‘Sir, you have disappointed me. Why did you do this? Why didn’t you write about this? I am crying daily. Can’t overcome the loss. Never expected this from you..’
இப்படி ஒரு வாட்சப் அனுப்பியிருந்தார் நண்பர்.
வழக்கம் போல் நேரம் கழித்தே பர்த்தேன். புரியவில்லை. ‘What is this about?’ என்று கேட்டு அனுப்பினேன்.
சரியாக 2 நிமிடங்கள் கழித்து என் முன் தோன்றினார் அவர். ‘இல்ல புரியலையா. பாலா தான். நீங்க ஒண்ணுமே எழுதலையே. எல்லாம் முடிஞ்சு போச்சு சார். நான் போயிட்டேன். இனி எப்ப வெளில வருவேன்னு தெரியல..’ சொல்லிக்கொண்டே அவர் சென்றுவிட்டார். உடனிருந்த மற்றொரு நண்பர் சொக்கநாதன் ‘என்ன விஷயம்?’ என்றார். ‘பாலகுமாரன்’ என்றேன் நான்.
2 மணி நேரங்கள் கழித்து அழைத்தவர் சுமார் 20 நிமிடங்கள் அழுதுகொண்டே பேசினார்.
‘எங்கப்பா சார் அவர். பத்து அப்பா அவர். எங்கப்பா செத்திருந்தா கேட்டிருப்பீங்கல்ல? பத்தப்பா போனதுக்கு நீங்க கேக்கல, எழுதவும் இல்லை. நான் செத்து சுண்ணாம்பா போயிருப்பேன் சார். சீரழிஞ்சு கம்யூனிஸ்டா போயிருப்பேன். பாலாவால இன்னிக்கி நிக்கறேன் சார்.
‘இத்தன வருஷத்துல போய் பார்த்ததும் இல்லை. வருஷாவருசம் இந்தியா போகும் போதும் பார்க்கணும்னு நினைப்பேன். ஆனா, போகமாட்டேன். போயிட்டார்னு சொன்னவுடனே டிக்கெட் புக் பண்ணிட்டேன். பாஸ்போர்ட் நம்பர் கேட்டப்பதான் எம்பஸில ரின்யூவல்ல இருக்குன்னு ஞாபகம் வந்தது. நான் மட்டுமில்ல சார், எத்தனையோ லட்சம் பேர் இன்னிக்கி டிரக் அடிக்ட், வழி தவறினவங்களா இல்லாம இருக்கறதுக்கு அந்தாள் தான் காரணம்.
‘ஆயிடுச்சா ஆயிடுச்சான்னு வாட்சப்புல கேட்டுக்கிட்டே இருந்தேன். ஆனப்புறம் பாயசத்தோட சாப்டேன். எங்கசார் போயிட்டார் அவர்? இங்கதான் சார் இருக்கார். ஆனா முடியல சார், போயிட்டாரே சார். எங்கப்பா போயிட்டாரே சார்.’
5 நிமிடப் பேச்சு, மிச்சதெல்லாம் அழுகை. ஐரோப்பிய வங்கியில் உயர்ந்த நிலையில் இருக்கும் நண்பர், பால குமாரனின் இழப்பைத் தாங்க முடியாமல் இன்னமும் கதறிக்கொண்டிருக்கிறார்.
‘நீங்க ஏன் இன்னும் எழுதல?’ என்ற கேள்வி துளைத்துக் கொண்டிருந்தது. அவருக்குச் செய்யப்பட்ட ஒரு அநீதி மனதில் தணலாய்க் கனன்றுகொண்டிருக்கிறது. அதை நிவர்த்தி செய்வதே நான் அவருக்குச் செய்யும் அஞ்சலியாகும் என்று சொன்னேன்.
பாலகுமாரன் – கல்லூரி நாட்களில் அறிமுகமானவர். அவரது இரும்புக் குதிரையையும், தி.ஜானகிராமனின் மரப்பசுவையும் நண்பர்கள் மத்தியில் ஒப்பிட்டுப் பேசியுள்ளோம். அவரது மெர்க்குரிப் பூக்கள் அளித்த அதிர்ச்சியைப் பல நாட்கள் கழித்தும் உணர்ந்திருக்கிறேன். உடையார் தொகுதி மேக்னம் ஓபஸ் என்னும் வகைக்குள் அடங்கும். அவர் அறிமுகப்படுத்திய பாலா திரிபுர சுந்தரியைப் பல நாட்கள் கனவில் கண்டு பேசியுள்ளேன்.
1999ல் ஒரு முறை எல்டாம்ஸ் சாலை சிக்னனில் நிற்கும் போது அவர் ஸ்கூட்டரில் அடுத்தபடி நின்றுகொண்டிருந்தார். என்ன பேசுவது என்று தெரியாமல் ‘நமஸ்காரம் சார்’ என்றேன். ‘ராம் சூரத் குமார் உன்னை ஆசீர்வதிப்பார்’ என்று சொன்னார்.
உறங்காவில்லி தாசர் பற்றிய பாலகுமாரனது படைப்பை நான் இருமுறை படித்து அனுபவித்திருக்கிறேன்.
எனக்கும் அவருக்குமான விலகல் அவரது ஆன்மீகப் பாதை என்னிலிருந்து வேறுபட்டதில் துவங்கியது.
தேசிய அளவில் புகழப்படாத, மாநில அளவில் பல்லக்கில் சுமக்கப்படாத எழுத்தாளராகவே இருந்து மறைவார் என்ற எண்ணம் வலுவாகவே இருந்து வந்தது. காரணங்கள்:
- மனதில் இருப்பதை எழுதுவார்.
- நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
ராஜராஜன், ராஜேந்திரன் பற்றிய பேச்சு எப்போது வந்தாலும், பாலகுமாரன் என்றுமே நினைக்கப்படுவார் என்பது மட்டுமே நிரந்தரம்.
அவர் காலமான மறு நாள் அலுவலகத்தில் ‘பாலகுமாரன் காலமாயிட்டார்’ என்றேன். ‘ஆமாம். டி.வி.ல சொன்னான். ரஜினி கூட வந்தாராம். பாட்சா டயலாக் இவருதாமே. கமல் போகல்லியாமே, அவருக்கு இவர் ஒண்ணுமே எழுதல்லியா?’ என்றார் செல்போனில் நோண்டிக்கொண்டிருந்த அந்த நபர்.
நமக்கு வைரமுத்து, மனுஷ்ய புத்ரன் போன்ற “சிந்தனைச் செல்வர்கள்” போதும் என்று நினைத்துக் கொண்டேன்.
Last line nethiadi
LikeLike
Thank you.
LikeLike