சொல்லொணாத் துயரம் வரழைத்த நிகழ்வு. கடும் கண்டனமும் தண்டனையும் அளிக்கப்பட வேண்டிய செயல். கன்னியாஸ்திரீகள் ஶ்ரீரங்கம் கோவிலுகுக்குள் சென்று ஜெபம் செய்ய முயன்றுள்ளார்கள் என்னும் செய்தி உண்மையெனில் தவறிழைத்தவர்கள் கண்டறியப்பட்டு நாட்டின் சட்டத்தின்படி தண்டிக்கப்பட வேண்டும்.சமூக,மத நல்லிணக்கம் ஒருபோதும் ஒருகை ஓசையன்று.
சென்ற வாரம் தஞ்சையில் பெருவுடையார் கோவில் உற்சவத்தில் கலகம்,இன்று இவ்வாறு ஒரு நிகழ்வு.எஸ்றாசற்குனம் முதலான அரசியல் ஆட்கள் எதையாவது கொளுத்திப் போட்டுவிட்டுச் சென்றுவிடுவார்கள்.அப்பேச்சுக்களைஉண்மையென நம்பி சாதாரண மக்கள் செயலில் இறங்கினால் பாதிப்பு அப்பாவி மக்களுக்கே.
கோவிலில் யாராகிலும் இவர்களிடம் (உணர்ச்சி மேலீட்டால்)வன்முறையில் இறங்கியிருந்தால், பெண்களிக்கெதிரான வன்முறையென்ற பழி ஏற்படுத்த வேண்டும் என்று சமூக விரோதக் கும்பல்கள் நினைத்திருக்கலாம்.கலகத்தால் குளிர் காயும் கயவர் நிறைந்த பூமியாகத் தமிழகம் மாறிவருவது வேதனையே.
ஶ்ரீரங்கம் நிகழ்வில் கோவில் என்று தெரியாமல் வந்துவிட்டோம் என்பதாக அப்பெண்கள் சொல்லியிருக்க மாட்டார்களாஎன்று ஒரு பக்கம் மனம் விரும்புகிறது.ஆனால் எஸ்றாசற்குணம் முதலான சமூக விரோத நபர்களைத் தலைமைப் பீடத்தில் கொண்ட சமூகம் ஆழம் பார்க்கப் பயன்படுத்தப் படுகிறதோ என்கிற எண்ணம் உள்ளத்தில் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.
சமய நல்லிணக்கம் தேவையென்பதால் கன்னியாஸ்திரீகள் கோவிலின் உள்ளே சென்றால் என்ன என்று பகுத்தறிவாளர் கேட்கலாம்.துலுக்க நாச்சியார் சன்னிதி இருப்பது உண்மைதான்.ஆனால் அது பக்தியால்,தியாகத்தால் ஏற்பட்ட சன்னிதி.அதற்கு நெடியதொரு வரலாறு உண்டு. துலுக்க நாச்சியாருக்காக அரங்கன் கைலி உடுத்திக்கொண்டு,ரொட்டி கண்டருளப் பண்ணுவது என்று ஒரு உற்சவமும் உண்டுதான்.ஆனால் அதில் தன்னைஅர்ப்பணித்த தியாகம் உள்ளது,ஆச்சாரியர்களின் அனுமதியுடன் ஆயிரம் ஆண்டுகளாக அது நடந்து வருகிறது.
இன்றைய கன்னியாஸ்திரிகள் செயல் அவ்வாறானதன்று. மதத் தலைவர்கள்,மிகுந்த பொறுப்புடனும்,எச்சரிக்கையுணர்வுடனும்,சமூக நலனில் அக்கறைகொண்டு செயலாற்ற வேண்டிய தருணம் இது.
பல்சமய சகிப்புத் தன்மையைச் சோதித்துப் பார்க்கும் நேரம் இதுவன்று.
சிங்கப்பூரில் ஒரு பேச்சு வழக்கு உண்டு-Racial harmony was not attained in a day. பல தலைவர்கள் பல்லாண்டுகள் உழைத்து மக்களிடம் ஒற்றுமையையேற்படுத்தினார்கள்.ஆனால் சிறு பொறியும் பெரும் தீயாகப் பிடித்துக் கொள்ளும் அபாயம் உண்டு என்பதால் பெரும் பதவிகளிலும்,அதிகாரத்திலும்,சமயத் தலைமைஇடங்களிலும் இருப்பவர்கள் அளப்பரிய பொறுப்புடன் பேசுவார்கள்,நடந்துகொள்வார்கள். ஏனெனில் ஒற்றுமை,அமைதி இல்லையெனில் பெரும் வீழ்ச்சியேஏற்படும் என்பதைஅனைவரும் உணர்ந்திருப்பதால்.ஒரு சமூகம் முன்னேற இதுபோன்ற அணுகுமுறைஅவசியம்.இது தமிழகத்திற்கும் பொருந்தும்.
மாநிலத்தையும் தேசத்தையும் முன்னேற்றுவதற்குச் செய்ய வேண்டிய செயல்கள் பலதுண்டு.கலகம் விளைவிக்க ஓரிரு செயல்களே போதுமானது.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு,நம்மில் ஒற்றுமைநீங்கில் அனைவர்க்கும் தாழ்வு.