சுதாகர் கஸ்தூரியின் ‘நேரா யோசி’ நூல் சரியான நேரத்தில் வந்துள்ளது.
உலகம் தன் இயக்கத்தைச் சற்று நிறுத்தி, கொரோனாவினால் நின்று யோசிக்க வேண்டிய நிலையில் மக்களை வைத்துள்ள நேரத்தில் ‘நேரா யோசி’ நல்லதொரு பாதையைக் காட்டுகிறது.
அறிவியல் புனைவெழுத்தாளரான சுதாகர் மனநல அறிவியலிலும் சிறந்து விளங்குவதை இந்த நூலில் காண முடிகிறது. மனிதன் எவ்வாறு தவறுகள் செய்கிறான்? தவறுகள் நிகழக் காரணங்கள் யாவை? மனம் சரியாக யோசிக்காமல் இருப்பது எதனால்? மனித மூளையில் எந்தெந்தப் பகுதிகளில் என்னென்ன நிகழ்வுகள் நடக்கின்றன? இவற்றுக்கும் நமது அன்றாட வாழ்விற்காக நாம் சிந்தனை செய்வதற்கும் தொடர்புகள் யாவை? இந்தச் சிந்தனைகளைச் செம்மைப் படுத்த வழிகள் யாவை? தோல்விகள் ஏற்படும் காரணங்கள் யாவை? இப்படியான பல கேள்விகளுக்கு இந்த நூலில் விடைகள் உள்ளன.

அறிவியல், அதிலும் உயிரியல், மூளை, எண்ணங்கள் என்று குழப்புமோ என்கிற கவலைகள் எதுவும் இல்லாமல், தைரியமாகப் பலரும் வாசிக்கும் வண்ணம் எழுதப்பட்டுள்ள இந்த நூலில் மனித மனதின் செயல்திறன்கள், அவற்றைச் சரியாகப் பயன்படுத்தி முன்னேறுவது என்று பல அறிவியல்பூர்வமான செய்திகள் எளிதில் வாசிக்கும் நிலையில் சொல்லப்பட்டுள்ளன.
சுதாகர் கஸ்தூரி காட்டியுள்ள பல சுட்டிகள், எடுத்தாண்டுள்ள அறிவியல் வல்லுனர்களின் கருத்துகள் யாவும், பரபரவென்று இயங்கும் இன்றையக் காலக்கட்ட இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் பெரிய வழிகாட்டியாக அமையும்.
மாணவர்களும், அவர்தம் பெற்றோரும் ஆசிரியரும் தவறாமல் வாசித்து உள்வாங்க, ‘நேரா யோசி’ பள்ளி நூலகங்களில் கட்டாயம இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.
தினமணி / Pinnacle Publishers.
மிக்க நன்றி இந்த ‘நேரா யோசி’ புத்தகத்தை பற்றி ப்சதிவிட்டதிர்க்கு. இன்னும் சென்னை புத்தக கண்காட்சிக்கு செல்லவில்லை!…நாளை அல்லது நாளை மறுநாள் செல்கையில் தேடி வாங்கவேண்டும்!
LikeLike