இன்று ‘சமஸ்கிருத வாரம்’ துவக்கப்படுகிறது.
இந்த நாளை ஆ..பக்கங்கள் கொண்டாடும் விதமாக பங்கிம் சந்திர சட்டோபாத்யாயாவின் ‘வந்தே மாதரம்’ பாடலின் மூலம் மற்றும் வங்காளப் பாடகர்கள் வாயிலாகப் பாடப்பட்ட பாடல் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
தமிழ் நாட்டில் சில அறிவிலிகள் சமஸ்கிருத வாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துத் தங்கள் காலட்சேபம் நடக்க பிரயத்னப்படுகின்றனர். இவ்வகைப் போலிகள் எப்போதுமே இருந்துள்ளனர்.
திருமங்கை ஆழ்வார் ‘செந்தமிழும் வடகலையும் நவின்ற நாவர்’ என்று இரண்டு மொழிகளிலும் பாண்டித்யம் பெற்ற மனிதர்கள் தமிழர்கள் என்று குறிப்பிடுகிறார். வைஷ்ணவத்தில் பெரியவர்கள் பெயருக்கு முன் ‘உபய வேதாந்தி’ என்பதை ‘உ.வே’. என்று போடுவது வழக்கம். இவர்கள் வடமொழி வேதாந்தம், தமிழ் வேதாந்தம் என இரண்டிலும் சிறந்தவராக இருப்பர் என்ற நிலையினால் ஏற்பட்டது இது.
மொழி குறித்த துவேஷம் தேவை இல்லை. ‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்று பாரதி பாடுகிறான். அவனுக்குக் கலைச் செல்வங்கள் எங்கிருந்து வந்தாலும் தேவைப்பட்டது.
‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்’ என்றும் பாடினான். இப்படிக்கூற அவன் 10 மொழிகள் கற்றிருந்தான்.
‘வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரத மணித்திரு நாடு’ என்பதே ஆ.. பக்கங்களின் நிலை.
वन्दे मातरम्
सुजलां सुफलाम्
मलयजशीतलाम्
शस्यशामलाम्
मातरम्।
शुभ्रज्योत्स्नापुलकितयामिनीम्
फुल्लकुसुमितद्रुमदलशोभिनीम्
सुहासिनीं सुमधुर भाषिणीम्
सुखदां वरदां मातरम्।। १।। वन्दे मातरम्।
कोटि-कोटि-कण्ठ-कल-कल-निनाद-कराले
कोटि-कोटि-भुजैर्धृत-खरकरवाले,
अबला केन मा एत बले।
बहुबलधारिणीं नमामि तारिणीं
रिपुदलवारिणीं मातरम्।। २।।
वन्दे मातरम्।
तुमि विद्या, तुमि धर्म
तुमि हृदि, तुमि मर्म
त्वम् हि प्राणा: शरीरे
बाहुते तुमि मा शक्ति,
हृदये तुमि मा भक्ति,
तोमारई प्रतिमा गडि
मन्दिरे-मन्दिरे
त्वम् हि दुर्गा दशप्रहरणधारिणी
कमला कमलदलविहारिणी
वाणी विद्यादायिनी,
नमामि त्वाम्
नमामि कमलाम्
अमलां अतुलाम्
सुजलां सुफलाम् मातरम्।। ४।।
वन्दे मातरम्।
श्यामलाम् सरलाम्
सुस्मिताम् भूषिताम्
धरणीं भरणीं मातरम्।। ५।।
वन्दे मातरम्।।
தாயே வணங்குகிறோம்
இனிய நீர்
இன்சுவைக்கனிகள்
தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை
மரகதப் பச்சை வயல்களின் மாட்சிமை
எங்கள் தாய்
தாயே வணங்குகிறோம்
வெண்ணிலவின் ஒளியில் பூரித்திடும் இரவுகள்
இதழ் விரித்தெழும் நறுமலர்கள் சொரியும் மரக்கூட்டங்கள்
எழில்மிகு புன்னகை
இனிமை ததும்பும் ஏற்றமிகு மொழிகள்
எங்கள் தாய்
சுகமளிப்பவளே
வரமருள்பவளே
தாயே வணங்குகிறோம்
கோடிக் கோடிக் குரல்கள்
உன் திருப்பெயர் முழங்கவும்
கோடிக் கோடிக் கரங்கள்
உன் காலடிக்கீழ் வாளேந்தி நிற்கவும்
அம்மா ! ‘அபலா ‘#2 என்று உன்னை அழைப்பவர் எவர் ?
பேராற்றல் பெற்றவள்
பேறு தருபவள்
பகைவர் படைகளைப் பொசுக்கி அழிப்பவள்
எங்கள் தாய்
தாயே வணங்குகிறோம்
அறிவு நீ
அறம் நீ
இதயம் நீ
உணர்வும் நீ
எம் தோள்களில் பொங்கும் சக்தி நீ
எம் உள்ளத்தில் தங்கும் பக்தி நீ
எம் ஆலயம் எங்கும் ஆராதனை பெறும்
தெய்வச் சிலைகளில் திகழும் ஒளி நீ
தாயே வணங்குகிறோம்
ஆயுதப் படைகள் கரங்களில் அணிசெய்யும்
அன்னை துர்க்கை நீயே
செங்கமல மலர் இதழ்களில் உறையும்
செல்வத் திருமகள் நீயே
கல்வித் திறம் அருள் கலைமகளும் நீயே
தாயே வணங்குகிறோம்
திருமகளே
மாசற்ற பண்புகளின் மனையகமே
ஒப்புயர்வற்ற எம் தாயகமே
இனிய நீரும் இன்சுவைக் கனிகளும் நிறையும் எம் அகமே
கருமை அழகியே
எளிமை இலங்கும் ஏந்திழையே
புன்முறுவல் பூத்தவளே
பொன் அணிகள் பூண்டவளே
பெற்று வளர்த்தவளே
பெருமைகள் அனைத்தும் அளித்தவளே
தாயே வணங்குகிறோம்
தேசியம் கொப்பளிக்கும் தமிழ் உணர்வு!
LikeLike
Thanks Sir
LikeLike