‘இஸ்ரேல் அரபு அமீரக நட்புறவு’ பற்றிய உங்கள் கருத்து என்ன?
‘இதற்குக் காரணமான எடப்பாடி அரசு உடனே பதவி விலக வேண்டும் என நாளையே அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி அதிலிருந்தும் வெளி நடப்ப்பு செய்வோம் என தெரிவித்துக் கொண்டு..’
‘சரிங்க. அமெரிக்க தேர்தல்ல இந்தியப் வம்சாவளிப் பெண் நிற்பதைக் பற்றி.’
‘ஃபாசிஸ மோதி அரசில் இந்தியப் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்பதால் அவர்கள் அமெரிக்கா சென்று அங்கு தேர்தலில் நிற்கிறார்கள். இதற்குக் கேள்வி எழுப்பாத எடப்பாடி அரசு உடனே பதவி விலக வேண்டும் என்று நாளையே..’
‘ஐயா சரிங்க. சவூதி அரேபியா கிட்ட பாகிஸ்தான் அரசு கெஞ்சறாங்களே..’
‘ஃபாஸிச மோதி அரசின் கொள்கைகளினால் அருமை நண்பர் இம்ரான் கானின் பாகிஸ்தான் அரசு இப்படி அருமை நண்பர் சவூதி அரசரின் அரசிடம் கெஞ்ச வேண்டிய நிலையில் உள்ளதைக் கண்டித்து, இதற்குக் கரணமான எடப்பாடி அரசு உடனே பதவி விலக வேண்டும் என்று அனைத்துக் கட்சி..’
‘என்ன சார் முத்திடுச்சா. சரி. கேரளத்துல மூணாறூல தமிழர்களுக்கு நடந்துள்ள கோரத்துக்கு நீங்க என்ன சொல்ல வறீங்க?’
‘கேரளத்தில் நமது தமிழர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களைத் தடுக்க எடப்பாடி அரசு தனது கையாலாகத தனத்தினால் எதுவும் செய்யாமல்..’
‘அட நாராயணா. சார், கேரளத்துல கம்யூனிஸ்ட் அரசு. உங்க தோழமைக் கட்சி. அவங்க செயல்படல்ல’
‘கேரளத்தில் அருமையாக ஆட்சி செய்துவரும் அருமை நண்பர் பினரயி விஜயன் அவர்களின் அரசைச் செயல் படாமல் செய்து, தமிழர்களுக்கு நேர்ந்துள்ள இன்னல்களுக்கு விரைந்து உதவி செய்ய முடியாத நிலையில் அந்த அரசைக் கட்டிப் போட்டுள்ள ஃபாசிஸ மோதி அரசைக் கண்டிக்க முடியாத கையாலாகாத எடப்படி அரசு பதவி விலக வேண்டும் என்று சொல்லி, அனைத்துக் கட்சிக் கூட்டம்..’
சார். உங்க பேரன் நடந்து வரான். தூக்கி வெச்சுக்கிட்டு போஸ் குடுங்க..’
‘பேரக்குழந்தை நடந்து வர வேண்டிய நிலையில் இன்று தமிழகத்தை வைத்துள்ள எடப்பாடி அரசு பதவி விலக வேண்டி..’
‘ஐயோ சார். நேத்து வரை தவழ்ந்துக்கிட்டு இருந்தான். இப்ப நடக்கறான். அதுக்குப் போய்..’
‘தவழும் குழந்தை தவழ முடியாத நிலையில் இன்றைய எடப்பாடி அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆகவே எடப்பாடி அவர்கள் உடனே பதவி விலக வேண்டும் என்று..’
‘ஓடிடுவோம்டா. இன்னும் கொஞ்சம் நின்னா நமக்கும் புடிச்சுடும் போல இருக்கு..’