இரு வாரங்களுக்கு முன் ஜடேரி என்னும் திருமண் கிராமத்தைப் பற்றி எழுதியிருந்தேன். பலர் உதவி செய்வது பற்றி எழுதியிருந்தார்கள். பண உதவி வேண்டாம், கிராம மக்களுக்கு ஆறுதல் சொல்லுங்கள் என்று பதில் அளித்திருந்தேன். பாரதி ஷாகாவிலும் பேசினேன்.
நண்பர் கேசவ ராமன் பேஸ்புக்கில் எழுதியிருந்தார். அதன் பலனாக இந்து மக்கள் கட்சியின் கார்யகர்த்தர்கள் அக்கிரமத்திற்குச் சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்துள்ளார்கள். ஸனாதன தர்மம் தழைக்க ஆவன செய்வதாகச் சூளுரைத்துள்ளார்கள். ராமாயண, பாரதக் கதைப் புத்தகங்கள், கீதை முதலிய நூல்கள் இவற்றை அளிக்க ஆவன செய்துவருகிறார்கள்.
இந்தப் பணியில் அடியேனது பங்கு எதுவும் இல்லை. எழுதியதும் பேசியதும் மட்டுமே அடியேன் செய்தவை. மேற்கொண்டு தெய்வம் நடத்திக் கொள்கிறது. ஜடேரி பற்றி முதலில் தெரிவித்த நண்பர் பாலாஜி மற்றும் மனோரம் தாஸ், இதற்காக முனைந்த நண்பர் ஜோதிகுமார், உதயகுமார், முன்னெடுத்துச் சென்ற கேசவராமன் மற்றும் களப்பணியாளர்கள் அனைவருக்கும் எனது தெண்டன் சமர்ப்பித்த நமஸ்காரங்கள்.
சொல்லும் வார்த்தையும், எழுதும் எழுத்தும் தர்ம ரக்ஷணத்திற்கானதாக மட்டுமே இருக்க வேண்டும் என்று எனக்கு உணர்த்தியது இந்த நிகழ்வு.
தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
Leave a comment