கர்நாடக சங்கீத வித்வான்கள் வேண்டியதை/வேண்டியவர்களைப் பாடிக் கொள்ளுங்கள்.உங்களுக்கு அதற்கு உரிமை இருக்கிறது. ஆனால் தியாகராஜ ஆராதனைக்கு வராதீர்கள். மடங்களின் ஆஸ்தான வித்வான்/விதூஷி பட்டங்களைத் துறந்துவிடுங்கள். எதற்கு மடங்களுக்கு அவமரியாதை? பேசுவது மானம் இடைப் பேணுவது காமம் என்பது வேண்டாம்.
இனி சங்கீத சாம்ராட், சங்கீத சிரோன்மணி, என்று பட்டங்களைச் சமயப் பெரியவர்கள் அளிக்கும் முன் ஏதாவது ஒப்புதல் வாங்கிக் கொண்டு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். ‘அரங்கனைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே’ என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை சங்கீத உலகின் பதிவ்ரதா பாவமும்.
இசை என்பது ஏதோ ஸ்வர, தாள ஸங்கமம் மட்டும் அன்று. இசை இறைப்பணி. இறை மாற்றமுடியாதது. பாடப்பட்டவரும் மாற்றப்பட முடியாதவர். மாற்றிக் கொண்டிருக்க கர்நாடக சங்கீதம் மைக்கேல் ஜாக்ஸனின் காக்காய் வலிப்புச் சத்தங்கள் இல்லை.
ஆழ்வார்களின் பாடல்களைக் கேட்க வேண்டும் என்று பெருமாள் காத்திருந்து கேட்டுள்ளார். திரு இந்தளூர் பாசுரத்தில் பெருமாள் எழுந்து வரவில்லை என்பதால் ‘வாழ்ந்தே போம் நீரே’ என்று ஆழ்வார் வெளியேறிச் செல்ல, பெருமாள் எழுந்துவந்து ‘உம் பாசுரத்தைக் கேட்கவே கண்மூடிச் சயனித்திருந்தேன்’ என்று சொன்னது உண்மை.
திருவழுந்தூரில் திருமங்கையாழ்வார் பெருமாளை யாரோ அரசன் என்று எண்ணிப் பாடாமல் செல்ல, பெருமாள் பூ மாலையினால் ஒரு விலங்கை உருவாக்கி ஆழ்வாரின் கால்களைக் கட்டி மேலே செல்லாமல் செய்தான். விளைவு ‘தந்தை காலில் பெருவிலங்கு தாளவிழ’ என்னும் பாசுரம். இங்கு ஆழ்வார் சன்னிதி கோவிலுக்குள் இல்லாமல் வெளியே உள்ளது. ஆழ்வார் கோவில் என்று ஒன்று ஏற்பட்டு பிரபந்த பாராயணங்கள் அங்கிருந்தே துவங்குகின்றன. ஆழ்வார் வாக்கைக் கேட்கப் பெருமாள் திருவுள்ளம் கொண்டதால் பல பாசுரங்கள் கிடைக்கப்பெற்றன. ‘பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள் / விரித்துக் கொள்’ பாசுரங்களில் ஆழ்வாரின் வாக்கிற்கிணங்க பெருமாள் நடக்கிறான். திருவரங்கத்தில் பெருமாளே மணவாள மாமுனிகளிடம் செய்யுள் கேட்டுள்ளார்.
இவற்றை நம்பிக்கை என்று புறந்தள்ளலாம். ஆனால், நம்புபவர்கள் மட்டுமே பாட வேண்டும்.
கர்நாடக வித்வான்களே, நீவீர் யாரையும் பாடுங்கள், என்னவேண்டுமானாலும் செய்து போங்கள்.உங்கள் செக்யூலரிஸ பைத்தியத்தில் எங்கள் நுண் உணர்வுகளுடன் விளையாடாதீர்கள்.
எச்சரிக்கையெல்லாம் இல்லை. வேண்டுகோள். பாகவத அபசாரம் மஹா பாவம். அவ்வளவுதான். இதிலும் உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் உங்கள் ப்ராரப்த கர்மா என்று நினைத்து உங்களுக்காகப் பிரார்த்தனை செய்வது தான் என்ன்னால் முடிந்த செயல்.
சுபம்.
செக்கூலர் செக்கூலர் என இந்த பைத்தியங்கள் இந்துக்களிடம் மட்டும் வீரதீர செயல்கள்.
கோடாரிக் காம்புகள். பெயர் கிடைக்கும் வரை இந்துக்கள் வேண்டும்.
சிறிது பெயர் பெற்ற பின் செக்குலர், பிற்போக்கு என உபதேசம்.
பகுத்தறிவுகளே இப்போது அவற்றை ஓரம் கட்டும் போது….
LikeLike
இப்படி புலம்பும் அளவிற்கோ அல்லது சாபம் இடும் அளவிற்கோ சங்கீத வித்வான்கள் என்ன செய்தார்கள்?
LikeLike
நம் வித்வான்கள் என்ன அடாத செயலைச் செய்தார்கள், பாடப்படக்கூடாத யாரைப் பாடினர்கள், என்ன அபசாரம் செய்தார்கள் என்பது தெரியவில்லையே. கட்டுரையாளரும் சரி, மறுமொழி இட்டவரும் சரி, புரியும்படி எழுதவில்லையே. விளக்கினால் நன்றாக இருக்கும்.
LikeLike