புலி நகக்கொன்றை, கலங்கிய நதி முதலான நாவல்களின் ஆசிரியர், மார்க்சீய அறிவுஜீவி, கம்ப இராமாயணத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட திரு பி.ஏ.கிருஷ்ணன் அவர்களின் மதிப்புரை (பேஸ்புக்)
இரண்டு இராமானுஜர்கள் இருக்கிறார்கள். வடமொழி நூல்கள் எழுதி அவற்றின் வாயிலாக நாம் அறிந்து கொண்டிருக்கும் ராமானுஜர் ஒருவர். மற்றவர் வைணவக் குருபரம்பரைக் கதைகள் வாயிலாக நமக்குக் கிடைத்திருப்பவர். மக்களுக்கு நெருக்கமானவர் இரண்டாமவர்தான். இந்த இரண்டு ராமானுஜர்களையும் இணைத்து அவரது தத்துவம் என்ன என்பதை மிக எளிய முறையில் கதை போன்று சொல்லப்படும் புத்தகம் ஆமருவி தேவநாதனின் “நான் இராமானுசன்’. இதில் தத்துவம் அதிகம். கதை குறைவு. ஆனால் தத்துவம் மிகத் தெளிவாக வைணவ மரபைச் சார்ந்து விளக்கப்படுகிறது. அத்வைதத்தை ஏன் அவர் மறுக்கிறார் என்பதும், பௌத்த, சமண, சார்வாக நிலைப்பாடுகளை அவர் ஏன் எதிர்க்கிறார் என்பதும் காட்டப்படுகிறது. இந்தியத் தர்க்கமுறை எப்படி கருத்துக்களை அணுகுகிறது என்பதும் புத்தகத்தைப் படித்தால் விளங்கும்.
இஸ்லாம் பற்றி இராமானுஜர் பேசுவதாக அமைந்தவை மட்டும் வலுவாகத் திணிக்கப்பட்டிருக்கின்றன. இஸ்லாமியத் தத்துவம் என்ன என்பதை அவர் தெரிந்து கொண்டிருக்கும் வாய்ப்பே இல்லை. குருபரம்பரைக் கதைகளில் அவர் தில்லி சென்றதாகச் சொல்லப்பட்டதெல்லாம் முழுவதும் கற்பனை.
மற்றபடி நல்ல எளிமையான தமிழில் எழுதப்பட்டிருக்கும் புத்தகம். ராமானுஜரின் தத்துவம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புவர்களுக்கு இது மிகச் சிறந்த முதற்புத்தகம்.
‘நான் இராமானுசன்’ book is available for sale from Dial for books. Call this number and they will send the book to your doorstep. +91-9445 97 97 97 (Do send your review once you read)
Can I mail order the book?
LikeLike
https://www.nhm.in/shop/1000000025530.html
[image: –]
Amaruvi Devanathan
[image: https://%5Dabout.me/amaruvi
LikeLike