உ.நீ.ம.நீ அவர்களே, பின்வரும் சில வழக்குகளையும் சுவோ மோட்டோவாக எடுத்துத் தீர்ப்பு சொல்லுங்கள்.
1. பஞ்சகச்சம் அவிழாமல் கட்டிக்கொள்வதற்கு என்று ஆசாரமான விஞ்ஞான முறைகள் உடனடியாக ஏற்பட வேண்டும். ஜிப், வெல்க்ரோ முதலியன ஆசாரக் குறைவு. உடனடியாகக் கைத்தறி மந்திரிக்கு உத்தரவிடுங்கள்.
2. ஐய்யங்கார் மடிசாரில் இரட்டை மடிசார் முறை சமூக நீதிக்கு எதிரானது. அதென்ன தென்கலையார் மட்டும் ஸ்மார்த்தக் கட்டு கட்டுகிறார்கள்? ஸ்மார்த்தாளா தென்கலையா என்று தெரிந்துகொள்ள முடியாமல் மனித உரிமை பறிபோகிறது. உடனடியாக வைஷ்ணவர்கள் ஸ்மார்த்த மடிசார் கட்டு கட்டக் கூடாது என்று உத்தரவிடுங்கள்.
3. எந்தக் கோவிலிலும் புளியோதரை ஒரே மாதிரி இருப்பதில்லை. பெருமாள் ஒருவர், ப்ரும்மம் ஒன்று, ஆனால் புளியோரை மட்டும் வேறு வேறா? இந்த அடிப்படை உரிமைக் கேசில் நல்ல தீர்ப்பு வழங்கி முற்போக்கு என்று மார்தட்டிக்கொள்ள உங்களுக்கு வாய்ப்புள்ளது. விட்டுவிடாதீர்கள்.
4. கர்னாடகப் பாடகிகள் ‘ஸ’ என்பதை ‘ஷ’ என்று உச்சரிக்கிறார்கள். இதுவும் சங்கீத சமூக நீதிக்கு எதிராக உள்ளது. சங்கீதத்தில் சமபந்தி வேண்டாமா? நல்ல வழக்கு இல்லையா? எடுத்துத் தீர்ப்பு வழங்குங்கள்.
5. ஸ்மார்த்த கல்யாணங்களில் இலையில் முதலில் சாதம் போடுவதில்லை. வெறுமெனே வெஞ்சனம் தெளிக்கிறார்கள். சாதம் இல்லாமல் வெஞ்சனத்தையும், காய்கறியையும் என்ன செய்வது? பருப்பைத் தலையில் தேய்த்து கொள்ளலாமா? இது அடிப்படை உணவு உரிமைக்கு எதிரானது இல்லையா? பார்த்துச் செய்யுங்கள்.
6. தீபாவளி வந்துவிட்டால் பட்சணம் சாப்பிடு என்று எல்லார் வீட்டிலும் வேண்டுகிறார்கள். எல்லாரும் ஒரே கடையில் வாங்கி, சாப்பிடு, சாப்பிடு என்று உபசாரம் வேறு. பட்சண உரிமை மீறல் வழக்கில் தீர்ப்பு அளிக்க முடியுமா ஐயா? லேகியம் என்று ஒரு இம்சையைக் கிண்டி பிராணனை வாங்குகிறார்கள். கவனித்துக் கொள்ளூங்கள்.
7. பெண் பார்க்கப் போகும் போது பஜ்ஜி சொஜ்ஜி என்று எண்ணையில் முக்கியெடுக்காமல் ஒரு போளி, ரவாலாடு என்று பட்சணம் பண்ண வேண்டும் என்று உத்தரவிட முடியுமா பாருங்கள். பட்சண சம உரிமைச் சட்டம் என்ன சொல்கிறது?
8. தென்கலையார் மட்டும் ஒரு முறை சேவிப்பது என்பது என்ன சமூக நீதி? பிரும்மம் ஒன்று என்பதைக் குறிப்பது என்று வைத்துக் கொண்டால், வடகலையாரும் ஒரு முறை சேவித்தாலே போதும் என்றும் தீர்ப்பு சொல்லுங்கள். இன்னும் ரெண்டு தடவை சேவிடா என்று பெரியவர்கள் தொல்லை தாங்க முடியவில்லை. சேவிப்பு சம உரிமைச் சட்டம் என்ன சொல்கிறது ஐயா?
எட்டு வழக்குகள் மட்டும் என் தலைமுறைக்குப் போதும் ஐயா. எப்படியும் நீங்கள் தீர்ப்பு வழங்கிக் கிழிக்க என் பேரன் ரிடையர் ஆகிவிடுவான் (என் மகன் பள்ளியில் படிக்கிறான்). ஆக, இப்போதைக்கு 8 போதும்.
இந்த 2ஜி, அயோத்யா, சிலை திருட்டு, சிதம்பரம் + பிள்ளை பண மோசடி, டெலிபோனுக்காக ரோடு வெட்டிய வழக்கு – இதையெல்லாம் எப்போதாவது போரடித்தால் படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். தீர்ப்பெல்லாம் வழங்க வேண்டாம். பிதுரார்ஜித சொத்து மாதிரி பிதுரார்ஜித வழக்கு என்று இவை இருந்துவிட்டுப் போகட்டும்.
தங்களை நம்பியுள்ள
அசட்டு அம்மாஞ்சி ஆமருவி.
Supreme Court is inevitable considering today’s despot rule. Even god commit mistakes by creating communal,castiest,corrupt politicians.
LikeLike
Kali advancing
LikeLike
அப்படித்தான் தோன்றுகிறது
LikeLike
Pramaadham, among the best !Keep it up.
LikeLike
மிக்க நன்றி
LikeLike
Indian democracy is strange to understand because the majority has to pay for running the Government (more majority people, more tax) but all arms of this strange democracy is always against majority, right from enrolling in school, job, worship, rights etc. Very very unique to India.
LikeLike
வெல்க்ரோ ? what is the meaning
LikeLike
ஜிப் மாதிரி ஒரு வஸ்து. தற்போது காலணிகளில் உள்ளது.
LikeLiked by 1 person
Thanks sir
LikeLike