‘Hello, What is your name?’ மங்கலம் ததும்பும் அந்தக் குழந்தையைக் கேட்டேன்.
‘ஆர்யா—‘என்பது போல் பாடினாள். பெயரின் பின் பகுதி கேட்கவில்லை.குழந்தையின் மழலை(அ)எனக்கு வயதாகிவிட்டது என்று இட்டு நிரப்பிக்கொள்ளவும்.
‘என்ன?’என்று அவளது தந்தையைப் பார்த்தேன்.
‘அங்கிள்ட்ட பேர் சொல்லு’என்றார் அவர்.குழந்தைமெதுவாகச் சொன்னது.
அப்போது அது நடந்தது.உலகம் நின்று போனது.முதுகெலும்பில் ஒரு சிலிர்ப்பு.
மீண்டும் ஒருமுறைசொன்னாள் ‘ஆர்யாம்பா’.
பாரத தர்மத்தின் ஆறு தூண்களையும் கட்டமைத்து,அத்வைத தரிசனத்தைமுன்னெடுத்து,சனாதன தர்மத்தைக் காத்து வழிகாட்டிய ஆதி சங்கராச்சார்யரின் தாயாரின் பெயர் ஆர்யாம்பா.
ஒரு நிமிடம் அந்தக் குழந்தையின் முகத்தில் அத்வைத ஞானம் பெரும் ஊற்றாக வடிவதாக உணர்ந்தேன்.கண் கலங்கினேன் என்பது உண்மை.
‘யாரோட ஐடியா?’
‘இவ அம்மாவோடது’அவர் சொல்ல,அத்வைத ஞானத் தாயைக் காட்டிக்கொடுக்க இன்னொரு தாயால் தானேமுடியும்?என்பது உறைத்தது.
‘ஸ்கூல் போறயா?’என்றேன் வழக்கமான இந்திய அசட்டு ஆணாக.
‘சரஸ்வதி நிகேதன்’என்றது அந்தஞானத்தாய் வடிவின் வித்தான குழந்தை.அதிர்ச்சி+ஆனந்தம்.
சுதாரித்து,’என்ன படிக்கற?’என்றேன்.
‘K1’ என்றது மழலை.
பெயர் வசியம் என்பார்கள். நோக்கு வசியம் என்பார்கள்.இது ஞான வசியம்.
சீனத் தோட்டத்தில் அரவிந்தன் நீலகண்டனுடன் நடந்த கலந்துரையாடலுக்கு வந்திருந்த நண்பரின் குழந்தைஆர்யாம்பா.
அருகில் இருந்த குளத்தைக் காட்டி,’What lives in this?’ என்றது.
‘Dolphin’ என்றேன் குறும்பாய்.
‘Baby dolphin?’என்றாள் தேவதை.
‘Yes. Mother and baby.’
‘Will they come out?’ குழந்தை
‘Yes, sure. now the baby is sleeping. Once she wakes up, mom and baby will come out and you can play’என்றேன்.
கண்கள் விரிய,மலர்ந்த முகத்துடன் குளத்தையேபார்த்துக் கொண்டிருந்தாள்.’See, the baby dolphin woke up. She is bubbling, you see the bubbles over there?’
குழந்தைகள் ப்ரும்ம ஸ்வரூபம் அன்றி வேறேன்ன?
சிறிது நேரத்தில் அவள் உறங்கிப் போனாள்.
கலந்துரையாடல் முடிந்தவுடன் என்னிடம் வந்தக் குழந்தை’Dolphins?’ என்றாள் குளத்தைக் காட்டி.
‘Oh, they came looking for you. But you were asleep. Hence they went back home. Will come again in the evening,’ என்றேன் இரக்கமில்லாமல்.
‘OK, let me wait,’ என்றவளிடம்,’எங்க வீட்டுக்கு வரயா?’என்றேன்.
‘Why? Don’t you have a boy and girl at home?’மழலை.
‘I have boys. Don’t have a girl,’ என்றேன்.
‘OK. Then I will come,’ என்றவளிடம் சங்கரனின் தாய் ஆர்யாம்பாவைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
Nice write up. Children are wonderful creations of Almighty. They are known for their absolute guilelessness regardless of caste, creed, colour etc. Unlike elders, they are totally devoid of all 6 evils viz KAAMA KROTHA LOBHA MOHA MATHA MAASCHARYA. As pointed out by Sri Madavaachchaariar, playing with children is equivalent to worshipping God and He is more than pleased over his creations being well looked after.
LikeLike