The side that is not spoken about, generally.

‘பிரும்மாஸ்திரம்’ – இதற்கான தமிழ்ச்சொல் என்ன ?

இப்படி ஒரு முயற்சி செய்து பார்க்கலாம்.

‘வாளி’ என்னும் சொல் ‘அம்பு’ என்னும் பொருளில் பல பாசுரங்களில் வருகிறது.

#தேரழுந்தூர் பாசுரத்தில்

‘சிரங்கள் ஐயிரண்டும் உம்பர்வாளிக்கு இலக்காக உதிர்த்த உரவோன்..’ என்கிறார் திருமங்கை ஆழ்வார்.

இராமன் இராவணனை அழித்ததை இவ்வரி உணர்த்துகிறது.

‘உம்பர்’ என்பது தேவர் என்று நாம் அறிவோம். ‘உம்பர்வாளி’ என்பது தேவர்களின் அஸ்திரம் – வஜ்ராயுதம் – என்பது போல் தோன்றினாலும், அப்படி ஒன்று இல்லை என்று வியாக்கியானம் சொல்கிறது.

‘இந்திராதிகளுடைய வஜ்ரத்துக்கு அழியாத பையல் தலைகளை, மனிச்சுக்கு ஏகாந்தமான மிடுக்காலே அழித்தான் ஆய்த்து’ என்பதாக வியாக்கியானகர்த்தா சொல்கிறார். ஆக உம்பர்வாளி என்பது வஜ்ராயுதம் இல்லை.

ஆகையால் உம்பர்வாளியை ‘பிரும்மாஸ்திரம்’ என்று கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

வேறு சொற்கள் இருந்தால் அறிஞர்கள் தெரியப்படுத்துங்கள்.

#பாசுரச்சுவை

One response

  1. nparamasivam1951 Avatar
    nparamasivam1951

    உம்பர்வாளி தான் சரியான சொல்லாக தெரிகிறது.

    Like

Leave a comment