The side that is not spoken about, generally.

இரண்டு மாதங்களாக பரீட்சார்த்தமாக ‘செய்தி உபவாசம்’ (News Fast) இருந்து வருகிறேன். எந்த நாளிதழையும் (குறிப்பாக இந்திய) படிப்பதில்லை என்னும் விரதம். அவ்வப்போது ‘ஸ்வராஜ்யா’, எப்போதாவது ஜெயமோகன் தளம் உண்டு.  (டிவி விரதம் 2 ஆண்டுகளாக).

கற்றுக்கொண்டவை :

  1. குடி முழுகிவிடவில்லை.
  2. காலையில் வயிற்றில் அமிலச் சுரப்பு குறைந்துள்ளது, அல்லது இல்லவே இல்லை.
  3. நூல்கள் படிப்பது அதிகரித்துள்ளது. ( வாரம் 2 லிருந்து இப்போது 3 )
  4. சிந்தனைத் தெளிவு அதிகரித்துள்ளது.
  5. தேவையான செய்தி எப்படியும் வந்து சேர்க்கிறது.
  6. மனைவியிடம் நல்ல பெயர் (அ) குறைவான அர்ச்சனை.

உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் செய்ய வேண்டியவை:NOTV

1. டி.வி.யை எப்போதும் அணைத்தே வையுங்கள்.
2. முடிந்தால் விற்றுவிடுங்கள். (அ) கணினியின் திரையாகப் பயன்படுத்தலாம்.
3. செல்பேசியை ஒதுக்கி வையுங்கள், கட்டிக்கொண்டு அழ வேண்டாம்.
4. கணினியில் செய்தித் தளங்களை ‘பிளாக்’ பண்ணிவிடலாம்.
5. கணினியில் விளம்பரத் தடுப்பான்கள் (Ad blockers).

டி.வி. / கணினி / செல்பேசி வழி செய்தி பார்க்காவிட்டால், வேறு என்னதான் செய்வது?

1. நிறைய படிக்கலாம்.
என் சரித்திரம், விவேக சூடாமணி, அருகர்களின் பாதை, அறம், சார்த்தா, திரை…

2. யூடியூபில் பார்க்க / கேட்க:
ஸ்டீவன் பிங்கர், ரிச்சர்ட் டாக்கின்ஸ், கார்ல் சாகன், வேளுக்குடி, சிருங்கேரி சன்னிதானம்.

1,2 முடிந்த பின் ஓவென்று அழுகை வந்து, இவ்வளவு நாட்கள் என்ன செய்தோம் என்னும் எண்ணம் வந்தால் நீங்கள் சரியான வழியில் செல்கிறீர்கள் என்று பொருள்.

பி.கு.: இவை என்னளவில் பலனளித்துள்ளன. தமிழ் சினிமா என்னும் லாகிரி வஸ்துவும் விலக்கப்பட வேண்டியதில் அடக்கம் என்பது நான் சொல்ல வேண்டியதில்லை.

3 responses

  1. nparamasivam1951 Avatar
    nparamasivam1951

    ஜெயமோகனையும் தவிர்த்து இருந்தால், சிறிது அதிக நேரமும் கிடைக்கும். எரிச்சல்/குழப்பம் இருக்காது.

    Like

  2. Ramakrishnan Nagarajan Avatar
    Ramakrishnan Nagarajan

    I am also thinking of not reading newspapers. On certain occasions when I could not read any newspaper I did not experience any difference. I see Pothigai news headlines only

    Like

    1. Amaruvi Devanathan Avatar

      Welcome to the club sir

      Like

Leave a reply to nparamasivam1951 Cancel reply