ஐ.டி. ஊழியர்கள் / மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய உலக / பொருளாதார நடப்புகள்

ஐ.டி.ஊழியர்கள் பற்றிய பதிவிற்கு வாசகர் ஒருவர் கேட்டுள்ள கேள்வி: தமிழக ஐ.டி.ஊழியர்கள் / மாணவர்கள் உலக நடப்புகள் பற்றி என்னென்ன தெரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்லுங்களேன். அவர்கள் கண்களில் படாத நடப்புகள் யாவை? ஊடகங்கள், குறிப்பாகத் தமிழ் ஊடகங்களில் வராத செய்திகள் யாவை? இவற்றுக்கும் சி ஜின் பிங் வருகைக்கும் என்ன தொடர்பு?

ஐ.டி.ஊழியர்கள் பற்றிய பதிவிற்கு வாசகர் ஒருவர் கேட்டுள்ள கேள்வி: தமிழக ஐ.டி.ஊழியர்கள் / மாணவர்கள் உலக நடப்புகள் பற்றி என்னென்ன தெரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்லுங்களேன். அவர்கள் கண்களில் படாத நடப்புகள் யாவை? ஊடகங்கள், குறிப்பாகத் தமிழ் ஊடகங்களில் வராத செய்திகள் யாவை? இவற்றுக்கும் சி ஜின் பிங் வருகைக்கும் என்ன தொடர்பு?
எனது பதில்: எனது மாநில ஐ.டி. ஊழியர்கள், மாணவர்கள் இவற்றைப்பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும். நான் புள்ளி மட்டுமே வைத்திருக்கிறேன். கோலம் அவர்கள் போட்டுக்கொள்ள வேண்டும். மேலும் விளக்கலாமே என்று கேட்கலாம். பயனில்லை என்று தோன்றுகிறது. தேடித் தின்றாலே சுவை. இதைப்பற்றிப் பல தமிழக நண்பர்கள் குழாங்களில் பேசியிருக்கிறேன். 5-10 மணித்துளிகளுக்குப் பிறகு யாரும் தாக்குப்பிடிப்பதில்லை. உடனே ‘இதனால் தமிழ் நாட்டுக்கு என்ன பலன்?’ என்று கேட்பார்கள், அல்லது ‘ஹிந்தி’ என்று ஜல்லியடிப்பார்கள். தற்போது இவைபற்றியெல்லாம் வாய் திறப்பதில்லை. ஆனால், மாணவர்கள், ஆரம்ப நிலையில் உள்ள ஐ.டி. ஊழியர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். ஏனெனில் இவர்களே நாளைய பாரதம்.
பின்வரும் கேள்விகளுக்கு விடை நேராகக் கிடைக்காது. கொஞ்சம் ஆராய வேண்டும். ஆர்வம் இருப்பவர்கள் மேற்கொண்டு ஆராயலாம்.
  1. க்வடார்(Gwadar) துறைமுகம், சபார்(Chahabar) துறைமுகம்.  இவை எங்கு உள்ளன. இவற்றைக் கட்டமைக்கப் பங்கு கொண்ட நாடுகள் யாவை? ஏன்?
  2. String of Pearls என்றால் என்ன? இதனால் யாருக்கு லாபம்? இந்தியா செய்ய வேண்டியது என்ன? செய்கிறதா? யார் செய்கிறார்கள்?
  3. String of Pearls ற்கும் Sagarmala திட்டத்திற்கும் என்ன தொடர்பு? சாகர்மாலா வருவதால் எந்த நாடுகளுக்கு பாதிப்பு? யாருக்குப் பலன்? எந்த நாடுகள் எதிர்க்கின்றன? இந்தியாவில் யாரெல்லாம் எதிர்க்கிறார்கள்? அவர்களுக்கும் எதிர்க்கும் வெளி நாடுகளுக்கும் உள்ள தொடர்புகள் யாவை?
