சங்கப்பலகை வாசகர் வட்ட நிகழ்வாக இன்று ‘சங்கப்பலகை வாயிலாகச் சுயம் அறிதல்’ என்னும் தலைப்பில் உரையாற்றினேன். கடந்த ஒன்றரையாண்டுக் காலமாக சங்கப்பலகையில் நடைபெற்ற நிகழ்வுகள், உரையாற்றிய அறிஞர்கள், பேசப்பட்ட தலைப்புகள், அறிந்து கொண்ட செய்திகள், அறிஞர்களின் அறிவுத்திறன் கண்டு மலைத்து நின்ற நேரங்கள், பண்டைத் தமிழ் ஞானத்தில் திளைத்து இறுமாந்திருந்த பொழுதுகள் என்று பலதையும் பேசினேன். இதுவரை பேசிய அனைத்து அறிஞர்களின் காணொளிகளையும் சிறிது நேரம் ஓடவிட்டோம்.
இனி செய்யவேண்டியவை பற்றிய சிறு கலந்துரையாடலுடன் கூட்டம் நிறைவுபெற்றது.
