The side that is not spoken about, generally.

டுமீல் டைம்ஸ் நிருபர் அசட்டு அம்மாஞ்சி, கமல், ரஜினி, சஷி தரூர்,  சீமான், ராஹுல் காந்தியுடன் நடத்திய பாட்காஸ்ட் கலந்துரையாடல், #satire

அ: எல்லாருக்கும் சீட் கிடைச்சுதா ? உட்கார இடம் இருக்கா ?

கமல்: எனக்கு ஒரு சீட் இருக்கு. அது போதும். அதுக்குத்தான் டிவிய உடைச்சேன்னு சொல்லுவேன்னு நீங்க நினைக்கறது புரியல்லன்னு நினைக்க வேண்டாம்னு சொல்ல வந்தேன்.

சஷி: A sentence has a beginning and an end. Period. Please adhere to this Kamal. 

சீமான்: எனக்கு சீட்டே இல்லேன்னாலும் பரவாயில்ல. நான் யாரோடயும் கூட்டு சேர்ந்து ஒரே சிட்டுல உட்கார மாட்ட்டேன். மறத் தமிழண்டா.

ரஜினி: நான் சீட்டுக்காக அலையறதில்லை. வம்பு சீட்டுக்குப் போறதில்லை, வந்த சீட்ட விடறதில்லை. ஹ ஹா. 

ராஹுல்: இங்க அதானி, அம்பானிக்குத்தான் சீட் கிடைக்கும். சீட்டுக்கும் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கணும். 

அ: அருமை. பிரமாதமான துவக்கம். இன்னிக்கி நாம ஆப்ரேஷன் சிந்தூர் பத்தி பேசப்பொறோம். 

கமல்: யாருங்க அது ? புது ஹீரோயினா ? பிக் பாஸ்ல வந்தாங்களா ? ஃபோட்டோ இருந்தா அனுப்பச் சொல்லுங்க, அடுத்த படத்துல சான்ஸ் இருக்கான்னு பார்க்கறேன்னு சொல்லலாம்னு நின்னைக்கயிலே, இதைப்பத்தி எங்கப்பா சிவாஜி சொன்ன செய்தி இன்னிக்கும் மனசுல நிக்குதுன்னு சொல்லலாமான்னு தோணுது. 

சஷி : Why don’t you end your sentences ? I always end my sentences even though my choice of words need an accompanying dictionary. 

ராஹுல் : இதுனாலதான் நான் பார்லிமெண்ட்ல பேசறதில்ல.. 

அ: ஏங்க ? பேச வேண்டியது தானே ?

ராஹுல்: பேசினா யாரு கேக்கறது ? தூக்கமா வருது. சீக்கிரம் முடிங்க. அமெரிக்கா போகணும். 

அ: இப்பத்தானே சஷி தரூர் போயிட்டு வந்தார். நீங்க எதுக்கு ? 

சஷி: Don’t aeroplanes go to America on a daily basis ? Do they need a reason ? 

சீமான்: இப்படித்தான் ஒரு முறை இலங்கைல தலைவரோட துப்பாக்கிப் பயிற்சில ஈடுபட்ட போது திடீர்னு தலைல ஒரு எலுமிச்சம்பழம் விழுந்தது. ஒரே ஷாட்ல அத அப்டியே சுட்டு வீழ்த்திட்டாரு நம்ம தம்பு பொட்டு அம்மான். அப்பதான் ஆமைகள் அதிகமா இருகக்றத பார்த்தேன்.

ரஜினி: ஹிமாலயாஸ் போயிட்டு வாங்க. மனசு தெளியும். கைல ஒரு எலுமிச்சம் பழம் வெச்சுக்கோங்க. அப்பப்ப தலைல தேச்சுக்கலாம். 

கமல்: நண்பர் ரஜினி அருமையான கருத்த சொன்னார். தில்லானா போகனாம்பாள்ல நாகேஷ் ஒரே ஒரு எலுமிச்சம்பழத்த வெச்சு பிச்சு ஒதறுவார் பாருங்க.. அதைப்போலவே நானும் குணால ஒரே ஒரு லட்டு வெச்சுக்கிட்டு துவங்கின அந்தப் பயணம் குணா குகைல முடிஞ்சு அநியாயமா இப்ப தக் லைஃப் ஊத்திக்கிச்சேன்னு நினைக்கறப்ப என் மனசெல்லாம் வலிக்குதுன்னு சொல்லுவேன்னு தானே நினைச்சீங்கன்னு நான் கேப்பேன்னு பார்த்தீங்கல்ல ? 

