‘Digital Transformation : A Reality’ என்றொரு கருத்தரங்கிற்குச் சென்றிருந்தேன். ப்ரைம் பாயிண்ட் ஶ்ரீனிவாசன் அவர்கள் அழைத்திருந்தார். கூகுள், அமேஜான், எர்ன்ஸ்ட் & யங் போன்ற பெரு நிறுவனங்களில் இருந்து சிறப்பு அழைப்பாளர்கள் பேசினர். Madras Management Association + Digital Journalists Association of India இணைந்து நடத்திய பயனுள்ள நிகழ்வு. நிற்க.
ஆனந்த விகடன் தலைவர் பா.ஶ்ரீநிவாசனின் பெரும்பாலும் விகடனில் டிஜிட்டல் முறைகளைப் பற்றிய பேச்சு வரை நன்றாகவே இருந்தது. தனது சீன விஜயம் பற்றிப் பேசியது ஒவ்வாமையை அளித்தது.
இவர் சீனா சென்றிருக்கிறார்.
அங்குக அலிபாபா, வீசாட் முதலிய நிறுவனங்களின் வாயிலாகவே பணப்பரிவர்த்தனை நிகழ்கிறது என்கிறார். இது உண்மையே. வங்கித்துறையில் இருப்பதால் நானும் அறிந்தே இருக்கிறேன். அவர் மேலும் சொல்வன:
- சீனா தற்போது உள்ள டிஜிட்டல் நிலையையும் பாரதம் த்ற்போதுள்ள நிலையையும் ஒப்பிடவே முடியாது.
- சீனா முனைவர் பட்டத்தில்உள்ளது, பாரதம் எல்.கே.ஜி.யில் உள்ளது.
- சீனாவில் வழங்கப்படும் முனைவர் பட்ட ஆய்வுகளில் 40% செயற்கை நுண்ணறிவு, கணினி சுய கற்றல் துறையில் சார்ந்தே உள்ளன.
- அத்தனை முனைவர் பட்ட ஆய்வுகளும் சீன மொழியிலேயே உள்ளன – ஆய்வாளர்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தாலும். ( Period என்றொரு சொல்லைப் பயன்படுத்தினார்).
- சீனாவில் அலிபாபா வழியாக நடைபெறும் மின்னியல் பரிவர்த்தனை வாயிலாகப் பொருட்கள் மிகக் குறைந்த நேரத்தில் நுகர்வோரைச் சென்றடைகின்றன. (திபெத் தவிர மற்ற மாகாணங்களுக்கு ஒரு நாளில்),
- சீனா ஆப்பிரிக்காவில் தனது சந்தையை விரிவு படுத்த முயல்கிறது. அந்தப் பாதையில் சென்னையப் பயன்படுத்த முயல்கிறது. இதனாலேயே சி ஜின் பிங் சென்னை வந்தார். இதில் சீனாவை விஞ்சமுடியாவிட்டாலும் அவர்களுடன் கைகோர்க்க வேண்டும்.
- சீனாவில் சர்வாதிகாரம் இருப்பது போல் இந்தியாவில் இருக்க வேண்டும் என்று விரும்புவது தவறு. ஏனெனில் சீனர்களிடம் சாதி, மத உணர்வுகள் இல்லை. எனவே சர்வாதிகாரம் செல்லும்.
எனது பார்வைகள் :
- உண்மை.
- 30% உண்மை.
- 100% உண்மை.
- உண்மை. ஆனால், ஆங்கிலத்தைப் பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கவில்லை. இந்த இடத்தில் Period பயன்பாடு மும்மொழிக் கொள்கையைச் சுட்டுவதை உணர்ந்துகொண்டேன்.
- உண்மை. ஆனால், சர்வாதிகார ஆட்சி நடைபெற்றால் எவ்வகையிலான ரயில் பாதையையும், எவ்வளது அகலமான சாலையையும் ஏற்படுத்தலாம். வழக்குகள் போட வழியில்லை. சுற்றுப்புறச் சூழல் தீவிரவாதிகள் இல்லை. அரசை எதிர்த்துப் போராட்டம் செய்ய முடியாது. எனவே அரசு எதையும் செய்யலாம்.
- உண்மை இருக்கலாம். ஆனால், அவர் குறிப்பிடும் BRI – Bridge and Roads Initiative – கால, பண விரயம் செய்வது. இந்தோநேசியா, மலேசியா, கம்போடியா முதலிய நாடுகள் இது குறித்த சீனாவுடனான சில ஒப்பந்தங்களைக் கூட ரத்து செய்துள்ளன. BRI என்பது, இந்தியாவைப் பொறுத்தவரை, String of Pearls கருதுகோளின் செயல்வடிவம். எதிர்க்க வேண்டியது அவசியம்.
- தர்க்கத்தை வைத்துப் புரிந்துகொள்ள முயன்றேன். தோல்வியே. என்ன சொல்கிறார் என்று புரியவில்லை.
இதே விகடன், எட்டுவழிச் சாலைக்கு எதிராக எழுதுகிறது. தமிழகத்தில் போராட்டம் என்கிற பெயரில் தமிழ்த்தேசிய-நக்ஸல்-பிரிவினை சக்திகளை ஊக்குவிக்கிறது. இதை நிறுத்திவிட்டுப் பின்னர் சீனப் பொருளாதார வளர்ச்சியைப் பற்றிச் சொல்லலாம் என்று தோன்றியது. உய்குர் மாகாணத்தில் இஸ்லாமியர்கள் நடத்தப்படும் விதம் குறித்து எழுதிவிட்டுப் பின்னர் சீனாவையும் பாரதத்தையும் ஒப்பிடலாம் என்றும் ஶ்ரீநிவாசனிடம் சொல்லவேண்டும் என்று எண்ணினேன்.
சில மாதங்களுக்கு முன் விகடன் இணைய இதழில் காலையில் சவுதி அரேபியாவில் கடல் நீரிலிருந்து குடி நீர் தயாரிப்பதைப் பற்றி எழுதியிருந்தது. மாலையில் சென்னையில் உள்ள கடல் நீரைக் குடி நீராக்கும் தொழி நுட்பம் கடலில் உள்ள சூழியலை மாசுபடுத்துகிறது என்றும் படம் வெளியிட்டது. ஒரே நாளில் இரு நிலைகள்.
நிலைமை இப்படி இருக்கையில், சீனா-இந்தியா ஒப்பீடு சரியில்லை என்றே நினைக்கிறேன். சீனாவில் சாதாரண மக்களுக்கு உரிமைகள் பறிக்கப்படுவதைப் பற்றிப் பேசப்போவதில்லை என்று சொல்லிவிட்டு, இவ்வகையிலான ஒரு ஒப்பீடைச் செய்ததால் இந்தப் பதிவை எழுதவேண்டியிருந்தது. முன்னர் சீனாவில் சர்வாதிகாரம் செல்லும். ஏனெனில் அங்கு சாதி, மத வேறுபாடுகள் இல்லை என்றார். ஹூன் சீனர்களின் அடக்குமுறைகள் பற்றியும் மற்ற பிரதேசங்களில் ஹூன் இனச்சீனத் திணிப்பு உள்ளதையும், சுமார் பத்து லட்சம் முஸ்லிம் சீனர்கள் உய்குர் மாகாணத்தில் சிறைகளில் இருப்பதையும் பற்றிப் பேசவில்லை.
Civil Liberties இல்லாத நிலையில் அரசு என்ன வேண்டுமானாலும் செய்யலாம். பாரதத்தில் என்ன நிலை என்று ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்குத் தெரியும்.
விகடன், தனது பத்திரிக்கையாளர்களைப் பயன்படுத்தி, ஒரு விஷயம் செய்யலாம். இந்திய, சீனக் கட்டமைப்புகள் பற்றி ஆய்வு ஒன்றை வெளியிடலாம். உதா: ஷாங்ஹாய் நகரக் கட்டமைப்பு நிகழ்ந்த விதம் – இந்தியாவில் எங்கேனும் நடந்துள்ள நகரக் கட்டமைப்பு. இவைகள் சந்தித்த சவால்கள், அரசின் நிலை, பத்திரிக்கைகள் + போராளிகள் செய்த செயல்கள். இவை அனைத்தும் இடம் பெற வேண்டும். அப்போது பல உண்மைகள் தெரியவரும்.
முந்தைய சீன அதிபர் டெங் ஷாபெங் சிங்கப்பூரின் பிரதமர் லீ குவான் யூவிடம் சொன்னது: ‘உனக்கு ஒரே ஊர் தான். நீ என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் எனக்கு ஷாங்ஹாய் போன்று சில ஆயிரம் ஊர்கள். இவ்வளவுதான் செய்ய முடியும்.’ இத்தனைக்கும் ஷாங்ஹாய் நகரக் கட்டமைப்பில் சிங்கப்பூர் பெரும் பங்காற்றியுள்ளது. இத்தனைக்கும் சீனாவிலும் சர்வாதிகார ஆட்சியே. இருந்தும் அவர் அப்படிச் சொன்னார்.
இன்னொரு செய்தி: சிங்கப்பூரின் லீ குவான் யூ சொன்னது: நாட்டிற்குத் தேவையானது என்று என் மனதிற்குத் தோன்றினால் எந்த எதிர்ப்பையும் தவிடுபொடியாக்கி நான் என் எண்ணத்தை நிறைவேற்றுவேன். உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறையிலும் நாங்கள் தலையிடுவோம். உங்கள் அடுத்தவீட்டுக்காரர் யார் என்பதை அரசு தீர்மானிக்கும் என்பது வரை மறைந்த திரு.லீ பேசியுள்ளார்.
“I am often accused of interfering in the private lives of citizens. Yes, if I did not, had I not done that, we wouldn’t be here today. And I say without the slightest remorse, that we wouldn’t be here, we would not have made economic progress, if we had not intervened on very personal matters – who your neighbour is, how you live, the noise you make, how you spit, or what language you use. We decide what is right. Never mind what the people think.”
மேற்சொன்ன வரிகளை அப்படியே அமல்படுத்தியதால் சிங்கப்பூர் இன்று அடைந்துள்ள உயரம் அதிகம். ‘Punching above one’s weight’ என்பது சிங்கப்பூரின் கதையின் மூலம் புலப்படும். இதனால் அன்னாட்டு மக்கள் அடைந்துள்ள பலன்கள் ஏராளம். போராட்டம், தர்ணா, அரசு எதிர்ப்பு நிகழ்வுகள் முதலியனவற்றில் நேரத்தைச் செலவழிக்காமல் மக்களும் நாடும் நல்ல நிலையில் பயணிக்கின்றன.
லீ மேலும் சொல்வது:
Anybody who decides to take me on needs to put on knuckle dusters. If you think you can hurt me more than I can hurt you, try. There is no other way you can govern a Chinese society.
இதனாலெல்லாம் அவர் சர்வாதிகார ஆட்சி செய்தார் என்று ஆகாது. ஜனநாயகம் உண்டு. தேர்தல்கள் உள்ளன. அனைவரும் வாக்களிக்க வேண்டும். குறைகள் இருந்தால் அரசை அணுகலாம். நிவர்த்தி செய்யப்படும். ஆனால், அதற்காக அரசை எதிர்த்துக் கோஷம் போடுவது, வன்முறைகளில் ஈடுபடுவது என்பனவற்றை அரசு பொறுத்துக் கொள்ளாது.
ஆக, விகடனின் ஶ்ரீநிவாசன் சீனாவையும் பாரதத்தையும் ஒப்பிடுவது தவறு. ஆப்பிளும் ஆரஞ்சும் ஒன்றல்ல.
இரண்டு விஷயங்களை இன்று என்னால் உணர முடிகிறது.
1. லீ அவர்களின் அர்ப்ணிப்பில் இருந்த உண்மைத்தனம் மற்றும் அதனால் சிங்கப்பூர் அடைந்த உயரம்.
2. விகடன் ஶ்ரீனிவாசனின் இரட்டை வேடம்.
(விகடன் வாங்குவதை 5 வருடங்களுக்கு முன் நிறுத்தி விட்டேன்)
LikeLike
Thank you
LikeLike
Good analysis….
________________________________
LikeLike
Thank you sir
LikeLike
True Mr Amaruvi. Comparison between China and Singapore is grossly unjust. How was Hongkong till 1997 and how is the current scenario there ? Having breathed freedom and enjoyed the essence of democracy for 99 years, Hongkong citizens find it extremely annoying over Chinese dictatorship. And China is hasty to advance 2047 before 2025. Hongkong will lose its charm as an international trading rendezvous if China takes absolute control of Hongkong.
LikeLike
Thank you
LikeLike
இப்போது இங்கிருப்பது கட்டற்ற, பொறுப்பற்ற ஜனநாயகம். எல்லாவித கேள்விகளும்
கேட்போம், ஆனால் எந்தவித பொறுப்பையும் ஏற்கமாட்டோம். திரு. லீயே இந்த நாட்டை
ஒன்றும் செய்யமுடியாது என்று ஓடிவிடுவார்.
LikeLike
This is what Lee was against. He didn’t want unfettered democracy aka permanent chaos.
LikeLike
Dear Amaruvi, I was part of the organisers who attended the meeting you have referred to in this post. I am the treasurer of DiJAI (Digital Journalists Assn of India) and a very close friend of Primepoint Srinivasan, who is the Chairman of DiJAI. In fact, I handle mostly cyber crime and cyber law related matters. I am the Chairman of Digital Security Association of India and a cyber law advocate, a trainer, an author etc on cyber crimes. Your views on the speech of Srinivasan of Vitakatan group are absolutely true, fair, valid and quite relevant. I too thought on those lines only, when I heard the speech. I too thought, end of the day, I was not sure, what he wanted to convey. Perhaps we can take it that he was sharing his experiences in digitally transforming Vikatan group (maybe drifting it far away from his widely respected, learned, well mannered father Shri Balasubramaniam).
Nice to have an interaction with you, V Rajendran 9444073849
LikeLike
Thank you. Very true.
LikeLike
Respected sir,
Greetings of the day,
This is what we need in current situation India ,
Thanks & Regards,
Sriram.cs
LikeLike
தங்கள் சேவை தொடரட்டும்.
ஒவ்வொருவரும் தங்களுக்கள்ளேயே சுய விசாரணை செய்து பார்க்க வேண்டியதருணமிது. பாரத தேசத்திற்கு நம்முடைய பங்களிப்பு என்ன? வருமான வரியை நான் ஒழுங்காக கட்டுகிறேன் வேறென்ன வேண்டும் என நமக்கு நாமே திருப்தி பட்டுக்கொள்வதற்கு பதில் ( இந்த பதில்தான் பெரும்பான்மையினர் கூறினர். அவர்கள் பெரும்பாலும் மாதச்சம்பளத்தினர்) so called படித்து நல்ல நிலையில் உள்ள நாம்தான் இரட்டை வேடதாரிகளை நம்முடைய சமுதாயத்திற்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும்.
LikeLike
Thank you
LikeLike