The side that is not spoken about, generally.

போலி முற்போக்கு எனில் வேறு பக்கம் பாருங்கள். பிள்ளைகளின் நலனில் அக்கறை உள்ளவர்கள் மேலே வாசிக்கலாம்.

வடகலை ஐயங்கார் கதை:

ரம்யாவிற்குக் கடந்த 8 மாதங்களுக்கு முன் நிச்சயம் ஆனது. பெற்றோர் பார்த்துச் செய்தது. பையன், பி.டெக், எம்.எஸ். அமெரிக்காவில் வேலை. நிச்சயம் ஆனது முதல் தினமும் பையனுடன் பேசி வந்தாள்.

இருவீட்டாரும் இணைந்து கல்யாண வேலைகளில் ஈடுபட்டனர். கல்யாண சத்திரம் முதல், பரிஜாரகன் வரையில் எல்லாம் தயார். பெண்ணே முனைந்து எல்லாக் காரியங்களையும் செய்தாள்.

பையன் சென்னையில் வந்து இறங்கினான். பெண்ணே நேரில் சென்று வரவேற்றாள். இரு குடும்பமும் கூறைப் புடவை முதற்கொண்டு சேர்ந்து வாங்கியது.

கல்யாணம் நடக்கவில்லை. திடீரென்று பெண் தான் வேறு ஒருவனை விரும்புவதாகத் தெரிவித்தாள். பையன் பேசிப்பார்த்தான். ரம்யா சொல்வது : No. I am not interested.

எங்கு தவறு ? நிச்சயம் ஆன பின் 8 மாதம் கழித்துக் கல்யாணம் என்றதா ? நிச்சயமாக உண்மைக் காரணம் இரு வீட்டாருக்குமே தெரியவில்லை.

தென்கலை ஐயங்கார் கதை:

புரோகிதம் செய்யும் தன் மாமாவையே திருமணம் செய்துகொள்வேன் என்றாள் சுமதி. மாமாவிற்கு 35 வயது. நல்ல வசதி. ஆனால் திருமணம் ஆகவில்லை. மருமாள் 18 வயது கூட நிரம்பவில்லை.

வயசு வித்தியாசம் ரொம்ப இருக்கு. இது சரியா வராது என்றார் மாமா. பெண் கேட்கவில்லை. அடம் பிடித்தது.

நீ மொதல்ல படி. காலேஜ் போ. அப்பறம் நிதானமா பேசிக்கலாம். இப்போ ஒண்ணும் பேச வேண்டாம் என்றார் தாய் மாமா.

பெண் கல்லூரிக்குச் சென்றாள். ஒரு நாள் மாலை மாமாவைப் பார்க்க வந்தவள் சொன்னது :

‘நான் ஒரு பையன விரும்பறேன். அவன் பேரும் உன் பேரும் ஒண்ணுதான். அதனாலதான் நான் உன்னை விரும்பறதா சொன்னேன். இப்ப இப்பிடியே இருக்கட்டும். நீ வெளில சொல்லாத. நான் அவனக் கல்யாணம் பண்ணிண்ட அப்பறம் சொல்லிக்கலாம். அதுவரைக்கும் நான் உன்னையே கல்யாணம் பண்ணிக்கப் போறதா அப்பா, அம்மா நினைச்சுக்கட்டும். வெளில சொல்ல மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணு மாமா’

ஸ்மார்த்தர் கதை :

பெண்ணின் அப்பாவும் அம்மாவும் ரிடையரான வங்கி ஊழியர்கள். ஒரே பெண். லண்டனில் தனியாக வசிக்கிறாள். நல்ல படிப்பு. கை நிறைய சம்பளம். கல்யாணம் வேண்டாம் என்கிறாள். அவளது அம்மா சொல்வது :

‘இப்ப அவள் எதுக்கு கல்யாணம் பண்ணிக்கணும் ? தேவை என்ன ? நிறைய சம்பாதிக்கறா. இஷ்டம் போல சௌகர்யமா இருக்கா. கல்யாணம் பண்ணிண்டு எதுக்கு தன்னோட சௌகர்யங்களக் குறைச்சுக்கணும் ?’

பிறிதொரு ஸ்மார்த்தர் கதை :

இதை எழுத மனம் வரவில்லை. ஆனால் மேற்சொன்னவற்றிற்குக் கிஞ்சித்தும் குறைவற்றது.

அவ்வளவு தான்.

எங்கே செல்கிறோம் ? தவறு எங்கே? இதில் ஃபார்வோர்டு கம்யூனிட்டி என்ன பீத்தல் ?

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

–ஆமருவி

3 responses

  1. Ravichandran R Avatar
    Ravichandran R

    பெண் சுதந்திரம் என்ற பெயரில்…அவர்கள் Economic Independence அடைந்தது என நினைக்கிறேன்! மேலும் பெண்…தன்னை பெற்றவர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள்… ஏதும் என்றால் தன்னை support செய்வார்கள் என்கிற தைரியம்! முன்னேற்றம் என்ற பெயரில் நமது சடங்கு சம்ப்ரதாயங்கள் பற்றி கேலி கிண்டல்…பின்பற்றுவதில்லை! தங்கள் உறவினர்கள் நண்பர்கள் வட்டத்தில் சிலர் வாழ்வில் நடந்த சம்பவங்கள் பார்த்து….தைரியம்…என்றே நினைக்கிறேன்! முக்கியமாக தன் பெற்றோர் தலைகுனிவர் என்ற எண்ணம் கிஞ்சித்தும் இல்லை!

    Like

  2. Vani Shivaprakash Avatar
    Vani Shivaprakash

    Very simple. Utter laziness is the ma

    Like

  3. Krishnan Avatar
    Krishnan

    இந்தக் குழந்தைகளை தப்பு சொல்வதற்கு முன் பெற்றோர்கள் நாம் என்ன செய்கிறோம், எந்தெந்த விஷயங்களை நம் பிள்ளை உடைத்தால் மண்குடமென அவர்களுடைய வளர்ப்ராயத்தில் கண்டும் காணாமல் போனோம், இப்போது அது எப்படி விஸ்வரூபம் எடுத்துள்ளதுன்னு intro/retrospection வேண்டும். ஏதோவொறு காலக்கட்டத்தில் நப்பாசையாக, சில பல மார் தட்டும் டம்பத்துக்காக அவர்களுடைய வெளியூர் அலுவல் / படிப்பு ஆசைகளுக்கு இசைந்து விட்டு, இப்ப கடிக்குதேனா… strict processes only strictly observed and adhered by parents is the only way for role-modelling. Or, just go with the materialistic flow leading to watering down of legacy practices. Legacy because majority of we ourselves do not believe what we desultorily practice. வருசத்துக்கு ஒரு வாட்டி ஆச்சார்யனை கச்சம் கட்டின்டு சேவிச்சுட்டு வருஷம் பூரா A2B, HSB… Stop grumbling. கூழ்… மீசை… எனக்கும் பெண் குழந்தை உள்ளது. தெரிந்து தான் பேசுகிறேன். நாம் நடந்து கொள்ளும் விதம் அவர்கள் பார்க்கிறார்கள். 36 வயசாகிவிட்டது… 42 வயசுக்கு… IYI code போடலாமான்னு யோசிக்கிற அளவுக்கு போயிருக்க வேண்டாமே! Never too late to mend, to restart being role models. Let us. Then we can blame gen next.

    Like

Leave a comment