இஸ்லாமியப் பேராசிரியர் சம்ஸ்க்ருதம் கற்பிக்கலாமா?

#FerozeKhan #sanskrit #Islam #BHU

பேராசிரியர் மோனியர் வில்லியம்ஸ் சம்ஸ்க்ருதம்-ஆங்கிலம் அகராதி எழுதினார். இன்றும் அது ஒரு முன்னுதாரண நூலாக உள்ளது. 

பேராசிரியர் ஜூலியஸ் லிப்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஹிந்துமதம் மற்றும் உலக மதங்கள் பிரிவின் தலைவராக விளங்கினார். சம்ஸ்க்ருதத்தில் விற்பன்னர். ஶ்ரீபாஷ்ய காலக்ஷேபம் பண்ணினவர். ராமானுஜர் வழியாக இந்தியத் தத்துவம் பற்றிப் பலமுறைகள் பேசியுள்ளார். இவருடன் ஒருமுறை ஆழ்வார் பாசுரங்கள் குறித்து சிங்கப்பூரில் உரையாடியுள்ளேன். தமிழ் புரியும் ஆனால் பாசுரங்களைப் படிக்கும் ஆற்றல் இல்லை என்று வருத்தப்பட்டார்.

பேரா.ராப்ர்ட் லெஸ்டர் என்பார் ராமானுஜரே கதி என்று கிடந்தார். இராமானுஜரை இரண்டு விஷயங்களுக்காகப் பயின்றேன் – 1. அவர் ஶ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தைத் தனது தத்துவத்தின் மூலமாக வளர்த்ததெப்படி என்று அறிந்துகொள்வதற்காக. 2. அவரது தத்துவம், கைங்கர்யங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த விதம் மூலமாக யோகம் குறித்து அறிந்துகொள்வதற்காக என்கிறார். Ramanuja on the Yoga என்றொரு நூல் இயற்றியுள்ளார். 

பேராசிரியர் ஃபிரான்ஸிஸ் சேவியர் க்ளூனி என்பார் ரோமன் கத்தோலிக்கப் பாதிரியார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இறையியல் துறைப் பேராசிரியர். தமிழிலும் சம்ஸ்க்ருதத்திலும் விற்பன்னர். ராமானுஜ சம்பிரதாயம் பற்றி நெகிழ்வுடன் பேசுகிறார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இவரின் தலைமையில் ஶ்ரீமத் ராமானுஜர் பற்றி ஒருமுறை உரையாற்றினேன். ‘நான் கல்வியால் விசிட்டாத்வைதத்தை அறிந்துள்ளேன். ஆனால், நீங்கள் எல்லாரும் பிறவியிலேயே ஶ்ரீவைஷ்ணவர்கள், பாக்கியவான்கள்’ என்று அன்றைய தினம் பேசினார் அப்பேராசிரியர்.

இவர்களாலெல்லாம் சம்ஸ்க்ருத்மோ, அம்மொழி கற்பிக்கும் சம்பிரதாயங்களோ அழிந்துவிடவில்லை. 

தமிழகத்தில் நீதியரசர் மு.மு.இஸ்மாயில் போன்ற கம்பராமாயண ஆய்வாளர் தற்போது இல்லை. அவர் ஆய்வு செய்ததால் கம்பராமாயணம் காணாமல் போகவில்லை.

பேராசிரியர் ஃபெரோஸ் கான் சம்ஸ்க்ருதம் கற்பித்தால் குடிமுழுகிவிடாது. அவர் குடமுழுக்கோ, சம்ப்ரோக்ஷணமோ பண்ணிவைக்கப் போவதில்லை. மொழிப்பாடம் நடத்தப் போகிறார். அவ்வளவுதான்.

நமது சம்பிரதாயத்தை நித்யானந்தாக்களிடம் இருந்து காக்க வேண்டுமே தவிர ஃபெரோஸ் கான்களிடம் இருந்து அல்ல.

#FerozeKhan #IT-BHU

Author: Amaruvi's Aphorisms

Banker by day, blogger by night and a reader throughout.

4 thoughts on “இஸ்லாமியப் பேராசிரியர் சம்ஸ்க்ருதம் கற்பிக்கலாமா?”

 1. Well said Mr Amaruvi. In fact I had on a couple of occasions interacted with Dr Francis Clooney and his knowledge of our Aazhwaars and Aachchaaryans is amazing. Mr Firoz Khan must be welcome with a sense of pride like we celebrate the great celebrity APJ Abdul Kalam. All embracing attitude is the very forte of our Sanatana Dharma.

