2021 தீபாவளி நாள் அன்று பாபுராயன் பேட்டை விஜய வரதராஜ பெருமாள் கோவிலுக்குச் சென்றேன். ஆழும் பாழுமாக இருந்த கோவிலைப் பற்றிய காணொளி வெளியிட்டேன். ஹிந்து நாளிதழில் எழுதினேன். எழுத்தாளர் ஜெயமோகன் தளத்திற்கு எழுதினேன். இந்து அறநிலையத் துறையுடன் தொடர்ந்து லாபி செய்து, சமூகத்தில் பெரியவர்களின் துணை கொண்டு, அரசின் முக்கிய பிரமுகரின் வலியுறுத்தலின் பயனால் அற நிலையத்துறையைப் பாபுராயன் பேட்டை கோவில் கோப்புகளின் மீது கவனம் கொள்ளச் செய்தேன்.
இதற்கு முன்னர் 2020ல் வக்கீல் ஜெகன்னாதன் என்பார் கோவிலைப் புனரமைக்க, நீதிமன்ற ஆணையைப் பெற்றிருந்தார். இருப்பினும் அரசு மெத்தனம் காட்டிவந்தது. வக்கீல் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருந்தார்.
2021 நவம்பர் மாதத்தில் பாபுராயன் பேட்டை வரதராஜர் கோவில் தொடர்பாக ஹிந்து நாளிதழில் எழுதினேன். நண்பர்கள் உதவியுடன் இரண்டு முறை பெரிய அளவிலான உழவாரப் பணிகள் செய்தேன். அற நிலையத் துறை நியமித்த ஆக்கெடெக்ட்களை இருமுறை கோவிலுக்கு அழைத்துச் சென்று அளவிட உதவினேன். அரசிடமிருந்து அவர்களுக்கு வந்து சேர வேண்டிய ஊதியத்திற்காக அரசிற்கு அழுத்தம் கொடுக்க திருக்கோவில் ஆலோசனைக் குழுவின்மூத்த அங்கத்தினர் திரு.ராமசுப்பிரமணியத்திடம் முறையிட்டேன். முன்னர், என் வேண்டுகோளை ஏற்று, அவரே கோவிலுக்கு வந்து அதன் நிலை பற்றிய நீண்ட அறிக்கையை ஆணையரிடம் அளித்திருந்தார்.
2022ல் ஊரரில் உள்ள பஞ்சாயத்து கௌன்சிலர்களையும், ஊர் மக்களையும் ஒன்று கூட்டி, உழவாரப்பணிகள் செய்தேன் ( அற நிலையத் துறை ஒப்புதலுடன்). மறைந்த எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களிடம் சொல்லி, சக்தி விகடன் பத்திரிக்கையில் கோவில் பற்றிய விழிப்புணர்வுக் கட்டுரை வர ஏற்பாடு செய்தேன். ஆன்மீகப் பெரியவர் ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் கோவில் வெளியே, ஊர் மக்களின் உதவியுடன், பரிகார பூஜைகள் செய்தேன்.

2024 நவம்பர் மாதம் நீதிமன்றம் அரசைக் கடுமையான எச்சரிக்கை செய்தது. அதன் பலனாக ஆணையர் கோவிலுக்குச் சென்று கோவில் புனரமைப்பு தொடர்பான வேலைகளைத் துவக்கியுள்ளார்.
இனி, அரசு கோவிலைக் கட்ட வேண்டியது தான் பாக்கி. ஆக, பாபுராயன் பேட்டை தொடர்பான எனது பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
இந்தப் பணியில் எனக்கு உதவிய நண்பர்கள், பெரியவர்கள் ( கீழே உள்ளபடி), ஊர்ப் பெரியவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. வக்கீல் ஜெகன்னாதன் அவர்களின் சீரிய பணி மேன்மேலும் வளர வேண்டும்.
உதவிய / ஆர்வம் காட்டிய நண்பர்கள் மற்றும் பெரியவர்கள் :
- ஶ்ரீரங்கம் பாலாஜி
- பிரசன்னா வெங்கடேசன்
- பி.எஸ்.ரமேஷ்
- காயத்ரி ( ஹிந்து )
- கண்ணன் சேஷாத்ரி
- ராமஜெயம்
- பிருத்விராஜன்
- ஆட்சிலிங்கம்
- ராமசுப்பிரமணியன்
- மின்னல் ஶ்ரீதர்
- தட்சிணாமூர்த்தி
- எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன்
- எழுத்தாளர் ஜெயமோகன்
- ஹிந்து நாளிதழ் – காலச்சக்கரம் நரசிம்மன்.
- ஶ்ரீடிவி பால கௌதமன்
- ஶ்ரீராமன்
- கிருஷ்ணன் சேஷசாயி
- கிருஷ்ணஸ்வாமி & நண்பர்கள்
பாபுராயன் பேட்டை தொடர்பான எனது சில சுட்டிகள்:
- 2021ல் எழுதிய கட்டுரை இங்கே.
- 2021ல் நான் வெளியிட்ட காணொளி.
- 2021ல் ஹிந்து நாளிதழில் என் கட்டுரை
- 2021ஜெயமோகன் தளத்தில் என் கட்டுரை
- 2022ல் நடபெற்ற உழவாரப்பணி.
- சக்தி விகடனில் கட்டுரை
- 2022ல் மீண்டும் உழவாரப்பணி
- 2022ல் பரிகார பூஜை
- 2022ல் ஆர்க்கிடெட்களுடன் அளவீடு
- 2023ல் வந்த ஒப்புதல் பற்றிய கட்டுரை
- 20204 ஶ்ரீடிவியில் வந்த காணொளி
- 2024 PGurus பேட்டி
- 2024 வக்கீல் ஜெகன்னாதன் பேட்டி
இந்தப் பயணத்தில் பங்குகொண்ட அனைவருக்கும் நன்றி. அனைவருக்கும் இறையருள் பொலிக.
Leave a comment