புதியவரே,
ஆழ்வார்களும் நாயன்மார்களும் நடந்து, அவர்கள் கால் தூசி படிந்த தமிழகத்தில் புதிய முயற்சி செய்வதாகக் கூறியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
உங்களுக்குச் சில யோசனைகள். தேர்தல் அறிக்கையில் இவற்றை இடம் பெறச் செய்து 40 ஆண்டுகால இருளை அகற்றுங்கள்.
தமிழகக் கோவில்கள்:
- அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விலக்கம்
- கோவில் நிலங்களைக் கோவில்களுக்கே மீட்டுக்கொடுத்தல்.
- கோவில் நிலங்களின் குத்தகை வசூல் விபரங்கள், வாடகை செலுத்தாதவர்கள் பட்டியல் வெளியிடுதல்.
- திருட்டுப் போன விக்கிரங்களை / பொக்கிஷங்களை மீட்க தனி அமைச்சு
- கோவில் திருட்டுக்கு பிணையில் வர முடியாத 14 ஆண்டுகள் காவல் தண்டனை
- கோவில்களில் நுழைவு வரி ரத்து
அரசுப் பள்ளிகளில்:
- ஆசிரியர்களுக்கு மின்னிலக்கக் கைரேகை வருகைப் பதிவேடு
- அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறை
- ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கணினி வழித் தகுதித் தேர்வு
- ஆய்வறிக்கை சமர்ப்பித்தால் மட்டுமே பதவி உயர்வு
- ஆராய்ச்சியின் மூலம் முனைவர் பட்டம் பெற்றால் தான் பள்ளி முதல்வர் பதவி
- சி.பி.எஸ்.ஈ. க்கு இணையான மாநிலப் பாடத் திட்டம்
- மாவட்டங்களில் நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி
போக்குவரத்து:
- போக்குவரத்து மீறல் சிறைத் தண்டனைக்குரிய சட்டமாதல்
- ஓட்டுனர் உரிமம் பெறுவது பயிற்சி / சோதனை அடிப்படையிலேயே
- ஆதார் அட்டையை ஓட்டுனர் உரிமத்துடன் இணைப்பது
- பெண்களுக்கெதிரான குற்றங்களுக்குப் பிணையில் வர முடியாத தண்டனை
அரசூழியர்கள்:
- கையூட்டு பெறும் அரசூழியர் உடனுக்குடன் பணி நீக்கம், சிறைவாசம், சொத்து பறிமுதல்
- தினமும் பார்த்த / முடிவெடுத்த கோப்புகள் விபரம் இணையத்தில் வெளியீடு
- சம்பள உயர்வு செய்த வேலையை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே
- பணி நிரந்தரம் இல்லை என்ற அறிவிப்பு
- தனியார் துறையின் திறமையாளர்கள் அரசூழியர்களாவது
வீடு / வீட்டு மனைகள்:
- ஏரிகளில் வீடுகட்டுவது 14 ஆண்டுகள் காவல் தண்டனைக்குரிய குற்றமாதல்
- வீடு கட்டும் ஒப்புதல் ஆன்லைனில் நடைபெறுதல்
- வீடுகளை ஒப்படைக்காத நிறுவனத் தலைவர்களுக்கு சிறைத்தண்டனை
- வீடு / நிலம் விற்பனை காசோலைகளில் மட்டுமே நடைபெறுதல்
காவல் துறை:
- கையூட்டு பெறுவது = உடன் பணி நீக்கம் + சொத்து பறிமுதல்
- மனித உரிமை மீறல் = உடன் பணி நீக்கம் + 14 ஆண்டுகள் சிறை
- காவலர்களுக்கு வாரம் ஒருமுறையாவது ஒரு நாளாவது முழு ஓய்வு
- காவலர்களுக்குப் பணியிடங்களில் கழிவறை வசதிகள்
- காவலராகத் தேர்வாவதைக் கடினமாக்குவது = பணியில் பெருமை
- காவலர் சம்பளம் உயர்வு
பொது:
- மொழி, மதம், சாதி இவற்றின் பெயரால் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் நபர்கள் / நிறுவனங்கள் தடை + கடும் சிறைத் தண்டனை
- திரைப்படத்துக்கு வரி விலக்கு என்னும் கீழ்மையை நீக்குதல்
- 4-5 தெருக்களுக்கு ஒரு நூலகம்
இவை சாத்தியமா என்கிற கேள்வி எழலாம். இவற்றை நடைமுறைப்படுத்த சில வழிகள் உள்ளன. பல நாடுகளில் இவ்வாறே நடைபெறுகிறது. உங்களின் அபிமான தலைவர் லீ குவான் யூ இவ்வாறு பலவற்றைச் செயல்படுத்தியுள்ளார். மேலும் தெரிந்துகொள்ளத் தொடர்புகொள்ளுங்கள், விவரங்கள் அளிக்கிறேன்.
நன்றி
ஆமருவி
அருமையான யோசனை கள் நண்பரே. The HRE board was constituted by a committee under the chairmanship
Dr sir C P Ramaswamy Iyer. The private trustees indulged in lot of malpractices and hence the board
LikeLike