நமக்கெல்லாம் வரலாற்றுப் பாடங்களில் வராதவை, நமது கண்களில் இருந்து மறைக்கப்பட்டவை பல. இவற்றுள் முக்கியமான சிலதைப் பற்றியாவது நாம் அறிந்துகொள்வது அவசியம். அதற்கான முயற்சியே இந்த நூல்.
ராஜ ராஜ சோழன் படை எடுப்பின் போது மக்களைக் கொன்றானா? ஆயுதமேந்தாத துறவிகளைக் கொன்றானா? அப்படிச் செய்யவில்லை என்றால் அவனைத் தடுத்தது எது? ஆனால் கஜினி முகமது செய்தது என்ன? அவனைத் தடுக்காதது எது?
வளர்ச்சிப்பாதையில் நாடு செல்லும் போது இயற்கை அழிகிறதா? அப்படி அழியாமல் வளர வழி உண்டா? இந்திய அரசுகளில் எந்த அரசு அப்படிச் செய்தது? அப்படி அதனைச் செய்ய வைத்தது எது?
மரபணு மாற்றப் பயிர்களால் ஏற்படுவது என்ன? இதற்கும் ஜுராசிக் பார்க் திரைப்படத்திற்கும் என்ன தொடர்பு?
பஞ்சகவ்யம், ஈ.வெ.ரா., சோவியத் அரசு – இந்த மூன்றும் ஏதொ ஒரு புள்ளியில் இணைகின்றன. அது எது?
இந்திய, தென் அமெரிக்க உணவு, மருந்து வகைகள் அழிந்தது / அழிவது எப்படி? ஏன்?
அயோத்தி இராமர் கோவில் – அதன் பின்னணியில் நடந்த இடதுசாரிப் பம்மாத்துகள் என்ன?
ஐன்ஸ்தேன் நம்பிய கடவுள் எது அல்லது யார்? அறிவியலுடன் கூடிய ஆன்ம தரிசனம் எது? அது என்னவானது?
தமிழ்மொழி, குமரிக்கண்டம் – புனைவா, பித்தலாட்டமா அல்லது பகுத்தறிவா?
‘தீ மிதித்தல்’ என்னும் ‘காட்டுமிராண்டிச் சடங்கு’ சொல்வது என்ன? இன்று அதன் பயன்பாடு எப்படி உள்ளது? இந்தச் சடங்கால் மனித உடலுள் / மனதுக்குள் ஏற்படும் மாறுதல்கள் யாவை? இதற்கும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் என்ன தொடர்பு? இதற்கான விடையும் இந்த நூலில் உள்ளது.
யூதர்கள் உலகை ஆட்டிப்படைக்கிறார்களா? உண்மை என்ன? யூதர்கள் மேல் எல்லாவற்றிற்கும் பழி போட வேண்டிய காரணம் என்ன? யாரெல்லாம் அப்படிப் போட்டார்கள்? ஏன்?
பாகிஸ்தானுக்கும் ஹிட்லருக்கும் உள்ள தொடர்பென்ன? யூத வெறுப்பு என்னும் நேர்கோட்டில் பாகிஸ்தானும், யூத வெறுப்பின் காரணியான அல் ஹுசைனும் எப்படிப் பயணிக்கிறார்கள்? யூத வெறுப்பு என்பது இந்தியாவில் பரவியுள்ளதா? எப்படி?
சோவியத் யூனியன் என்னும் மாபெரும் அரக்கன் செய்த இயற்கை அழிப்புகளில் முக்கியமான வேளாண் அழிப்பு எப்படி நடந்தது? ஏன்? இயற்கையையும் அதன் விதிகளையும் கம்யூனிசம் பார்க்கும் பார்வை என்ன? இயற்கையையும் அதன் விதிகளையும் கம்யூனிச சித்தாந்தத்திற்குள் கொண்டு வர வேண்டிய நிர்பந்தம் என்ன? இவற்றுக்கான விடை இந்நூலில் உள்ளது.
இந்திரா பார்த்தசாரதியின் அவுரங்கசீப் நாடகத்தை இப்போது சென்னையில் மேடையேற்ற முடியுமா? சூபி சம்பிரதாயம் எப்படிப்பட்டது?
இப்படியான பல கேள்விகளை எடுத்துக்கொண்டு, மின்னல் வெட்டு போன்ற சான்றுகளுடன், கன்னத்தில் அறைந்தது போன்ற அதிர்ச்சி உண்டாக்கும் உண்மைகளின் அணிவகுப்பே ‘நம்பக்கூடாத கடவுள்’ என்னும் நூல்.
ஒன்றோடொன்று தொடர்பற்றதாகத் தோன்றும் பல விஷயங்களை இணைப்பது மானுட பிரபஞ்ச ஒருமை குறித்த பரந்த அறிவு. இந்த தொடர்பில்லாத தலைப்புகளின் இடையிலும் மானுட அறம் என்னும் ஒரு மெல்லிய சரடு செல்வதை ஊன்றிப் படித்தால் உணரமுடியும். மானுட அறம் அல்லது தன்னறம், மொழிகளைக் கடந்த, பண்பாடுகளைக் கடந்த ஒன்று என்று நாம் அறிகிறோம். இந்த அறம் காலங்கள் தோறும் எப்படி ஒரே மாதிரியாக இருக்கிறது என்பதையும் இந்த நூலைப் படித்தால் உணரலாம்.
பாரதத்தில் தெளிவாகச் சிந்திக்க இன்னும் சிலர் இருக்கிறார்கள் என்று நிரூபிக்கிறார் ஆசிரியர் அரவிந்தன் நீலகண்டன்.
‘நம்பக்கூடாத கடவுள்’, கிழக்கு பதிப்பகம். பக்கங்கள் 160. விலை ரூ 130.
சுவாரசியமான, படிக்கவேண்டிய நூல் எனத் தெரிகிறது உங்களுடைய பதிவிலிருந்து. நன்றி
LikeLike
thank you.
LikeLike