சஷி: Oh my. So, you completed your sentence with a question mark. Excellent. Good going. Make them short, would you ? 

ராஹுல்: ஷார்ட்னு சொன்ன உடனே நினைப்புக்கு வருது. ஹிண்டன்பர்க் ரிப்போர்ட் என்ன ஆச்சு ? அதானிய மோதி காப்பாத்தல்லியா ? 

அ: ஹிடன்பர்க் கம்பெனியே இப்ப இல்லியே ? மூடிட்டுப் போயிட்டாங்களே. 

கமல்: அதைத்தான் சொல்றேன். நம்ம நாட்டுல கம்பெனி நடத்த சுதந்திரம் இல்ல. விருமாண்டிக்கு கால்ல விழுந்த மாதிரி, விஸ்வரூபத்துக்கும் விழுவேன்னு நினைச்சாங்க. ஆனா, நாட்டை விட்டுப் போயிடுவேன்னு அழுது ஆகாத்தியம் பண்ணி நான் இங்கேயே இன்னும் ஓட்டல்லியா ? அது மாதிரி ஹிண்டன்பெர்க் செஞ்சிருக்க உரிமை உண்டா இல்லியான்னு கேட்க எனக்கு உரிமை மறுக்கப்படாதுன்னு நான் நினைக்கறேன்னு நண்பர் ரஜினி சொல்வார். 

ரஜினி: நான் பொதுவா எதுவும் சொல்றதில்லை. ஆனா.. ஒரு தடவே சொன்னா.. ஹ ஹா நூறு தடவே சொன்ன மாதிரி..

சஷி: I dread to imagine Kamal saying something hundred times, for the news papers would run out of space and would have to continue the content that would begin in The Hindu and proceed to fill into Indian Express and who knows might also spill over to the Times of India. 

ராஹுல்: சஷி எது சொன்னாலும் தப்பு. அது கட்சியோட கொள்கை இல்ல. இது கார்கே அங்கிள் சொன்னது. ரமேஷ் அங்கிளும் சொன்னார். 

அ: அப்ப உங்க கட்சிக் கொள்கை என்ன ?

ராஹுல்: அத அம்மாகிட்டதான் கேக்கணும். 

அ: அவங்க யார்கிட்ட கேப்பாங்க ? 

ராஹுல்: சோரோஸ் தாத்தாகிட்ட கேட்டு சொல்லுவாங்க. ஆனா, எனக்குப் புரியாதுங்கறதால சாம் பிட்ரோடா விளக்கி சொல்வார். அப்பறம் நாம் சொல்வேன், அது யாருக்கும் புரியாது. இதுனால தான் அதானி மேல நடவடிக்கை எடுக்கணும். 

கமல்: வர வர நான் பேசறதே புரிஞ்சுடும் போல இருக்குன்னு சொல்லலாம்னு நினைக்கயில, புரியல்லேன்னு சொல்லல, ஆனா புரிஞ்சா நல்லா இருக்கும்னு சொல்லலாம்னு தோணுதுன்னு நினைக்கறேன். 

சஷி: Exclamation mark. That is what I have to give you for your answer Kamal. Your sentences are getting shorter. Kudos. Good going.

அ: அந்த சிந்தூர் பத்தி…

கமல் : அதான் சொல்லிட்டேனேன்னு சொல்லுவேன்னு நீங்க நினைக்கலாம்ங்கறதால மீண்டும் ஒருமுறை சொல்லுவேன்னு நினைக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன்னு நண்பர்கள் பலர் கிட்ட சிந்தூர் பத்தி சொல்லியிருக்கேன்ங்கறத ஞாபகப் படுத்த விரும்பறேன்.

சஷி: Wow Kamal ji. Your sentences end in under a minute of air time. Great effort. However, on Operation Sindhoor, what the government has done is a fantastic job of removing the obfuscations resorted to by the not-so-friendly neighbour who has been actively aided by another of our not-so-equally-friendly neighbour. Having said that.. 

ராஹுல்: ரஃபேல் என்ன ஆச்சுன்னு கேக்கறேன். நான் மட்டும் இல்ல.. கார்கே அங்கிளும் கேக்கறார். சோரோஸ் தாத்தா கேக்கச் சொல்லியிருக்கார். அது தான் எங்க கட்சிக் கொள்கை. சஷி தரூர் சொல்றது அவரோட சொந்தக் கருத்துன்னு அம்மா சொல்லியிருக்கா.

