Work / Learn from home – சில எண்ணங்கள்

மாணவர்களுக்கு மட்டுமே என்று எண்ணிப் பெரிசுகள் நழுவ வேண்டாம். உங்களுக்கும் ஆங்கே பொசியும்..

மாணவர்களே,

இது ஏதோ மாணவர்களுக்கு மட்டும் என்று பெரிசுகள் நெட்ஃபிளிக்ஸ் பார்க்கக் கிளம்பவேண்டாம். உங்களுக்கும் ஏதாவ்து ஆங்கே பொசியும் ( பெரிசுகளை விழல் என்று எள்ளி நகையாடியுள்ள ஆமருவியைக் கடுமையாகக் கண்டனம் செய்யக் கிளம்பவேண்டாம், மீண்டும்..)

வீட்டில் இருந்து கற்பது என்பது நிதர்சனம்.  கற்பது என்பதற்குப் பதிலாக ‘உழைப்பது’ என்று பெரிசுகள் போட்டுக்கொள்ளலாம்.  இனிமேல் எல்லாம் அப்படித்தான். எல்லாம் ஆன்லைன் தான் ஜூம் தான், ஸ்கைப் தான், ஜோஹொ தான், வெண்டைக்காய் தான்..5-effective-ways-to-work-from-home-during-covid-19

நான் அறிந்தவரை, சில எண்ணங்கள்:

  1. படிக்கும் இடம் என்று ஒன்றைத் தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.  சிறு மேசை, ஒரு நாற்காலி, சிறிய விளக்கு, இணையத்தொடர்பு, மிக முக்கியமாக அரசு வழங்கியுள்ள மடிக்கணினி / கணினி.
  2. அமைதி அவசியம். தொலைக்காட்சி இருந்தால் அணைத்து விடவும். முடிந்தால் விற்றுவிட்டு நூல்கள் வாங்கிக்கொள்ளலாம். கொஞ்சமாவது பயன் இருக்கும்.
  3. WFH ற்காகவென்று சிறிய அளவிலான Inverter வைத்துக்கொள்ளலாம். இணயத்தொடர்பையும், கணினியையும் இந்த Inverter உடன் இணைத்துக் கொள்ளலாம்.  மற்ற இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டாலும் வேலை நடக்கும்.
  4. இரவில் வேலை செவதற்கு என்று LED மேசை விளக்கு வாங்கிக்கொள்ளலாம். மின் செலவு மிச்சமாகும்.
  5. VPN வழியாக வேலைசெய்பவர்கள் தங்களது Safeword அல்லது Remote Access Pin முதலியவற்றை ஒரே இடத்தில் பாதுகாப்பாக வைக்கவும். திடீரென்று தேவைப்படும் போது உடனடியாகக் கிடைக்க வேண்டும்.
  6. கணினி மூலம் எடுக்கும் தொலைபேசி அழைப்புகளுக்கு நல்ல மைக் வைத்த headset பயன்படுத்துங்கள். விலை மலிவாக உள்ளது என்று ஓஜோசி  நிறுவனங்களை நம்பவேண்டாம்.
  7. கணினியில் கேமரா தேவைப்படும் போது மட்டும் திறந்திருக்கட்டும். மற்ற நேரங்களில் ஒரு டேப் வைத்து ஒட்டிவிடலாம்.
  8. வேலை செய்யும் / ஆன்லைன் கல்வி பெறும் இடத்தில் உணவு உண்ணுதல் கூடாது. அதை ஒரு அலுவலகமாகவே / பள்ளியாகவே கருத வேண்டும். அப்போதுதான் அதற்கேற்ற மனநிலை அமையும்.
  9. வேலை நேரத்தில் சொந்தத் தொலைபேசி அழைப்புகள் வந்தால் எடுக்க வேண்டாம். அல்லது வெளியில் சென்று எடுக்கவும்.  அலுவல் தொடர்பான தொலைபேசி / இணையவழி அழைப்புகள் நடந்துகொண்டிருக்கலாம் என்பதால்.
  10. அலுவல் செய்யும் இடத்தில் நமது பெற்றோர் / ஆசிரியர் / குழந்தைகள் / மனைவி / கணவன் படத்தை வைத்திருந்தால் மனம் ஒருநிலைப்படும். கடவுள் படங்கள் விசேஷம்.
  11. ஒரு மணி நேரம் அமர்ந்திருந்து வேலை செய்தால், பத்து மணித்துளிகள் நடந்துவிட்டு வரவும்.
  12. வீட்டில் அமர்ந்து வேலை செய்யும் இடத்திற்கு அருகில் நல்ல நூல்கள் இருப்பது அவசியம். வேலையில் கவனம் குறைந்தால், ஒரு மாறுதலுக்காக மன ஊக்கம் அளிக்கும் நூல்களில் இருந்து சில பகுதிகளை வாசிக்கலாம்.  அப்படியான சில நூல்கள்: (இவற்றில் நான் எழுதிய நூல்கள் எதுவும் இல்லை).
    1. Startup Nation
    2. Compound Effect
    3. Sapiens
    4. Homo Deus
    5. 21 Lessons for the 21st Century
    6. Tuesdays with Morrie
    7. வலவன் கதைகள்
  13. உங்கள் குடும்ப வழக்கப்படி ஆன்மீகப் பயிற்சிகள் இருப்பின் தவறாமல் செய்து வருவது மன அழுத்தத்தில் இருந்து காக்க உதவும்.
  14. மிக அவசியமாகத் தவிர்க்கப்பட வேண்டியவை : அலுவல் / பள்ளி நேரத்தில் சமூக ஊடகங்கள், செய்திகள் மற்றும் தொலைக்காட்சி.
  15. உங்கள் திறமையை வீணடிக்கும் மிகப்பெரிய எதிரி ஒருவன் இருக்கிறான்.  அவன் பெயர் Multi Tasking.  ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வது. விளைவு: எந்த ஒரு வேலையும் நடக்காது.

மேற்சொன்ன சொன்ன பலதையும் நான் பின்பற்றுகிறேன்.   உங்களால் முடிந்தவற்றைப் பின்பற்றுங்கள். வீட்டில் இருந்து வேலை, கற்றல் என்பது  நமது வாழ்வில் இன்றிமையாத ஒன்றாகவிருக்கிறது. இந்தப் புதிய வாழ்க்கை முறையை வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். வேறு வழியில்லை. டிஜிட்டல் இந்தியா என்பதை முழுமையடைய வைத்துள்ளது கொரோனா.

உடல் / மன நலம் காத்து, வலிமையான பாரதத்தைப் படைப்போம் வாருங்கள்.

வாழ்த்துக்கள்.

பி.கு.: எனது நூல்களை வாங்கியே தீருவேன் என்று அடம்பிடிப்பவர்கள் (அப்படி இருந்தால் எவ்வளவு நல்லது? ஹும்) கீழ்க்கண்ட கிண்டில் நூல்களை வாங்கி வாசிக்கலாம்.

  1. நான் இராமானுசன்
  2. பழைய கணக்கு
  3. Monday is not Tuesday
  4. Singapore Diary

 

 

Author: Amaruvi's Aphorisms

Banker by day, blogger by night and a reader throughout.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: