடுவேன். Canadaல Toronto யூனில கெமிக்கல் கிடைக்கறது.ஆனாஎனக்கு IIT / Top NITல Mechanical வேணும்.அப்புறம் MSகு US போய்க்கறேன்.’
‘அது சரி.அண்ணாயூனி பத்தி என்ன?ஊருக்குப் பக்கத்துல இருக்கு.நல்லயூனி.UG முடிச்சுட்டுப் போலாமே..’
‘இல்லடா, he is not inclined towards TN. Doesn’t even want to go to NIT Trichy. Some aversion as he spent his childhood in north india and in the gulf,’ அவன் அம்மாபேசினாள்.
‘But Anna University is better than a remote NIT or a second grade IIT. Don’t you think so?’ பேசிப் பார்த்தேன்.
‘That you and I say.நாம படிச்ச காலத்துல அப்பிடி இருந்தது.ஆனா the university doesn’t even figure among his cohorts’ என்றாள்.
9ம் வகுப்பில் இருந்து JEEக்காகப் படித்து வருகிறவன் தான் கேட்ட IIT கிடைக்கவில்லையென்பதால் தலைசிறந்த NITல் சேர்ந்துவிட்டான் . அப்போது எனக்கு வருத்தம் தான்.
சமீபமாக,அந்தப் பையன் எடுத்த முடிவு சரியானதுதான் என்று தோன்றுகிறது.
பி.கு.:DASA – Direct Admission for Students Abroad – SAT என்னும் உலகளாவிய தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை.
CBSE மாணவர்கள் பெரும்பாலும் SAT, JEE என்று பலவற்றையும் எழுதுகிறார்கள்.சிலர் +1படிக்கும் போதேSAT எழுதி,+2 முடித்தவுடன் சிங்கப்பூர்,ஆஸ்திரேலியா,அமெரிக்கா என்று செல்கிறார்கள். உலகின் சில பல்கலைகள் JEEயைஅங்கீகரிக்கின்றன. தமிழக மாணவர்கள் இத்தேர்வுகளையெல்லாம் எழுத வேண்டும்.நல்ல நிலையை அடைய வேண்டும். ஓம்.
பையன் பேசியது ஓரளவு சரியே சார். அண்ணா இப்போது பேர் கெட்டு JNU அளவுக்கு நாறி கிடக்கிறது. NIT/Trichy நல்ல காலேஜ் தான் ஆனால் பையனுக்கு தெரியவில்லை.
LikeLike
ஆமாம் சார். நானும் பேசிப் பார்த்தேன். தமிழ் நாடே வேண்டாம் என்றான். அவனுடன் படிக்கும் மாணவர்களும் திருச்சியைத் தேர்ந்தெடுக்கவில்லை. ஒரு எதிர்மறை உணர்வு தென்படுகிறது. நல்லதற்கில்லை.
LikeLike