  4. CPEC – China Pakistan Economic Corridor என்பது யாது? அது பாரதத்திற்கு ஏன் எதிரானது? இதற்கும் PoK விற்கும் என்ன தொடர்பு? CPECஐ நாம் ஆதரித்தால் விளைவுகள் யாவை?
  5. BRI – Belt and Roads Initiative என்பது என்ன? யருக்குப் பலன்? இதை ஏன் முன்னிறுத்துகிறார்கள்? இதற்கும் சாகர்மாலா திட்டத்திற்கும் உள்ள தொடர்பென்ன? சாகர்மாலா திட்டத்தை எதிர்ப்பவர்கள் BRI பற்றி வாய் திறக்கிறார்களா? ஏன்?
  6.  ஆப்பிரிக்க மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் சீன முதலீடுகள் சில நூறு மடங்குகள் அதிகரித்துள்ளனவே. ஏன்? அந்த நாடுகளின் இன்றைய நிலை என்ன?
  7. ஆப்பிரிக்காவிலும் தென் அமெரிக்காவிலும் சீனா கட்டும் துறைமுகங்கள் யாவை? ஏன்?
  8. இலங்கையில் ஹம்பந்தோட்ட துறைமுகத்திற்கும் சீனாவிற்கும் என்ன தொடர்பு? யார் தொடர்பை ஏற்படுத்தினார்கள்? இதற்கும் சாகர்மாலா திட்ட எதிர்ப்புக்கும் என்ன தொடர்பு?
  9. சாகர்மாலா திட்டத்தை எதிர்ப்பவர்கள் எட்டுவழிச் சாலையையும் எதிர்ப்பது ஏன்? இவர்க்ள் கூடங்குளம் அணு உலைக்கும் எதிராகச் செயல்படுகிறார்களா? ஏன்? BRI விஷயத்தில் இவர்களின்  நிலை என்ன? ஏன்?
  10. தென்சீனக் கடலில் இந்தியாவிற்கு என்ன அக்கறை? தனது அக்கறையை இந்தியா எப்படியெல்லாம் வெளிப்படுத்துகிறது? ஏன்? இதற்கும் ONGC நிறுவனத்திற்கும் உள்ள தொடர்பென்ன?
  11. இந்தியா வியட்னாமிடம் தனது ப்ராமோஸ் ஏவுகணையை விற்கிறது. இது எதனால்? இதனால் அன்னியச் செலாவணி தவிர வேறென்ன லாபம்? அதென்ன வியட்னாம் மட்டும்? விற்கவில்லை என்று இந்தியா சொல்கிறதே? ஏன்?
  12. இந்தியாவிற்கும் மங்கோலியாவிற்கும் உள்ள அரசதந்திர உறவுகள் எப்படி உள்ளன? மங்கோலியாவிற்குச் சென்ற இந்திய ஜனாதிபதி யார்? பின்னர் அங்கிருந்து இந்தியா வந்த தலைவர்கள் யாவர்? என்னென்ன உடன்படிக்கைகள் ஏற்பட்டன? எல்லா நாடுகளியும் விடுத்து மங்கோலியாவில் நமக்கு என்ன அக்கறை? காரணங்கள் யாவை?
  13.   சில வாரங்களுக்கு முன்னர் இந்திய ஜனாதிபதி பெயர் அதிகம் கேள்விப்படாத நாட்டுக்குச் சென்று வந்தார். ஏன் சென்றார்? என்னென்ன ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின? என்னென்ன நிறுவனங்களின் பெயர்கள் அடிபட்டன? ஏன்?
  14. Quadrilateral Alliance என்றால் என்ன? இதில் பங்குபெற்றுள்ள நாடுகள் யாவை? இவை ஏன் பங்குபெறுகின்றன? இந்தக் கூட்டணியை ஹிந்து நாளிதழ் ஏன் எதிர்க்கிறது?
