The side that is not spoken about, generally.

7ம் வகுப்புத் தமிழ்த் தேர்வுத்தாளில் விரைவில் வரவிருக்கும் கேள்வியை முந்தித் தருகிறோம்:


‘லாலாக்கு டோல் டப்பி மா, கண்ணே கங்கம்மா உன்இடுப்பச் சுத்தித் திரும்பிப் பாரம்மா’


1. மேற்சொன்ன குறளில் தளை தட்டும் பகுதிகள் யாவை?
2. ‘லாலாக்க்கு’ என்பதில் எந்த உருவக அணி தென்படுகிறது?
3. திரும்பிப் பாரம்மா என்று சொல்லாமல், கவிஞர் ‘இடுப்பச் சுத்தித் திரும்பிப் பாரம்மா’ என்று சொல்வதில் உள்ள பொருள் நயம் யாது?
4. இந்தப் பாடலில் நடித்த நடிகைகுப் பதிலாக, நயந்தாரா நடித்திருந்தால் நீட் தேர்வு விலக்குவதற்கான சாத்தியம் ஏற்பட்டிருக்குமா?
5. தன் இடுப்பைத் தானே சுற்றிப் பார்க்க முடியாத நடிகைகளுக்கு, சமூக நீதியின் அடிப்படையில் என்ன சலுகைகள் கொடுக்கலாம்?
6. மேற்ச்சொன்ன பாடல் வரிக்கு ஒப்பாகக் கலைஞர் கவிதைகள் வரிசையில் உள்ள ஏதேனும் கவிதை வரிகளை எழுதவும்.
7. மேற்கண்ட பாடல் வரிக்கும், ‘ராஜா கைய வெச்சா ராங்கா போனதில்ல’ பாடல் வரிக்கும் உள்ள பொருள், இலக்கண ஒற்றுமைகள் யாவை?
8. ‘உளியின் ஓசை’ படத்தில் வரும் ஏதாவது ஒரு பாடல் வரிக்கும் மேற்சொன்ன பாடல் வரிக்கும் சித்தாந்த ரீதியான தொடர்பு தென்படுகிறதா? விளக்கவும்.
9. ‘இடுப்பு’ என்னும் சொல் இடம்பெறும் மற்ற பாடல்கள் யாவை? ஆங்கிலப் பாடல்களாக இருந்தாலும் எழுதலாம். ஹிந்தி மட்டும் கூடாது.
10. ‘மாங்கா மாங்கா ரெண்டு மாங்கா’ செய்யுள் வரியையும், ‘ரெண்டுல நீ ஒண்ணத் தொடு மாமா’ என்கிற சங்க இலக்கியச் செய்யுள் வரியையும் மேற்சொன்ன பாடல் வரியுடன் சேர்த்து ‘ எகத்தாள தேச உருவக அணி’ தொனிக்க ஒரு செய்யுள் எழுதவும்.
11. உங்கள் தலையில் மண்ணை அள்ளிப் போடும்படியாக செல்ஃபி எடுத்து vidiyal_textbookchief at gmail dot com என்கிற முகவரிக்கு அனுப்பவும்.


பி.கு.: மறக்காமல் ‘விடியல்’ என்று ஹேஷ்ட்டேக் போட்டுப் பதில் எழுதவும்.

5 responses

  1. Kalyanaraman A.S Avatar
    Kalyanaraman A.S

    Super questionnire

    On Thu, 8 Jul, 2021, 9:56 pm Amaruvi’s Aphorisms, wrote:

    > Amaruvi’s Aphorisms posted: ” 7ம் வகுப்புத் தமிழ்த் தேர்வுத்தாளில்
    > விரைவில் வரவிருக்கும் கேள்வியை முந்தித் தருகிறோம்: ‘லாலாக்கு டோல் டப்பி மா,
    > கண்ணே கங்கம்மா உன்இடுப்பச் சுத்தித் திரும்பிப் பாரம்மா’ 1. மேற்சொன்ன
    > குறளில் தளை தட்டும் பகுதிகள் யாவை?2. ‘லாலாக்க்கு’ என்பதில் எந்த உர”
    >

    Like

  2. RAVICHANDRAN R RAJA Avatar
    RAVICHANDRAN R RAJA

    நீங்கள்….வேடிக்கையாக எழுதியிருந்தாலும்…..இதுமாதிரியாக உண்மையிலேயே நடந்தால்….நாம் என்ன செய்யப் போகிறோம்…என்கிற பயம்…உள்ளூர….இருக்கிறது!

    Like

  3. Venkat Desikan Avatar
    Venkat Desikan

    Oh God ! In the name of modernism, these neo-Tamizh zealots are degrading the oldest language without an iota of shame. May Sage Agasthya or Tolkappiar provide them with at least a sense of sanity, if not esoteric wisdom and aesthetic appreciation of her beauty.

    Like

  4. S. vasudevan Avatar
    S. vasudevan

    Seeing who heads Tamilnadu rextbook society, these questions r possible

    Like

  5. Sampath Iyengar Avatar
    Sampath Iyengar

    Like

Leave a reply to S. vasudevan Cancel reply