 ரஜினி: எனக்கு செந்தூரப்பூவே பாட்டு ரொம்ப பிடிக்கும். என் நண்பர் விஜயகாந்த் இருந்தா இன்னும் நல்ல இருக்கும். இருக்கறது இருக்காம இருக்காது. இருக்காதது இருக்கவே இருக்காது. ஈது எப்டி இர்க்கு ?

அ: இது அதுக்கு பதில் இல்லையே சார்.. 

கமல்: எதுக்கு எதுதான் பதில்னு தெரியணும்னா, விஸ்வரூபத்துல வர்ற மாதிரி உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல பாட்டுல நான் ஒரு அபிநயம் பிடிச்சிருப்பேன் பாருங்க.. அபிநயாவ இல்லை.. ஹ ஹ  அபிநயம் .. அதைப்போய் இதுல சரஸ முத்ரை இல்லியேன்னு இளையராஜா கேட்டா, அத பத்மா சுப்ரமணியத்துக்கிட்டதான் கேக்கணும்னு கிரேஸி மோகன் சொல்லிட்டுப் போயிட்டார். அவரே போனதுக்கு அப்பறம் எப்பிடி கேகக்றதுன்னு நினைச்சு கேக்காமலே இருந்துடலாம்னு நினைக்கறச்சே.. 

சஷி: C’mon Kamal, you are at it again, the downward spiral of convoluted sentences mixed with incompatible allegories and similes from inconsequential films of varying genre that have neither enthused nor entertained the masses in general and yours truly in particular. 

ரஜினி: அவர நிறுத்தச் சொல்லுங்க நான் கமல நிறுத்தறேன். கமல் தமிழ்ல பேசறத அவர் இங்கிலீஷ்ல சொல்றார். எனக்கு ரெண்டும் புரியல. ஏன்னா, நா ஒரு தடவை சொல்றத நூறு தடவை சொன்னாலும் புரியாது. யாரும் சொல்லவும் மாட்டாங்க. வர்ட்டா..

ராஹுல்: சௌகிதார் சோர் ஹைன்னு சொல்லி ரொம்ப நாள் ஆச்சு. ஒரு தரம் சொல்லிப் பார்க்கலாம்னா தேர்தல் எதுவும் வர மாட்டேங்குது. 

சஷி: What Rahul-ji refers to is the Congress Party’s strategic tactic of uttering completely idiotic and enormously stupid statements at the time of elections so that the BJP wins. Hope I would continue to be in the party after stating the obviously clear and semantically correct words that point to utter hopelessness of the party high command.

ராஹுல்: சஷி-ஜி எப்பவுமே நல்ல செய்திகளைச் சொல்வார். அது அவரோட சொந்தக் கருத்து. ஆனா, இது சொந்தக் கருத்தா இல்லியான்னு அம்மாகிட்ட கேட்டு முடிவு பண்ணனும். நான் அமெரிக்கா போகணும். 

ரஜினி: சிந்தூர் பத்தி கேட்டீங்க. ஹ ஹ. அதிகமா சாப்பிடற ஆம்பளையும், அதிகமா தூங்கற பொம்பளையும் உருப்டதா சரித்திரமே இல்லை. 

அ: ரஜினி சார், ரொம்ப கொழப்புதே.. 

கமல்: கரெக்ட். எங்கிட்ட கேளுங்க. கொழம்பாம, கொழப்பாம சொல்றேன். மக்கள் மீதி மையத்தோட கொள்கையே அது தான்.

சஷி: What is that ?

ராஹுல் :  நம்ம கட்சில இல்லாதது. அதச் சொல்றார் கமல்.

கமல்: எங்க கட்சிலயும் இல்லை. ஏன்னா, எங்க கட்சில ஆளே இல்ல. ஏன்னா கட்சியே இல்ல. ஏன்னா நான் டார்ச் லைட்ட உடைச்சேன். அதால டி.வி.உடைஞ்சது. அதுல கோச்சுக்கிட்டு எல்லாரும் திமுக போயிட்டாங்க. தனியா இருக்க பயமா இருந்ததால் நானும் போயிட்டேன். 

அ: சிந்தூர் பத்தி ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறீங்க. தக் லைஃப் பத்தி சொல்லலமே கமல் ஜி.

ரஜினி: அத அவர் என்ன சொல்றது. தக் லைஃப் – கதம் கதம். முடிஞ்சுது. சும்மா அதிருதில்ல ?

சஷி: Really can’t get what this gentleman, often referred to as Rajini Sir, while the whole world aspires to have ’Sir’ as a prefix, I see you use that as a suffix. What he says and what he means. Kind of paradoxically confusing to say the least.