  15. 2003-4ல் Trilateral Alliance ஆக இருந்தது தற்போது Quadrilateral ஆக மாறக் காரணம் என்ன? அப்போது வாஜ்பாய்-ஷின்சோ அபே கூட்டு. இப்போது மோதி-அபே+X+Y கூட்டு ஏன்? இரண்டு கூட்டணிகளிலும் ஷின்சோ அபே இருக்கக் காரணம் என்ன? இரண்டு கூட்டு முயற்சிகளையும் பா.ஜ.க.வே செய்தது ஏன்? முந்தைய மன்மோஹன் அரசு இதில் என்ன செய்தது? ஏன்? Quadrilateral Alliance , String of Perals, BRI ஏதாவது தொடர்புள்ளதா?
  16. மன்மோஹன் சிங் பிரதமராக இருந்த போது கியூபா சென்று வந்தது ஏன்? அவ்வளவு தூரம் சென்றவர் அமெரிக்காவில் இறங்காமல் வந்தது எதனால்? யாரால்? அந்தப் பயணத்தால் நமக்கு என்ன பலன்?
  17. பிரதமர் மோதி ஓராண்டுக்கு முன்னர் இந்தோநேசியப் பயணம் மேற்கொண்டார். நிக்கோபார் தீவுக்கு அருகில் உள்ள இந்தோநேசியத் தீவில் பாரதம் என்ன கட்டுமானம் செய்கிறது? அவசியம் என்ன? இதற்கு BRI திட்டத்துடன் என்ன தொடர்பு?
  18. டோக்ளாம் பகுதியில் சீனப்படைகள் இந்தியப் படைகளுக்கு நேரெதிராக நின்ற போது நிர்மலா சீத்தாராமன் என்ன அறிக்கை வெளியிட்டார்? பின்னர் சீனப் படைகள் விலகியதன் காரணம் என்ன?
  19. ஸ்டெர்லைட் போராட்டம், கூடங்குளம் போராட்டம், மீத்தேன் போராட்டம், ஜல்லிக்கட்டுப் போராட்டம் – இவைகளுக்குள் இருக்கும் ஒற்றுமை என்ன?
  20. சீமான், வைகோ, திருமுருகன் காந்தி, வேல்முருகன் – இவர்களின் பண வரவுக்கான காரணங்கள் யாவை? இவர்களுக்கும் 19ல் கேட்டுள்ள கேள்விக்கும் உள்ள தொடர்பென்ன?
  21. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது மம்தா பானர்ஜீ, அரவிந்த் கேஜ்ரிவால், ஸ்டாலின் முதலானோர் அதிக அளவில் கூக்குரலிட்டனர். மம்தாவும் கேஜ்ரிவாலும் உச்ச ஸ்தாயியில் கத்தினர். ஏன்? பின்னர் தற்போது கேஜ்ரிவால் அமைதிகாக்கிறார். என்ன காரணம்?
  22. 1-19 வரையிலானவற்றைப் பற்றித் தமிழ் ஊடகங்களுக்குத் தெரியாதா? அவர்கள் அத்துணை முட்டாள்களா? இருந்தாலும் இதையெல்லாம் அவைகள் ஏன் பேசுவதில்லை? தமிழ் ஊடகங்களுக்கும் 19,20,21ற்கும் என்ன தொடர்பு?
  23. 20,21 ற்கும் தமிழ் சினிமாக்காரர்களுக்கும் உள்ள தொடர்பென்ன?
  24. மாலத்தீவுகளின் அரசாங்க நடவடிக்கைகளில் சீன / இந்தியக் குறுக்கிடல்கள் ஏன்?

இப்போதைக்கு இவை போதுமானவை. இவற்றுக்கான விடைகள் பல புதிய பரிணாமங்களைக் காட்டுபவை. சற்று முயற்சி தேவை. பல கேள்விகளுக்கான விடைகள் இணையத்தில் உள்ள நாளிதழ்களில் உள்ளன. முயற்சித்துப் பார்க்கவும். நண்பர்களுடன் விவாதிக்கவும்.

தொடர்ந்து பேசுவோம்.china’s-bri-saudi-arabia-and-the-confusing-game-inside-pakistan-1024x742

Author: Amaruvi's Aphorisms

Banker by day, blogger by night and a reader throughout.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: