1987-8ல் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் ஊழியர் பிரச்னைகளால் நெய்வேலி சற்றுத் துவளத் துவங்கியது.
ஶ்ரீரங்கம் ராஜ கோபுரம் கட்டிய மகானின் பாதம் பட்டால், நிலைமை சீராகும் என்று நெய்வேலி நிறுவனத்தின் அன்றைய சேர்மன் நாராயணன் நினைத்தார். 94 வயதான ஶ்ரீமத் அஹோபில மடம் 44ம் பட்டம் ஶ்ரீமத் அழகியசிங்கர் ஜீயர் ஸ்வாமிகள் நெய்வேலிக்கு எழுந்தருளினார்.
தள்ளாத வயதிலும் ஜீயர் எழுந்தருளியது பலரது மனதை நெகிழச் செய்தது.
மரத்தாலான தனது பாதுகைகளுடன் அவர் தெர்மல் ஸ்டேஷன் உள்ளே நடக்க, ‘அவர் பாதம் படணும். கொஞ்சம் சொல்ல முடியுமா?’ என்று நாராயணன் கேட்க, ‘அதுக்கென்ன, வெறுங்காலோட நடந்து வரேன்’ என்று தனக்கே உரிய சிரிப்புடன் தனது பாதத் துகள்களால் தெர்மல் ஸ்டேஷனைப் புனிதப்படுத்தினார் ஜீயர்.
நெய்வேலி நிறுவனம் நல்ல லாபங்களை ஈட்டத் துவங்கியது.
அந்த மஹானின் திருநட்சத்திரம் இன்று. ஆவணி ஹஸ்தம்.