  Like

 2. ஆமருவி தேவநாதன் ஜி நல்ல அறிஞர். பிரபல புத்தகங்கள் குறித்து அவர் சுருக்கமான விமர்சனங்கள் எழுதி வருகிறார். சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என எண்ணுபவர் என்பதே என் எண்ணம். அதிகார பீடங்களை, பிரபலஸ்த்தர்களைப் பகைத்துக் கொள்ள விரும்பாதவர். நியோ-ஆர்.எஸ்.எஸ்ஸுக்குப் பிடித்தது போல எழுதிவருபவர். தவறு இல்லை. தேசப் பற்று, பொருளாதாரம், தேசப் பாதுகாப்புப் போன்ற விஷயங்கள் பற்றி எழுதுவது நல்லதே.

  ஆனால், நியோ-ஆர்.எஸ்.எஸ். செய்யும் அயோக்கியத்தனங்களையும் நியாயப்படுத்த வேண்டுமா ?

  பனாரஸ் ஹிந்துப் பல்கலைக் கழகம் குறித்த ஆமருவி தேவநாதன் ஜியின் இந்தப் பதிவும் அத்தகையதே. பனாரஸ் ஹிந்துப் பல்கலைக் கழகத்தில் டாக். ஃபிரோஸ் க்ஹான் ஜி எனும் முகமதிய அறிஞர், நியோ-ஆர்.எஸ்.எஸ். தூண்டுதலால் “நியமிக்கப்பட்டு” உள்ளார். ஆமருவி தேவநாதன் ஜி ஒரு ஸம்ஸ்கிருத அறிஞரை நியமிப்பதை எதிர்க்கக் கூடாது என்கிறார். எதிர்பார்த்ததுதான். துரதிர்ஷ்டம்தான். ஆனால், எதிர்பார்த்ததுதான்.

  டாக். ஃபிரோஸ் க்ஹான் ஜியை ஒரு ஸம்ஸ்கிருத ஆசிரியராக வரவேற்பதில் ப.ஹி.ப.வைச் சேர்ந்த மாணவர்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால், ஆமருவி தேவநாதன் ஜியின் இந்தப் பதிவோ அவரை ஸம்ஸ்க்ருத ஆசிரியராக நியமிப்பதில் பிரச்சினை செய்கிறார்கள் என்கிறது. இது ஆட்டுக் கறியை ஹல்வாக்குள் மறைக்கும் விஷமமாக, அபவாதமாக அன்றோ இருக்கிறது !

  நியோ-ஆர்.எஸ்.எஸின் நற்பெயரைக் காத்து நற்பெயர்ப் பெறுவதில் தவறேதும் இல்லை. அதற்காக, ஹிந்துத்வ தர்மத்திற்காக பண்டித மதன் மோஹன் மாளவியா எனும் ஒரு மாபெரும் தியாகியின் நோக்கத்தை அழிக்கும்விதமாகவா பிரச்சாரம் செய்வது ? 😦

  பனாரஸ் ஹிந்துப் பல்கலைக் கழகத்தில் ஒரு முகமதிய ஸம்ஸ்கிருதப் பேராசிரியரை நியமிப்பதில் எந்தத் தடையும் இல்லை. எதிர்ப்பும் இல்லை. இதுவே உண்மை.

  அவர் ஸம்ஸ்க்ருதத் துறையிலோ, ஏன் தத்துவத் துறையிலோகூடப் பணியாற்ற அந்தப் பல்கலைக் கழக விதிகள் எந்தத் தடையும் விதிக்கவில்லை. போராட்டம் நடத்தும் மாணவர்களும் இதனை ஒவ்வொரு முறையும் தெளிவு படுத்துகிறார்கள்.

  பனாரஸ் ஹிந்துப் பல்கலைக் கழகத்தில், வேதங்களைச் சொல்லித் தரும் ஒரு துறை உள்ளது. கர்ம காண்டங்கள் எனும் சடங்குகள் பற்றிய பாடங்களையும் உள்ளடக்கிய ஒரு துறை அது. அந்தத் துறையில் அந்தச் சடங்குகளைச் செய்யும், அதே சமயம் சொல்லித் தரும் வைதீக விஷயங்களில் தேர்ச்சியும், தகுதியும் உள்ள ஒரு வைதீகருக்கு மட்டுமே பேராசிரியராகப் பணி செய்யும் தகுதி உண்டு என அப்பல்கலைக் கழகத்துக்கான விதிகளைச் செய்த மதன் மோஹன் மாளவியா ஜியும், அவர் நாடிய ஹிந்து சனாதன மஹாசபையும் முடிவு செய்துள்ளது வரலாறு.

