‘பனுவல்’ என்றொரு புதுமை சென்னையில் நிகழ்ந்துள்ளது. கணிப்பொறித்துறையில் வேலை செய்யும் விவசாயப் பின்னணி உள்ள மூன்று இளைஞர்கள் சேர்ந்து பகுதி நேரமாக ‘பனுவல்’ ( நூல் ) என்னும் ஒரு புத்தகக் கடையை நடத்தி வருகிறார்கள். தமிழ்ப்புத்தகங்கள் மட்டுமே விற்பனைக்கு உள்ளன. நல்ல தரமான நூல்களை அறிமுகப்படுத்துகிறார்கள். திருவான்மியூரில் உள்ள இவர்களது கடையில் ஒரு பகுதியை எழுத்தாளர்களுடன் சந்திப்புகள் செய்யப் பயன்படுத்துகிறார்கள். வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையே பாலமாகச் செயல்படுகிறார்கள்.
சமீபத்தில் சென்னை சென்றிருந்த போது அவர்களில் ஒருவரான அமுதராசன் என்னும் இளைஞசரைச் சந்தித்தேன். அவரது உற்சாகம் தொற்றிக்கொள்ளூம் விதமாக உள்ளது. ‘தடாகம்’ என்னும் பதிப்பகமும் நடத்துகிறார்கள். அதன் வழியாக ‘காடு’ என்னும் சூழியல் தொடர்பான இதழையும் வெளியிடுகிறார்கள். சில பிரதிகளை என்னிடம் கொடுத்தார் அமுதராசன். நல்ல நேர்த்தியான வெளியீடு அது. அவற்றை சிங்கை நூலக வாரியத்திடம் ஒப்படைத்துள்ளேன்.
அத்துடன் அமுதராசன் பின்வரும் செய்தியையும் அனுப்பியுள்ளார். அவசியம் உதவி செய்யுங்கள். இப்பதிவை முடிந்தவரை பகிருங்கள். அமுதராசன் மற்றும் அவரது நண்பர்கள் போல இன்னும் ஒரு சிலர் இருப்பதால் தான் தமிழகத்தில் இன்னும் மழை பெய்கிறது என்பது என் நம்பிக்கை.
———————-
நெய்வேலி தமிழ் சங்கம் கடந்த எட்டு ஆண்டுகளாக நெய்வேலியைச் சுற்றியுள்ள அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பிற்க்கு செல்லவிருக்கும் ’முதல் தலைமுறை – பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள’ 200 கிராமப்புற மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுதோறும் மே மாதம் முழுவதும் கவனம் செழுத்தி, சிறந்த – பொறுப்புமிக்க ஆசிரியர்களின் உதவியால் பாடங்களை நடத்தி வருகிறார்கள். குறைந்த பட்சமாக மாணவ – மாணவிகளை பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற வைப்பதே அவர்களது குறிக்கோளாகும்.
இந்த ஒன்பதாம் ஆண்டில், என்.எல்.சி யின் உதவியின் மூலமாக வரும் மே மாதம் 500 மாணவ-மாணவிகளுக்கு பயிற்றுவிக்க இருக்கிறார்கள். நிகழ்ச்சியின் பொறுப்பாளர்களிடம் உரையாடிய போது, ”காடு இதழ்” மாணவர்களுக்கு ஏற்றதாக இருக்கிறது, “காடு” இதழினை மாணவ-மாணவிகளுக்கு கொடுத்தால், தன் ஊக்கம் பெற்று வாசிப்பு பழக்கத்தை நிச்சயமாக வளர்த்துக் கொள்வார்கள். வாசிப்பு பழக்கம் வந்துவிட்டால் பாடங்களைப் படிப்பதில் சிக்கல் இருக்காது. ஆனால் அப்படி அனைத்து மாணவர்களுக்கும் கொடுக்க தற்போது நிதி போதுமானதாக இல்லை என்று கூறினார். உரையடலின் இறுதியாக நண்பர்கள் மற்றும் புரவலர்களிடமிருந்து உதவி பெறுவது என் தீர்மாணித்தோம்.
ஒரு சிறுவருக்கு, ஒரு ஆண்டு சந்தா ரூ. 250/- மட்டுமே (மற்றவர்களுக்கு ரூ. 300/-) தேவைப்படுகிறது. மொத்தம் தேவைப் படுவோர் 500 மாணவர்கள். தனி நபரால் கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை.. ஆனால் நாம் ஒவ்வொருவரும் இனைந்தால், 500 மாணவர்களுக்கும் வெகு சுலபமாக கொடுக்க முடியும்.
நீங்களும், உங்கள் நண்பர்களும் கொஞ்சம் கொடுத்தால்.. சிறு துளி.. பெரு வெள்ளம் எனபதை மற்றொருமுறையும் நிருபிக்களாம்
காடு இதழ் இணையதளத்திலும் வாசிக்க இயலும் | http://www.magzter.com/IN/Thadagam/KAADU/Animals-and-Pets/
விருப்பமிருந்தால்.. தொடர்புக்கு : பா. அமுதரசன், 9791020127 / காடு இதழ் பொறுப்பாசிரியர்
www.panuval.com அவர்களது வலைத்தளம்.
பனுவல் புத்தக நிலையம்
112, முதல் மாடி, திருவள்ளுவர் சாலை ( ஜெயந்தி சிக்னல் அருகில் )
திருவான்மியூர்
சென்னை 600 041