இந்தப் பதிவைத் தமிழகத்தில் யாரும் படிக்கமாட்டார்கள். ஊடகங்களுக்கும் இப்படி ஒன்று நடப்பதே தெரியாது.
இந்திய ராணுவம் 3 ஆண்டுகளுக்கான விருப்ப தேசிய சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது. பட்டதாரிகள், வேலையில் உள்ளோர் என்று பலரும் ராணுவத்தில் சேர வாய்ப்புள்ளது.
ஆண்டுதோறும் 1000 ஜவான்களையும், 100 அதிகாரிகளையும் தேர்ந்தெடுத்து இந்த மூன்றாண்டுப் பயிற்சியில் ஈடுபடவைக்கத் திட்டம். 3 ஆண்டுகளுக்குப் பிறகு, தனியார், அரசுத் துறைகளில் வேலைக்குச் செல்லலாம்.
10-14 ஆண்டுகள் வரை பணியில் இருக்கும் அதிகாரிக்கு ஆகும் செலவு ரூ.5.12 கோடி – ரூ.6.83 கோடி. ஆனால் புதிய திட்டத்தின் மூலம் 3 ஆண்டுகள் பணியில் இருக்கும் அதிகாரியால் ரூ. 80 லட்சம் – ரூ. 85 லட்சம் மட்டுமே செலவாகும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.
இதனால் ராணுவத்துக்கு ரூ.11,000 கோடி மிச்சமாகும் என்று கணக்கிடுகிறார்கள். இத்தொகையை ஆராய்ச்சி, தளவாடங்கலை மேம்மடுத்துதல் முதலியவற்றிற்குப் பயன்படுத்தலாம் என்பது திட்டம்.
இத்திட்டத்தைத் தனியார் நிறுவனங்கள் வரவேற்றுள்ளன. ‘நல்ல கட்டுப்பாடு உடைய திறமையான இளைஞர்கள். கிடைப்பார்கள். அவர்கள் அனைவரையும் மஹேந்திரா நிறுவனம் பணியில் எடுத்துக்கொள்ளும்’ என்று ஆனந்த மஹிந்திரா சொல்கிறார்.
சிங்கப்பூர், இஸ்ரேல் முதலிய நாடுகளில் கட்டாய ராணுவப் பயிற்சி உள்ளது. அது அன்னாடுகளுக்கு நன்மை விளைவித்துள்ளது.
கையில் இண்டெர்னெட் ஃபோன், மலிவு விலை மது, கல்வி/வேலை இல்லை என்பதால் வெறுமெனே சுற்றித் திரியாமல் வாழ்க்கையில் உருப்பட இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு.
கையில் இண்டெர்னெட் ஃபோன், மலிவு விலை மது, கல்வி/வேலை இல்லை என்பதால் வெறுமெனே சுற்றித் திரியாமல் வாழ்க்கையில் உருப்பட இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு……..இப்படித்தான் நம் இளைஞர்கள் மீது அவநம்பிக்கை கொண்டுள்ளோம் ஆனால் அவ்வாறு இருக்கும் இளைஞர்கள் அரை விழுக்காடு அளவிற்கே …இப்போதும் காவல்த்துறை பணிகள் சுத்திகரிக்கும் பணிகள் எல்லாம் ஒரு சில குடும்பங்களே லஞ்சம் கூட கொடுக்காமல் வேலையில் சேர்க்கிறார்கள் என்பதே பெருவாரியான மக்களுக்குத் தெரியாது ..நீங்கள் குறிப்பிட்ட அறிவிப்புகள் நம்ம இளைஞர்களும் பார்த்து சேர்க்கிறார்கள் (குள்ள நரிக்கூட்டம் என்ற படம் பாருங்கோ )
LikeLike