தமிழில் மின் நூல்கள் – புதிய தொழில் நுட்பங்கள் வழியான பார்வைகள் என்னும் தலைப்பில் தொழில் நுட்ப வல்லுநர் திரு.குணசேகரன் ஆழமான, வெளிப்படையான, செயல்முறை விளக்கங்களுடனான சொற்பொழிவாற்றினார். எதிர்காலத்திற்கான மின் புத்தகங்கள் எழுத்துக்கள் மட்டுமே கொண்ட இரு பரிமாணங்களில் இல்லாது காணொளி, தொடர்புத்தன்மை (Interactivity) கொண்டவையாக இருக்கும் என்பதைச் செயல்முறை விளக்கங்களுடன் அளித்தார் திரு.குணசேகரன்.
‘ஏதாவது புதிய தொழில் நுட்பம், மென்பொருள் வந்தால் உடனே அதில் எப்படித் தமிழைக் கொண்டுவருவது என்று யோசித்து, அம்மென்பொருளை உருவாக்கும் நிறுவனங்களுடன் பேசத்துவங்குவேன்’ என்று சொல்லும் இவரைச் சிங்கை மற்றும் உலகெங்கும் உள்ள தமிழ்ச் சமூகம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டு தமிழ்வழியில் புத்தாக்க முயற்சிகளைச் செய்துவரும் திரு குணசேகரன் நமக்கெல்லாம் ஒரு வரப்பிரசாதம்.
பின்னர் பேரா.அருண் மகிழ்நன் அவர்கள் பங்குபெற்ற ஆழமான, அவசியமான, நேரடியான கலந்துரையாடல் நடைபெற்றது. அடுத்த தலைமுறைக்குத் தமிழைக் கொண்டுசெல்லும் முயற்சியில் திரு.மகிழ்நன் ஆற்றி வரும் பணி நாம் அறிந்ததேயாயினும், அவரது பல சீரிய கருத்துக்களைச் செவிமடுத்தால் நாம் செல்லும் தூரம் அதிகமாகும்.
நிகழ்வு தொடர்பான காணொளிகள்:
நிகழ்வு தொடர்பான காணொளிகள்:
நம் குணசேகரன் தமிழ் புரிந்து இசை வளர்க்கும் நீண்ட கால உழைப்பாளி! இருபது ஆண்டுகளுக்கு முன் அவர் பாடிய பழைய வசந்தம் நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது நாம் பிரமிக்கிறோம். அத்தகைய கலைஞர், நவீனங்களின் வளர்ச்சி புரிந்து மொழி அரவணைப்போடு முன்னேறி வருபவர். நிச்சயம் அவருக்குத் தேவை .மேலும் ஆதரவு! அவர் மொழியில் நாட்டம் காட்டுவது நம் அதிர்ஷ்டம்! –ஏ.பி.ஆர்.
LikeLike