மாணவர்களே, பிரதமர் மோதியின் இந்தோனேசியப் பயணம் பற்றிப் பார்க்கலாம்.
இந்தியாவிலிருந்து இந்தோனோசியா வெறும் 350 கி.மீ.தான் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். நிக்கோபார் தீவிலிருந்து சுமத்ரா தீவின் சபாங் துறைமுகம் வெறும் 350 கி.மீ. தூரமே.
1950ல் இந்தியா குடியரசானது. அப்போது குடியரசு தின விழாவில் இந்தோனேசியப் பிரதமர் சுகர்னோ சிறப்பு விருந்தினராகப் பங்கு பெற்றார். நேரு, சுகர்னோ இருவரும் சேர்ந்து இந்தோனோசியாவில் பாண்டுங் மாநாடு நடத்தினர். பாரதத்திற்கும் இந்தோனோசியாவிற்குமான உறவு ஆயிரம் ஆண்டுகள் பழையது. ஒதிஷா மாநிலம் இந்தோநேசியாவுடன் 1000 ஆண்டுகால வர்த்தகத் தொடர்புடையது. இன்றும் ஒதிஷாவில் மகாநதிக் கரையில் ‘பாலி யாத்ரா’ என்னும் திருவிழா நடக்கிறது. பாலி இந்தொனேஷியாவின் ஒரு தீவு.
‘சாகர் மாலா’ என்னும் திட்டம் பற்றி உனக்குத் தெரிந்திருக்கலாம். SAGAR (Security and Growth for All) – பாரதத்தின் மிக முக்கிய திட்டம். அரபிக் கடல், இந்தியப் பெருங்கடல், வங்காளவிரிகுடா, மலாக்கா பிரதேசம் என்று விரியும் இத்திட்டம் கடல் வழிப் போக்குவரத்திற்கு மிக அத்தியாவசியமான ஒன்று. சமீபத்தில் ஈரான் நாட்டில் மோதி அவர்கள் சபர் துறைமுகத்தைத் திறந்து வைத்தது நினைவிருக்கலாம். அங்கு தொடங்கி, மலாக்கா வரையிலான எண்ணெய், கச்சாப் பொருட்களுக்கான கடல் வழி விரைவுச் சாலை அமைக்கும் முன்னோக்குத் திட்டமே அது. அதில் இந்தோநேசியாவின் சபாங் துறைமுகமும் அடக்கம்.
தற்போதைய வருகையில் சபாங் துறைமுகத்தில் ( 40 மீட்டர் ஆழம் கொண்டது) இந்தியா சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கவும், கடல் வழிப் போக்குவரத்தை அதிகரிக்கவும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதனால் சீனாவின் OBOR – One Belt One Road – முயற்சிக்கு எதிரான (அ) ஒப்பான வணிகப் பாதை அமைக்கும் முயற்சியில் இது நல்லதொரு முன்னெடுப்பு.
அத்துடன் சபாங் துறைமுகத்தில் இந்திய கடற்படைப் போக்குவரத்திற்கும் வசதிகள் பெருகவுள்ளன. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இந்தியாவின் விமான,கடல் படைத் தளங்கள் இருப்பது, அதற்கு அருகில் உள்ள சபாங் துறைமுகம் வேறு பக்கம் விழாமல் இருக்கவும் இது முக்கிய முன் முயற்சி.
இந்தோநேசியப் பிரதமர் ஜொகோ விதோதோவின் Indian Ocean Rim Association என்னும் கடப்பாட்டிற்கும் இந்தியாவின் உதவி கிடைக்கும் விதமாக இம்முறை பிரதமர் மோதியின் வருகை அமைந்துள்ளது. முன்னர் ஜோகோ விதோதோ 2016லும், 2018லும் இந்தியா வந்திருந்தார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். 1995ல் இந்தோனேசியா இந்தியக் கடற்படையின் MILAN என்னும் சேர்ந்து பணியாற்றும் நிகழ்விலும், 2002ல் CORPAT என்னும் ராணுவப் பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளது நினைவில் கொள்ளத்தக்கது.
இந்தோநேசியாவுடனான இந்திய வர்த்தக மதிப்பை 2025ற்குள் 50 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்துவதற்கான 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ராணுவ ஒப்பந்தங்கள் பற்றிய முழு விபரங்கள் பாதுகாப்பு காரணமாக வெளியிடப் படவில்லை என்று அறிகிறேன்.
தென் சீனப் பகுதியில் சீனாவின் அச்சுறுத்தலைச் சமாளிக்கவும், அமெரிக்கா கிழக்காசியாவில் இருந்து சிறிது சிறிதாக வெளியேறுவதால் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும் இந்தியா ஆசியான்(ASEAN) என்னும் அமைப்புடன் இணைந்து பணியாற்றுவதை உறுதிப்படுதுதும் விதமாகப் பிரதமரின் வருகை அமைந்திருந்தது.
இந்தியப் பிரதமரும், இந்தோநேசியப் பிரதமரும் மிக எளிமையான பின்புலம் உடையவர்கள் என்பது உற்று நோக்கத்தக்கது. இரு நாடுகளும் காலனீய ஆட்சிகளின் கோரப்பிடியில் சிக்கிச் சீரழிந்தவை என்பதும் ஒரு ஒற்றுமை.
சார், அங்கோர்வாட் ஆலயம் என்பது அங்கு உள்ளதாகவும், அதுவும் இந்திய தொடர்பை உறுதி செய்வதாக படித்தேன். நீங்கள் ஒரிசா மட்டும் குறிப்பிட்டதால் இப்போது சிறிது குழப்பம் அடைகிறேன். விளக்கினால் நன்றியுடையவன் ஆவேன்
LikeLike
Sir, Ankorwat is in Cambodia not in Indonesia.
LikeLike