இரண்டு மாதங்களாக பரீட்சார்த்தமாக ‘செய்தி உபவாசம்’ (News Fast) இருந்து வருகிறேன். எந்த நாளிதழையும் (குறிப்பாக இந்திய) படிப்பதில்லை என்னும் விரதம். அவ்வப்போது ‘ஸ்வராஜ்யா’, எப்போதாவது ஜெயமோகன் தளம் உண்டு. (டிவி விரதம் 2 ஆண்டுகளாக).
கற்றுக்கொண்டவை :
- குடி முழுகிவிடவில்லை.
- காலையில் வயிற்றில் அமிலச் சுரப்பு குறைந்துள்ளது, அல்லது இல்லவே இல்லை.
- நூல்கள் படிப்பது அதிகரித்துள்ளது. ( வாரம் 2 லிருந்து இப்போது 3 )
- சிந்தனைத் தெளிவு அதிகரித்துள்ளது.
- தேவையான செய்தி எப்படியும் வந்து சேர்க்கிறது.
- மனைவியிடம் நல்ல பெயர் (அ) குறைவான அர்ச்சனை.
உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் செய்ய வேண்டியவை:
1. டி.வி.யை எப்போதும் அணைத்தே வையுங்கள்.
2. முடிந்தால் விற்றுவிடுங்கள். (அ) கணினியின் திரையாகப் பயன்படுத்தலாம்.
3. செல்பேசியை ஒதுக்கி வையுங்கள், கட்டிக்கொண்டு அழ வேண்டாம்.
4. கணினியில் செய்தித் தளங்களை ‘பிளாக்’ பண்ணிவிடலாம்.
5. கணினியில் விளம்பரத் தடுப்பான்கள் (Ad blockers).
டி.வி. / கணினி / செல்பேசி வழி செய்தி பார்க்காவிட்டால், வேறு என்னதான் செய்வது?
1. நிறைய படிக்கலாம்.
என் சரித்திரம், விவேக சூடாமணி, அருகர்களின் பாதை, அறம், சார்த்தா, திரை…
2. யூடியூபில் பார்க்க / கேட்க:
ஸ்டீவன் பிங்கர், ரிச்சர்ட் டாக்கின்ஸ், கார்ல் சாகன், வேளுக்குடி, சிருங்கேரி சன்னிதானம்.
1,2 முடிந்த பின் ஓவென்று அழுகை வந்து, இவ்வளவு நாட்கள் என்ன செய்தோம் என்னும் எண்ணம் வந்தால் நீங்கள் சரியான வழியில் செல்கிறீர்கள் என்று பொருள்.
பி.கு.: இவை என்னளவில் பலனளித்துள்ளன. தமிழ் சினிமா என்னும் லாகிரி வஸ்துவும் விலக்கப்பட வேண்டியதில் அடக்கம் என்பது நான் சொல்ல வேண்டியதில்லை.
ஜெயமோகனையும் தவிர்த்து இருந்தால், சிறிது அதிக நேரமும் கிடைக்கும். எரிச்சல்/குழப்பம் இருக்காது.
LikeLike
I am also thinking of not reading newspapers. On certain occasions when I could not read any newspaper I did not experience any difference. I see Pothigai news headlines only
LikeLike
Welcome to the club sir
LikeLike