எத்தனை பேர் !
விபூதி தரித்து, கோபி சந்தனம் இட்டு, திருமண் தரித்து ( இரு கலையும் ) எல்லா உருவ அமைப்புகளிலும் வந்திருந்தனர். 8 – 80 எல்லா வயதினர் யஜுர் உபா கர்மா என்னும் ஆவணி அவிட்ட நிகழ்ச்சிக்கு இன்று தெண்டாயுதபாணி கோவிலில் கூடியிருந்த கூட்டம் பலவாறு சிந்திக்க வைத்தது.
வயது விபரம் இவ்வாறு இருக்கலாம் : 8-15 — 10%, 20-60 — 80%,
வந்திருந்தவர்கள் பெரும்பாலும் வங்கிகள், மென்பொருள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இவற்றில் பணிபுரியும் உயர் வருவாய்ப் பிரிவினர். இன்னும் பலர் சிங்கப்பூரின் பல்கலைக்கழகங்கலில் படிக்க வந்துள்ள தமிழக மாணவர்கள். படித்து முடித்தபின் ஒன்று சிங்கையிலேயே பணிபுரிவார்கள், குடியுரிமை பெறுவார்கள் அல்லது அமெரிக்கா சென்றுவிடுவார்கள்.
பெரும்பாலான நடுத்தர வயதினர் சி.ஏ.வாக இருப்பார்கள். இந்திய சி.ஏ.வுக்கு இங்கு ஏக கிராக்கி. மிகப்பலரும் வங்கிகளில் மேலாண்மைத்துறையில் வேலையில் இருப்பார்கள்.
வருடம் தோறும் நடக்கும் நிகழ்ச்சி தான் என்றாலும் இந்த ஆண்டு பல புதிய முகங்கள் தென்பட்டன. அவர்கள் அனைவரும் பல்கலை மாணவர்கள் என்பது தெரிந்தது. முக்கால்வசிப்பேர் சென்னையைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
சென்ற வருடம் இப்படி ஒரு மாணவர் குழுவிடம் பேச்சுக்கொடுத்திருந்தேன். அவர்கள் அனைவரும் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்கள். மென்பொருள், மின்னணுவியல், ரோபோடிக்ஸ், பொருளாதாரம் முதலியவற்றில் ஆராய்ச்சி. ஒரு ஆர்வம் காரணமாக இம்முறை அக்குழுவைத் தேடினேன். தட்டுப்படவில்லை. இந்தக்குழுவும் அமெரிக்கா சென்றிருக்கலாம்.
இவ்வளவு பெரிய கூட்டத்தின் ஆற்றல் இந்தியாவிற்கு இல்லாமல் ஆகிறது என்பது வருத்தமே.
இந்நிகழ்வு பற்றிய இரண்டு வருஷ பழைய பதிவு இங்கே.