  இந்த விதியை மதன் மோஹன் மாளவியா ஜியே ஒரு கல்லில் எழுதி அந்த அறிவிப்பை அந்தப் பல்கலைக் கழகத்தில் அந்தத் துறையின் வாசலிலேயே வைத்துள்ளார். பிற்காலத்தில் ஹிந்து விரோதிகள் வைதீக விதிகளை அழித்துப் பல்கலைக் கழகத்தின் நோக்கத்தைச் சிதைத்து விடக் கூடாது என்று அவர் அப்போதே யாரும் மாற்றிவிட முடியாதபடி கல்லில் வடித்து உள்ளார்.

  இந்தத் துறைக்கான தனிப்பட்ட இந்த விதியானது, அந்தப் பல்கலைக் கழகம் வெளியிட்ட பண்டித மதன் மோஹன் மாளவியா ஜியின் அதிகாரபூர்வ வாழ்க்கை வரலாற்று நூலின் முதல் பாகத்தில் தெளிவாகவே குறிப்பிடப்பட்டும் உள்ளது.

  இந்தத் துறையில் பாரம்பரிய முறையான காதால் கேட்டு-வாயால் உரைத்துக் கற்கும் வழி பின்பற்றப்படுகிறது. எழுத்து வடிவிலான தேர்வும் உண்டு. இது வைதீக முறை. வேறெந்த நவீனப் பல்கலைக் கழகத்திலும் இல்லாத மாறுபட்டக் கல்வி முறை. இது உலகோர் அனைவரும் அறிந்த விஷயமே.

  இதற்குப் பின்பும், ஏன் உண்மையை மறைத்து, பொய்யினை எழுத வேண்டும் ? பரப்ப வேண்டும் ?

  ஏனெனில், நியோ-ஆர்.எஸ்.எஸ். எனும் சக்தி வாய்ந்த அமைப்பு ஹிந்து மரபுகளைக் கோயில்களிலும், ஹிந்து நிறுவனங்களிலும் அழித்து வருகிறது. மரபு ஒழிந்த இடங்களில் மேற்கத்தியக் கார்ப்பரேட்டிஸ வடிவில் சம்பளத்துக்கு வேலை பார்ப்பவர்களை வைத்துச் சடங்குகளையோ, பாடங்களையோ நடத்த ஏற்பாடு செய்துவருகிறது. சம்பளத்துக்கு வேலை பார்ப்பவர் ஐயராக இருந்தால் என்ன, அஹமதியாக இருந்தால் என்ன என்கிறக் கார்ப்பரேட்டிஸ மனப்பான்மையையே நியோ-ஆர்.எஸ்.எஸ். இவ்விஷயத்தில் காட்டுகிறது.

  சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவில், சிக்னாப்பூரில் உள்ள சனீஸ்வரர் கோவில், பூரி ஜகன்னாதர் கோவில்களை நியோ-ஆர்.எஸ்.எஸை ஆட்டி வைக்கும் பாஜக அழித்து வருகிறது. இப்போது அந்த அழிப்பை ஹிந்து மரபினைக் காக்கக் கட்டப்பட்டிருக்கும் ஒரே ஒரு பல்கலைக் கழகமான பனாரஸ் ஹிந்துப் பல்கலையிலும் அது தொடர்கிறது.

  தங்களின், தங்கள் முன்னோர்களின் மரபினைக் காக்கக் குரல் கொடுக்க வேண்டிய ஆமருவி தேவநாதன் ஜி போன்ற பெரியவர்கள், இந்த அழிவிற்காகப் பொய்ப் பிரச்சாரம் செய்வது வேதனையும், வருத்தத்தையும் தருகின்றது.

  இங்கனம் ஹிந்துச் சடங்குகள் மற்றும் நம்பிக்கைகள் சார்ந்த விஷயங்களிலும், அவற்றில் பயிற்சியோ, விழைவோ, நம்பிக்கையோ, வாழ்தலோ இல்லாத முகமதியரை நியமிக்காவிட்டால், தேசியம் எனும் மைய நீரோட்டத்தில் முகமதியர்கள் கலக்க மாட்டார்கள் என்று பூச்சாண்டி காட்டுகிறார்கள் மற்ற நியோ-ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்.

  பனாரஸ் ஹிந்துப் பல்கலைக் கழகம் நிறுவும் காலத்தில் இத்தகையை வைதீக வழியில் கல்வி கற்றுத் தருவதையும், மாணவர்களுக்கு ஹிந்து மத போதனைகளைச் செய்வைதையும், மரபார்ந்த ஹிந்துக்கள் மட்டுமே இந்தத் துறையில் பணியாற்ற வேண்டும் – என்பது போன்ற நோக்கங்களை அக்காலத்தில் முற்றிலும் ஆதரித்தவர்கள் யார் தெரியுமா ?

  முகமதியர்களே !

  ஆங்கிலேயரின் கார்ப்பரேட்டிஸக் கல்வி முறைக்கு எதிராக முகமதியரும், ஹிந்துக்களும் ஒன்றுகூடி ஆரம்பித்தவைதான் அலிகார் முகமதியப் பல்கலைக் கழகமும், பனாரஸ் ஹிந்துப் பல்கலைக் கழகமும்.

  ஹிந்துக்கள் ஹிந்து மரபுகளைக் காப்பதில் முகமதியர்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. முகமதியர் முகமதியராக இருப்பதில் இந்துத்துவர்களுக்களுக்கும் எந்த எதிர்ப்பும் இல்லை.

  அவரவர் எல்லைக்குள் இருக்கும்வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்த எல்லைகளை அழித்து, எல்லையற்றை அதிகாரத்தைக் கைப்பற்ற நடக்கும் விஷயமே இந்த முகமதியப் பேராசிரியரை வைத்து ஹிந்துத்வத்தை இந்துக்களுக்குச் சொல்லித் தரச் செய்யும், திணிக்கப்படும் அழிப்பும்.

  இவர்கள் இருவர் இடையேயும் சண்டை உண்டாக்கி, ஒருவரைப் பற்றி இன்னொருவர் பயங்க் கொள்ள வைத்து, சண்டையில் விழும் ரத்தத்தை அருந்தும் நரியாக இருப்பது கார்ப்பரேட்டுகளே.

  இதுவே இந்திய வரலாறு சொல்வது.

  என்ன ?

  இந்திய வரலாற்றுக்கும் கார்ப்பரேட்டிஸம் எனும் விஷயத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று தோன்றுகிறதா ?

  இந்தக் கார்ப்பரேட்டிஸம் என்பது தற்காலத்தில் பேசப்படும் பூதமே என்கிறீர்களா ?

  ஐயா, என் அம்மா, நான் இப்போது சொல்லும் இந்த விஷயத்தைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

  இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்டது வரலாறு. அப்படி இந்தியாவை ஆண்ட “கிழக்கிந்தியக் கும்பனி” என்பதே ஒரு கார்ப்பரேட்தான். இதனை யாரும் மறுக்க முடியாது. உலகில் முதன் முதலில் ஷேர் மார்க்கட்டை ஆரம்பித்ததும் இந்தக் கிழக்கிந்தியக் கம்பனி எனும் கார்ப்பரேட்தான். அந்தக் கார்ப்பரேட்டிஸத்தின் நீட்சிதான் உலகெங்கும் உள்ள பார்லிமெண்ட் அமைப்புகளும், அரசுகளும். இதற்கு மாறான எந்த அரசியல் அமைப்பையும் கார்ப்பரேட்டிஸம் அழித்துவருகிறது. மரபான, ஜனநாயக அமைப்புகளே இந்த அழிவுகளால் பெரிதும் பாதிக்கப்படுபவை.

  பாரம்பரிய ஆதீனங்களும், பீடங்களும், மடங்களும் வாய்மூடி மௌனியாக இந்த அழிப்புகளைப் பற்றி எதுவும் பேச முடியாமல் இருக்கின்றனர். அவர்களைப் போல மௌனியாக, தெய்வம் என்றாவது எவர்மூலமாவது காப்பாற்றிவிடாதா என்று இருப்பது, இந்த அழிப்பிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வதைவிட உயர்ந்தது. நேர்மையானது.

  தர்மத்தின் பக்கம் இருந்தால்தான் தர்மம் காப்பாற்றும்.

  பெருமாளே, எங்களுக்கு நல்ல புத்தியையும் பலத்தையும் கொடு.

  பின்குறிப்பு: இந்தக் கருத்து ஆமருவி தேவநாதன் ஜியின் ப்ளாகில் கமெண்டாகப் போடப் பட்டது. இதனை அவர் நீக்கிவிடமாட்டார் என நம்புகிறேன்.

  Like

 3. I beg to differ.

  The students are on firm ground in opposing the appointment of Dr. Khan. RSS has made a grave mistake in supporting the appointment. The legality of appointment ( by taking advantage of the deceitful amendment to the BHU Act in 1966 ) does not mean it is ethical and moral. The Mahamana of BHU clearly foresaw this type of interference and had clearly laid down that only a practicing Hindu can teach at SVDV. HE however is free to learn and teach at the sanskrit literature department.

  You are confusing and obsfuscating the issue involved. RSS is clearly wrong in opposing the student’s protests and supporting the appointment of Dr.Khan.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: