
சமீபத்தில் சம்ப்ரோக்ஷணம் நடைபெற்ற ஶ்ரீநிவாச பெருமாள் கோவில் இரவில் ஜொலிக்கிறது. கண்கள் கூசும் ஒளி அலங்காரங்கள் ஏதும் இல்லாமல் சாதாரண ஒளியூட்டலில், பெரும் மழையில் நனைந்து பளீரென உயர்ந்து நிற்கும் கோவில் சிங்கப்பூர் சிராங்கூன் சாலையில் ‘ஓங்கி உலகளந்த உத்தமன்’ பேர் பாடி நிற்கிறது.
சிங்கப்பூருக்கு வரும் இந்தியர் அவசியம் பார்க்க வேண்டிய இடம்.