‘நீங்க எழுதினது நல்ல ரீச் இருக்கு. 20காலாவது வந்திருக்கும். நான் பண்றேன், பணம் தரேன்,கோவில சுத்தப்படுத்தறேன்னு எவ்ளோபேர் போன் பண்ணினாங்க. நான் சின்னதா கோசாலை அமைக்கறேன். ஒரு கன்னுக்குட்டிக்கு 4000 ஆகும். எனக்கு அந்த புண்ணியம் வரட்டும்,’ ‘முடிஞ்ச போது நான் போய் பிரபந்தம் சொல்லிட்டு வரேன்,’ ‘மாசம் நான் ஒரு ஆயிரம் ரூபாய அர்ச்சகருக்கு அனுப்பறேன்,’ இப்படி சுமார் 20கால். உங்கள் கட்டுரை பெரிய அளவுல போய் விட்டிருக்கு,’என்று நன்றி பெருகச் சொன்னார் பாலாஜி.
நண்பர்கள் வட்டத்தில் பூரண கைங்கர்யம் ஒன்றே தனது வேலையென்பதிலும்,’ஊருக்குப் போய் கைங்கர்யம் ஆரம்பிக்கணும்,படிச்சதெல்லாம் வீணாப்போயிண்டிருக்கு’ என்று அடிக்கடிசொல்லும் பாலாஜி, ஆ..பக்கங்களின் கட்டுரையைத் தூக்கிப் பேசினார்.
‘கட்டுரையோட பலம், அது இதுன்னு ஒண்ணும் இல்லைசார். உடையவர் தன் வேலைய நடத்திக்கறார். சும்மா சொல்லல. புஸ்தகம் எழுதினப்பவும் இப்படித்தான். அது தானா நடந்தது. இப்ப ஆஸ்திகாள் மனசுல உடையவர் புகுந்துண்டு பெருமாள் வேலைய நடத்தச் சொல்றார். நீங்க, நான், எல்லாம் கருவி. அணில் கூட இல்ல. அணில் உடம்புல ஒரு தூசி,’ என்றேன்.
தமிழ் நாட்டில் இருந்து ஆன்மீகத்தைப் பிரிக்க யாராலும் முடியாது. ஒரு சிலையை உடைக்கப் போக அது ஊர் முழுக்க ஆனது. கறுப்பைப் போட்டுக் கொண்டு நாஸ்திகம் பேச, அது ஊர் முழுக்க கறுப்பு கட்டிக்கொண்டு சபரிமலைக்குப் போவது என்றானது. சிவப்பும் அப்படியே. மேல்மருவத்தூர்.
‘உடல் மீது உயிர் வந்து ஒன்றுவது இயல்பே’என்பது தமிழிலக்கணம். இவ்விடத்தில் உடல் தமிழ்நாடு. உயிர் ஆன்மிகம். ஆன்மிகம் கரைபுரண்டு ஓடும் வரை நாடு உயிர்ப்புடன் இருக்கும்.
தமிழகத்தைப் பற்றிக் கவலைஇல்லை.ஆன்மீகம் காப்பாற்றும்.அது மட்டுமே காப்பாற்றும்.
இராமானுசர் கட்டிய கோவில்
கட்டுரை இங்கே.
