இந்திய எதிர்ப்பு இல்லாத, போலி திராவிட இனவாதப் பேச்சுக்கள் அற்ற, வீண் அலப்பறைகள் இல்லாத, தேசீய நீரோட்டத்தை நோக்கி எழுதப்பட்ட தமிழர் நூல்களுக்கான ஒரு என்ஸைக்ளோபீடியா இந்த நூல்.
அப்படி என்ன உள்ளது இதில்?
- அனைத்துத் தமிழரும் படிக்கவேண்டிய நூல்கள் எவை?
- அந்த நூல்கள் பற்றிய மற்ற பெரிய எழுத்தாளர்களின் பார்வைகள்.
- சில மறைந்த தமிழ்ச் சான்றோரின் படைப்புகள், அவர்களின் தமிழ்த்தொண்டுகள் பற்றிய கட்டுரைகள்.
- சில எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புகள்.
- நாம் இதுவரை அறிந்திராத தமிழ் நூல்கள் பற்றிய கட்டுரைகள்.
- இவ்வகையிலான 108 கட்டுரைகள்.
‘நான் இராமானுசன்’ நூல் எழுதும் முன் இந்த நூல் எனக்குக் கிடைத்திருந்தால் இதன் மூலம் பல பண்டைய நூல்கள் பற்றிய விபரங்கள் எனக்கு எளிதாகக் கிடைத்திருக்கும். ஒவ்வொன்றிற்கும் தேடி அலைந்திருக்க வேண்டியதில்லை.
இப்படி ஒரு நூல் இது நாள் வரை எழுதப்படாமல் போனது நமது துரதிருஷ்டமே.
இப்படி ஒரு நூலைத் தொகுத்தளித்த ஆசிரியர் சுப்பு அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.