கமல்: புரியுது. நான் சொல்றேன். அவர் என்ன சொல்றார்னா.. தக் லைஃப்ங்கறது மனித மூளையோட பரிணாம வளர்ச்சி இல்லாத நிலைல இருந்து பார்க்கற, புறவயமான எண்ணங்கள, அக வயமா உற்று நோக்கி ஆழ் தியான நிலைல அமர்ந்தா உங்களுக்குள்ள என்ன இறங்குமோ அது தான் ஒட்டுமொத்த மானுட வளர்ச்சியோட புரிதல்கள் இல்லாத பரிணாம வளர்ச்சி அப்டீன்னு ஜெயமோகன் சொன்னத இப்ப நினைச்சுப் பார்க்கறேன். 

சஷி: I think Rajini was clearer and I understood. But Kamal-ji,  you would definitely have to work on your magnificently spontaneous gargantuan exposition of completely unclear joins of different words in Tamil and reduce those heaps of stupendously stupid heaps of words, also commonly known as garbage, and adopt the spectacularly popular three finger policy of ‘reduce’, ‘reuse’ and ‘recycle’. 

ராஹுல்: எனக்கு சைக்கிள் ஓட்ட தெரியும். மோதி ஓட்டுவாரா ? அம்மாகிட்ட கேட்டா தெரியாதுன்னு சொல்றா.

அ: யாராவது சிந்தூர் பத்தி பேசுவீங்களா ? 

ராஹுல்: நான் பேசுவேன். ஆனா அது கட்சி கொள்கைக்கு எதிரா போயிடும்ங்கற பயம் சஷி தரூருக்கு இல்லாதது போல எனக்கு இருக்குன்னு நினைக்கறதால, ரஃபேல் என்ன ஆச்சுன்னு கேக்கலாம்னு நினைக்கறேன். 

கமல்: ராஹுல் ஜி. நானும் திமுகவுக்குப் போயாச்சு. கட்சில யார் இருக்கப்போறாங்களோன்னு நினைச்சுக்கிடு இருந்தேன். நல்ல நம்பிக்கை வந்துடுச்சு, மக்கள் பாதி மையத்த உங்க கிட்ட குடுத்துடலாம்னு நினைகக்றேன்.

சஷி: That’s fantastic Kamal. Your sentence has subject, object and verb and ends with a period. Great job.

சீமான்: அது என்னங்க வடமொழி பெயர் ? ஏன் பொட்டுன்னு வெச்சா ஆவாதா ? பொட்டு அம்மான் பேர் ஏன் வந்துதுன்னு தெரியுமா ? இப்படித்தான் ஒரு தரம் தலைவரும் நானும் பிரங்கிப் பயிற்சில ஈடுபட்டுக்கிட்டு இருந்த போது .. ஆமா.. நீ எந்த சேனல். கிழிச்சுப்புடுவேன். இத உதயநிதி கிட்ட கேப்பியா ? அப்புறம் எதாவது சொல்லிப்புடுவேன் ஆமா. 

ரஜினி: சிந்தூர். ஹ. நீங்க விரும்பற சிந்தூர், உங்கள விரும்பற சிந்தூர். இதுல எது நல்லதுன்னு நான் அடுத்த படம் ‘காலிப்பய’ல சொல்றேன். வர்ட்டா? 

சீமான்: வாய்ப்பே இல்ல தம்பி. நீ வரவே மாட்டே. நீ மட்டும் வந்தேன்னு வையி, பச்ச மட்ட தான். தெரியுதா. பு ஹா ஹா.

தினமணி : அறிவாளிகள் கூட்டம் இனிதே நிறைவு.

தினமலர்: நால்வர் பேச்சுவார்த்தையில் இழுபறி. கூட்டணி உடைந்தது.

ஹிந்து: Constitution is supreme – Rahul at Podcast meet.

முரசொலி: மாடல் அரசால் தான் நெல்சன் மண்டேலா பதவி பெற்றார் – ராஹுல் பெருமிதம்.

துக்ளக் சத்யா: இந்த வாரம் என்ன எழுதலாம்? 

தில்லி ராஜ கோபாலன்: இந்த நாலு பேரும் என்ன பேசிண்டான்னு எனக்கு அவா பேசிக்கறதுக்கு முன்னாடியே ஐ.பி.லேர்ந்து மெசேஜ் வந்துடுத்து. அத நான் தான் அமித்ஷா கிட்டயே கொடுத்தேன். 

–ஆமருவி

06-06-2025

Leave a comment