ஆழ்வார் காத்திருந்தார்

எங்கள் ஆழ்வார் சொன்னார் :
“உண்ணும் சோறு பருகு நீர்
தின்னும் வெற்றிலை
எல்லாம் கண்ணன்”
எம்மை ஆள்வார் சொன்னார் :
“உண்ணும் சோறு பருகு நீர்
தின்னும் மாத்திரை
எல்லாம் ஊழல் ”
எனவே நாங்கள்
எம்மை ஆள்வாரையே
எங்கள் ஆழ்வாராய்
சிலை பல வைத்து
சிதைந்து போனோம் !
சிதைந்து போன பின்
ஆழ்வாரை காண
பெரிய கோவில் சென்றோம்
ஆள்வார் வரவு வேண்டி
ஆழ்வார் காத்திருந்தார்
திரைக்குப் பின்னால்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s