உத்தராயணச் சிந்தனைகள்

இந்திய தேசியச் சிந்தனையாளர்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள். நெடிய பதிவு.பொறுத்தருள்க.

இந்திய தேசியச் சிந்தனையாளர்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள். நெடிய பதிவு.பொறுத்தருள்க.
 
சிங்கப்புரின் தந்தை அமரர் லீகுவான்யூ அவர்கள் ராஹுல் காந்தியிடம், ‘உன்னைச் சுற்றி உன்னைவிட அறிவுடையவர்களைக் கொண்டிரு’ என்று அறிவுறுத்தியிருந்ததாக ‘India Rising’ நூலையெழுதியவரும் Straits Times இதழின் இணைஆசிரியருமான ரவி வெள்ளுர் சொல்கிறார்.
 
ராகுல் காந்தி  அதைக் கேட்கவில்லையென்று தோன்றுகிறது.  இல்லையென்றால் துபாயில் இப்படிப் பேசியிருக்க மாட்டார்.
 
‘காந்தியடிகள் தான் அஹிம்சை முறையைக் கற்றுக் கொண்டது இஸ்லாம்,கிறித்தவம்,யூதம் முதலிய இந்தியத் தத்துவங்களில்   இருந்தே..’ 
 
தகவல் பிழைகள் இருக்கலாம்.ஆனால் அடிப்படையான பண்பாட்டு அறிவு சற்றும் அற்ற ஒருவரே இப்படி ஒரு பேச்சு எழுதிக்கொடுத்திருக்க முடியும்.
 
பவுத்தம்,ஜைனம் இவையெல்லாம் பாரதத்தில் தோன்றிய தரிசனங்கள் இல்லை. அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதியானவையாக இருக்கலாம். திருக்குறளில் ‘கொல்லாமை’ என்னும் அதிகாரம் இல்லை.. .என்பதால் அப்படி எழுதிக் கொடுத்துவிட்டார்கள் போல.
 
‘வைஷ்ணவ ஜனதோதேனேகஹியே’ என்ற காந்தியடிகளின் பிரியமான பாட்டெழுதிய பதினைந்தாம் நூற்றாண்டு நரஸி மேத்தா
பாரஸீகக் கவிஞ்ரோ என்று தில்லி ஜவஹர்லால் பல்கலையில் விசாரித்துப் பார்க்க வேண்டுமோ என்னவோ. இந்தப் பாடலில் இருந்து அவர் அஹிம்சையைக் கற்றுக் கொள்ளவில்லை என்று நினைத்துவிட்டார்கள் போல..
காங்கிரஸ் கட்சி அழிய வேண்டும் என்று நான் விரும்பவில்லை.தேசியக் கட்சிகள் அழிவது நல்லதன்று.ஆனால், ராஹுல் காந்தி இம்மாதிரி பிதற்றிக் கொண்டிருந்தால் அது நடந்துவிடும் போல் தோன்றுகிறது. தேர்தல் வெற்றிகள் ஒரு பொருட்டல்ல.
 
காங்கிரஸ் கட்சியில் படித்தவர்கள் சேர வேண்டும். இந்தியப் பண்பாடுகளில் ஊறியவர்கள் காங்கிரஸிலும் சென்று சேர வேண்டும்.ஒரு படி மேலேபோய் ‘Inflitration’ கூட பண்ண வேண்டும் என்று சொல்வேன்.ஒரேயடியாக JNUவாசிகள்,Doon Schoolவாசிகள் அதிகரித்துவிட்டதால் காங்கிரஸ் கட்சிக்கும் ஒரு நாலாந்தர லெட்டர் பேட் கட்சிக்கும் வேறுபாடு தெரியாமல் போய்விட்டது.
இந்திய தேசிய சிந்தனாவாதிகள் காங்கிரசிற்குள் நுழைய வேண்டும். 1948 காங்கிரஸ் செயற்குழுவில் வல்லபாய் படேல் இதை வலியுறுத்துகிறார். RSS அங்கத்தினர்கள் காங்கிரஸில் சேர வேண்டும் என்கிறார் படேல்.  
 
அவர் சொல்கிறார் “In the Congress, those who are in power feel that by virtue of authority they will be able to crush the RSS. You cannot crush an organisation by using the danda [stick]. The danda is meant for thieves and dacoits. They are patriots who love their country. Only their trend of thought is diverted. They are to be won over by Congressmen with love.”
அவர் மேலும் சொல்வது “the only way for them(RSS) is to reform the Congress from within, if they think the Congress is going on the wrong path.”
 ஆனால் பண்டித நேருவின் முயற்சியால் இது வெற்றி பெறவில்லை.  பின்னர் இந்திய தேசியச் சிந்தனையாளர்களும், காங்கிரசும் இரு வேறு துருவங்களில் பயணித்தன. விளைவு : இன்று நம்மிடையே இருக்கும் இந்திய தேசிய காங்கிரஸின் எச்சம்.
 
காங்கிரஸ் கட்சி என்றாலே ஏதோ பிரிவினைவாதக் கட்சி போன்ற தோற்றத்தை ஏற்படுத்த அதன் தமிழகத் தலைவர்கள் முயல்கிறார்கள் அல்லது பிரிவினை வாதிகளுடன் கூட்டுச் சேர்கிறார்கள். ஆ.ராஜா, ஸ்டாலின் இருவரும் பிரிவினையை ஆதரித்துச் சமீபத்தில் கூட
 பேசியுள்ளனர். அதே வேகத்தில் தில்லியின் காங்கிரஸ் கட்சித் தலைமையிடமும் கூட்டணி பற்றிப் பேசுகின்றனர்.
மத்தியத் தலைமைக்கு ஒத்து ஊதும் தலைவர்களாகத் தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் உள்ளனர் என்பது புதிய தகவல் அன்று தான். ஆனால், உயர் பல்கலைகளில் உள்ள தேசியச் சிந்தனை உள்ள மாணாக்கர், பா.ஜ.க. பற்றிய நல்ல எண்ணம் கொண்டுள்ளது போல், காங்கிரஸ் பற்றியும் நல்லெண்ணம் கொள்ளுமளவிற்கு நல்லவர்கள் அக்கட்சியில் சேர வேண்டும்.  அப்போது தான் ராஹுல் காந்திக்கு நல்ல பேச்சு-எழுதுபவர்கள் கிடைப்பார்கள்.
காங்கிரஸ் கட்சி காப்பாற்றப் பட வேண்டும். தேச ஒற்றுமைக்காகக் குரல் கொடுக்கும் கட்சிகள்,அமைப்புகள் காப்பாற்றப் பட வேண்டும். அது பாரத தேசத்திற்குச் செய்யும் சேவை. நாசகாரக் கம்யூனிஸ்டுகள், மக்களின் சாதீய உணர்ச்சிகளைத் தூண்டி அவற்றில் குளிர் காயும் புலிப் பணக் கட்சிகள், சினிமா நடிகர்களின் அமைப்புகள் என்பன தேசத்திற்கு நன்மை செய்ய வந்தவையன்று. 
 
சபரிமலை விஷயத்தில் பா.ஜ.க., காங்கிரஸ் இரண்டும் இறுதியாகக் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கருத்தைக் கொண்டுள்ளன. காங்கிரஸின் இந்த நிலை  தேசத்தின் பண்பாட்டின் மீதுள்ள பக்தியால் ஏற்பட்ட விளைவு என்று எண்ணும் அளவிற்கு நான் அசடன் அல்லன்.
ஆனால், இரு கட்சிகளுமே பண்பாடு சார்ந்த ஒற்றுமையக் காக்கும் விஷயங்களில் ஒரே நிலைப்பாடு எடுக்க வேண்டும். அதற்குத் தேசியத்திலும், நமது பண்பாட்டுக் கூறுகளிலும் தேர்ச்சியும் நம்பிக்கையும் பெற்ற ஊழியர்கள் / தொண்டர்கள் / தலைவர்கள் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைக்க வேண்டும்.
ஒற்றை வரியில் சொல்வதானால் : ஆண்டாள் பற்றி ஒரு மன நலம் குன்றியவர் பேசிய போது முதலில் வீதிக்கு வந்து போராடுபவர்களாக, ஆண்டாளுக்காகக் குரல் கொடுப்பவர்களாகக் காங்கிரஸார் இருக்க வேண்டும். தற்போது Utopia போல் தோன்றலாம். ஆனால் பக்தவத்சலம் / காமராஜ் / ராஜாஜி முதலானோரின் ஆட்சிக் காலத்தில் இருந்த காங்கிரஸ் இவ்வாறு செய்திருக்கும் என்று நினைக்கிறேன்.
சுருக்கமாக: வல்லபாய் படேலின் கனவு நனவாக வேண்டும்.
வலுவான பா.ஜ.க., அதற்கு ஈடு கொடுக்கும் அளவில் அதே பலம் பொருந்திய,  தேசியச் சிந்தனை கொண்டவர்கள் உள்ள காங்கிரஸ் என்று இரு தூண்களின் மேல் பாரதம் உயர்ந்து நிற்க வேண்டும்.
 
வந்தேமாதரம்.
 
பி.கு.: இது தேச நலன் தொடர்பான பதிவு. கட்சிச் சார்பு / சாய்வு எதுவும் இல்லாமல் படிக்கவும். கிண்டல் / நக்கல் செய்பவர்கள் வேறு பாத்திரக் கடைக்குப் போகலாம்.

Author: Amaruvi's Aphorisms

Banker by day, blogger by night and a reader throughout.

2 thoughts on “உத்தராயணச் சிந்தனைகள்”

  1. Very sane advice. But will Congress listen? Rahul Gandhi proves his ignorance again and again or it is a gimmick, in the present instance, to please the Muslims.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: